ரூ. 65,310 விலையில் விற்பனைக்கு வந்துள்ள அப்ரிலியா எஸ்.ஆர் 125 ஸ்கூட்டரின் டாப் சிறப்பம்சங்கள் இதுதா

ரூ. 65,310 விலையில் விற்பனைக்கு வந்துள்ள அப்ரிலியா எஸ்.ஆர் 125 ஸ்கூட்டரின் டாப் சிறப்பம்சங்கள் இதுதான்..!!

By Azhagar

இந்தியாவில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஆட்டோ எக்ஸ்போவில் புதிய அப்ரிலியா எஸ். ஆர். 125 ஸ்கூட்டர் ரூ. 65,310 (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) விலையில் விற்பனைக்கு அறிமுகமானது.

அப்ரிலியா எஸ்.ஆர் 125 ஸ்கூட்டரின் டாப் சிறப்பம்சங்கள்

14வது டெல்லி ஆட்டோ எக்ஸ்போ கடந்த 7ம் தேதி தொடங்கி கோலாகலமாக நிறைவடைந்தது. சர்வதேசளவில் பல்வேறு வாகன நிறுவனங்கள் தங்களது புதிய தயாரிப்புகளை இந்த நிகழ்வில் காட்சிப்படுத்தின.

அப்ரிலியா எஸ்.ஆர் 125 ஸ்கூட்டரின் டாப் சிறப்பம்சங்கள்

அதன்படி மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் அப்ரிலியா புதிய எஸ்.ஆர் 125 ஸ்கூட்டரை விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

அவற்றுடன் எஸ்.ஆர் 150, டூனோ 150 மற்றும் அப்ரிலியா ஸ்ட்ராம் 125 ஆகிய இருசக்கர வாகனங்களை அப்ரிலியா காட்சிப்படுத்தி இருந்தது.

அப்ரிலியா எஸ்.ஆர் 125 ஸ்கூட்டரின் டாப் சிறப்பம்சங்கள்

விற்பனைக்கு அறிமுகமான எஸ்.ஆர் 125 ஸ்கூட்டர் மாடல், பார்ப்பதற்கு அப்படியே எஸ்.ஆர் 150 போலவே காட்சியளிக்கிறது. இருந்தாலும் இதிலுள்ள அம்சங்கள் பெரியளவில் கவனமீர்க்கிறது.

அப்ரிலியா எஸ்.ஆர் 125 ஸ்கூட்டரின் டாப் சிறப்பம்சங்கள்

எஸ்.ஆர் 125 ஸ்கூட்டரின் முகப்பு விளக்குகள் டூயல் பேரல் விளக்கு அமைப்பை பெற்றுள்ளது, இன்டிகேட்டர் பெற்ற ஹேண்டில் பார் மற்றும் எஸ்.ஆர். மாடலை குறிப்பிடும் கிராஃபிக்ஸ் பணிகள் இடம்பெற்றுள்ளன.

அப்ரிலியா எஸ்.ஆர் 125 ஸ்கூட்டரின் டாப் சிறப்பம்சங்கள்

முழுவதும் கருப்பு அல்லது கருப்பு + சிவப்பு நிறங்களிலான இருக்கை அமைப்பு, வித்தியாசமான பின் இருக்கை பிடிமான கம்பி, எல்.இ.டி பெற்ற டெயில் விளக்குகள் இதனுடைய முக்கிய அம்சங்களாக உள்ளன.

அப்ரிலியா எஸ்.ஆர் 125 ஸ்கூட்டரின் டாப் சிறப்பம்சங்கள்

உயர்தரமான ரைடிங் திறனை வழங்கும் விதமாக அப்ரிலியா எஸ்.ஆர் 125 ஸ்கூட்டர் உள்ளது. இருக்கை பார்ப்பதற்கு சொசுசாக இல்லை என்றாலும், அது ஸ்கூட்டருக்கு ஸ்போர்டிங் அம்சத்தை தருகிறது.

அப்ரிலியா எஸ்.ஆர் 125 ஸ்கூட்டரின் டாப் சிறப்பம்சங்கள்

ஸ்போர்டி திறன் பெற்ற ஸ்கூட்டர் என்பதால், எஸ்.ஆர் 125 ஸ்கூட்டரின் முன்பக்க சக்கரத்தில் 220 மிமீ டிஸ்க் பிரேக் உள்ளது. இதனுடைய சக்கரங்கள் 14 இஞ்ச் அளவில் உள்ளது.

அப்ரிலியா எஸ்.ஆர் 125 ஸ்கூட்டரின் டாப் சிறப்பம்சங்கள்

அப்ரிலியா எஸ்.ஆர் 125 ஸ்கூட்டர், எஸ்.ஆர் 150 மாடலை பின்பற்றி உருவாக்கப்பட்டுள்ளது. அதே அனலாக் யூனிட், ஹோண்டா கிராஸியா மற்றும் டிவிஎஸ் என் டார்க் 125 மாடலுக்கு போட்டி தரும் அம்சங்கள் கூடுதலாக இதில் உள்ளது.

அப்ரிலியா எஸ்.ஆர் 125 ஸ்கூட்டரின் டாப் சிறப்பம்சங்கள்

அப்ரிலியாவின் எஸ் சிரீஸில் எஸ்.ஆர் 150, எஸ்.ஆர் 125 மற்றும் ஸ்ட்ராம் 125 ஸ்கூட்டர்களில் நிலையான அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளதால், இதற்கு நிலையான விற்பனை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அப்ரிலியா எஸ்.ஆர் 125 ஸ்கூட்டரின் டாப் சிறப்பம்சங்கள்

மோட்டார் சைக்கிள் விரும்பாதவர்களுக்கு அப்ரிலியா எஸ்.ஆர் 125 நிச்சயம் திருப்திகரமான மாற்றாக இருக்கும். மேலும் இது இளைஞர்களை கவரும் விதத்தில் தயாராகியுள்ளது.

Most Read Articles
மேலும்... #அப்ரிலியா #aprilia
English summary
Read in Tamil: Aprilia SR 125 Top Features You Should Know: New 125cc Engine, 14-Inch Alloys, Disc Brake & More...
Story first published: Monday, February 19, 2018, 13:17 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X