PayTM செயலி மூலம் புதிய எஸ்.ஆர் 125 ஸ்கூட்டரை முன்பதிவு செய்ய அப்ரிலியா நிறுவனம் ஏற்பாடு..!!
PayTM செயலி மூலம் புதிய எஸ்.ஆர் 125 ஸ்கூட்டரை முன்பதிவு செய்ய அப்ரிலியா நிறுவனம் ஏற்பாடு..!!
2018 ஆட்டோ எக்ஸ்போவில் அப்ரிலியா நிறுவனம் ரூ. 65,310 எக்ஸ்-ஷோரூம் பூனே விலையில் புதிய எஸ்.ஆர் 125 மாடல் ஸ்கூட்டரை விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

125சிசி செக்மென்ட் இந்தியாவில் வளர்ச்சி பெற்று வரும் நிலையில் அப்ரிலியாவின் எஸ்.ஆர் 125 ஸ்கூட்டர் டிவிஎஸ் என்டார்க் மற்றும் ஹோண்டா கிராஸியா ஸ்கூட்டர்களுக்கு போட்டி மாடலாக வெளிவந்துள்ளது.

இந்தியாவில் எதிர்பார்ப்பிற்கு ஏற்றவாறே எஸ்.ஆர் 125 ஸ்கூட்டரை பலரும் முன்பதிவு செய்து வருகின்றனர். இந்த ஸ்கூட்டருக்கான முன்பதிவு எண்ணிக்கை தொடர்ந்து ஏறுமுகமாகவே உள்ளது.

தற்போது இதனுடைய விற்பனையை இன்னும் துரிதப்படுத்த அப்ரிலியா நிறுவனம் எஸ்.ஆர் 125 ஸ்கூட்டரை கைப்பேசி செயலியான பே டிஎம் மூலம் முன்பதிவு செய்துக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.

இந்த செயலியை பயன்படுத்தி எஸ்.ஆர் 125 ஸ்கூட்டரை புக் செய்பவர்களுக்கு ரூ.5000 கேஷ்பேக் ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது.
www.apriliasr.in என்ற இணையதளத்தில் இதற்கான அனைத்து செயல்பாடுகளையும் பதிவு செய்யலாம் என சொல்லப்பட்டுள்ளது.
Recommended Video


இந்த இணையத்தில் அப்ரிலியா எஸ்.ஆர் 125 ஸ்கூட்டர் பதிவு செய்பவர்கள் பெயர், தொலைப்பேசி எண், மின்னஞ்சல், முகவரி உள்ளிட்ட தகவல்களை கொடுக்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது.

எஸ்.ஆர் 150 ஸ்கூட்டரின் வரவிற்கு பிறகு இந்தியாவில் அப்ரிலியா எஸ்.ஆர் 125 ஸ்கூட்டர் இந்திய சந்தையில் களமிறக்கப்பட்டுள்ளது.
சிறிய எஞ்சின் மற்றும் குறைந்த விலையில் வந்துள்ள இந்த ஸ்கூட்டர் வாடிக்கையாளர்களை பெரியளவில் ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

124சிசி சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்டு எஞ்சின் பெற்றுள்ள இந்த ஸ்கூட்டர் அதிகப்பட்சமாக 9.4 பிஎச்பி பவர் மற்றும் 8.2 என்.எம் டார்க் திறனை வழங்கும்.
தொடர்ந்து எஞ்சினில் சரியான செயல்பாட்டிற்கான எஸ்.ஆர் 125 ஸ்கூட்டர் சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேவையை பெற்றுள்ளது.

முன் சக்கரத்தில் 220மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் பின் சக்கரத்தில் 140மிமீ டிரம் பிரேக் பெற்றுள்ள இந்த ஸ்கூட்டர், டெலஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் சிங்கிள் மோனோஷாக் ஆகிய சஸ்பென்ஷன் தேவைகளை கொண்டுள்ளது.

7 லிட்டர் எரிவாயு கொள்ளவு திறன் கொண்டுள்ள இந்த ஸ்கூட்டர் மொத்தமாக 122 கிலோ எடை கொண்டுள்ளது.

125சிசி செக்மென்டில் புதிய வரவாக வந்துள்ள எஸ்.ஆர். 125 ஸ்கூட்டர், பல்வேறு டிஜிட்டல் விதமான மேம்பாட்டு பணிகளை பெற்றுள்ளது. பளீர் வண்ண நிறங்கள் இதற்கான தோற்றப்பொலிவை கூட்டுகின்றன.

14 இஞ்ச் சக்கரங்களை புதியதாக பெற்றுள்ள இந்த ஸ்கூட்டர், திடமான கட்டமைப்பின் மூலம் இளம் தலைமுறை வாடிக்கையாளர்களை பெரிதும் கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








