டியூக், டோமினாருக்கு போட்டியாக களமிறங்கும் சென்னை பசங்க தயாரித்த எலக்ட்ரிக் பைக்!

பஜாஜ் டோமினார், கேடிஎம் டியூக் 250 பைக்குகளுக்கு சவால் விடும் வகையிலான எலக்ட்ரிக் பைக் குறித்த அறிவிப்பை ஏத்தர் எனர்ஜி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதனால் எலக்ட்ரிக் பைக் ஆர்வலர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

By Arun

பஜாஜ் டோமினார், கேடிஎம் டியூக் 250 பைக்குகளுக்கு சவால் விடும் வகையிலான எலக்ட்ரிக் பைக் குறித்த அறிவிப்பை ஏத்தர் எனர்ஜி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதனால் எலக்ட்ரிக் பைக் ஆர்வலர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இதுகுறித்த விரிவான தகவல்களை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

டியூக், டோமினாருக்கு போட்டியாக களமிறங்கும் சென்னை பசங்களின் எலக்ட்ரிக் பைக்!!!

பெங்களூரு நகரை தலைமையிடமாக கொண்டு ஏத்தர் எனர்ஜி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. எலக்ட்ரிக் வாகனங்களை தயாரித்து வரும் ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தை, சென்னை ஐஐடி கல்லூரியில் படித்த நண்பர்களான தருண் மெஹ்தா மற்றும் ஸ்வப்னில் ஜெயின் ஆகியோர், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கினர்.

டியூக், டோமினாருக்கு போட்டியாக களமிறங்கும் சென்னை பசங்களின் எலக்ட்ரிக் பைக்!!!

ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் ஏத்தர் 340 மற்றும் ஏத்தர் 450 ஆகிய 2 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள், மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், கடந்த சில நாட்களுக்கு முன் லான்ச் செய்யப்பட்டன. இந்த 2 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களிலும் இடம்பெற்றிருக்கும் ரிவர்ஸ் கியர் உள்ளிட்ட பல வசதிகள், பிரம்மிப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்தியாவின் முதல் ஸ்மார்ட் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் என இவை கருதப்படுகின்றன.

டியூக், டோமினாருக்கு போட்டியாக களமிறங்கும் சென்னை பசங்களின் எலக்ட்ரிக் பைக்!!!

முதல் 2 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வெற்றிகரமாக மார்க்கெட்டிற்கு கொண்டு வந்த உடன், ஏத்தர் எனர்ஜி நிறுவனம் இன்னும் உயர்வாக சிந்திக்க தொடங்கியுள்ளது. ஆம், தனது அடுத்த தயாரிப்புக்கான வேலைகளை ஏத்தர் எனர்ஜி நிறுவனம் விரைவில் தொடங்கவுள்ளது. ஆனால் அது எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அல்ல. ஹை பெர்பார்மென்ஸ் (உயர் செயல்திறன்) எலக்ட்ரிக் பைக் என்பதுதான் கவனத்தை ஈர்த்துள்ளது.

டியூக், டோமினாருக்கு போட்டியாக களமிறங்கும் சென்னை பசங்களின் எலக்ட்ரிக் பைக்!!!

இந்திய மார்க்கெட்டின் பைக் சென்மெண்டில் நுழைவது தொடர்பாக, ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் திட்டங்கள் மற்றும் அதன் அவசியம் குறித்து, ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் இணை நிறுவனர்களில் ஒருவரான தருண் மெஹ்தா பேட்டி அளித்துள்ளார்.

டியூக், டோமினாருக்கு போட்டியாக களமிறங்கும் சென்னை பசங்களின் எலக்ட்ரிக் பைக்!!!

இதுகுறித்து தருண் மெஹ்தா கூறுகையில், ''போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்களில் பெட்ரோல் பைக்குகளை இயக்குவது வலி மிகுந்த உணர்வை தருகிறது. எனவே இந்தியாவின் முக்கியமான 10 நகரங்களில் பைக்குகளை விட ஸ்கூட்டர்களே தற்போது அதிகம் விற்பனையாகின்றன. பெங்களூரு நகரில் பைக் ஓட்டினால் கிளட்சை விடவே முடியாது. இதனால் மணிக்கட்டில் வலி ஏற்படுகிறது'' என்றார்.

டியூக், டோமினாருக்கு போட்டியாக களமிறங்கும் சென்னை பசங்களின் எலக்ட்ரிக் பைக்!!!

தருண் மெஹ்தா மேலும் கூறுகையில், ''அதுமட்டுமின்றி பொருட்களை எளிதாக கொண்டு செல்லவும் பைக்குகளில் ஸ்டோரேஜ் ஸ்பேஸ் எதுவும் இல்லை. எலக்ட்ரிக் பைக்குகள் மூலமாக இந்த பிரச்னைகளை எல்லாம் களைய முடியும் என நாங்கள் நம்புகிறோம். எங்கள் நிறுவனம் எலக்ட்ரிக் பைக் உருவாக்கவே விரும்பியது. ஆனால் எலக்ட்ரிக் ஸ்கூட்டரைதான் முதலில் கட்டமைத்தோம். ஆனால் வெகு விரைவில் எலக்ட்ரிக் பைக்குகளை உருவாக்கும் பணியை தொடங்குவோம்'' என்றார்.

டியூக், டோமினாருக்கு போட்டியாக களமிறங்கும் சென்னை பசங்களின் எலக்ட்ரிக் பைக்!!!

ஏத்தர் எனர்ஜி நிறுவனம் வெளியிடும் எலக்ட்ரிக் பைக்கின் டாப் ஸ்பீடு மணிக்கு 130-140 கிலோ மீட்டர்கள் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் உள்ள பேட்டரியை காட்டிலும் அதிக பவர் கொண்ட பேட்டரிகள் பொருத்தப்படவுள்ளன.

டியூக், டோமினாருக்கு போட்டியாக களமிறங்கும் சென்னை பசங்களின் எலக்ட்ரிக் பைக்!!!

அதாவது வெறுமனே மளிகை கடைக்கு போய் வரவும், அலுவலகம் சென்று வருவதற்கும் மட்டுமல்லாமல், மிக நீண்ட தூரம் சென்று வரவும் பயன்படுத்தும் வகையில், ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் மோட்டார் பைக் வடிவமைக்கப்பட உள்ளது.

டியூக், டோமினாருக்கு போட்டியாக களமிறங்கும் சென்னை பசங்களின் எலக்ட்ரிக் பைக்!!!

ஏத்தர் 340 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் 1.09 லட்ச ரூபாய்க்கும், ஏத்தர் 450 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் 1.24 லட்ச ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனை காட்டிலும் ஏத்தர் எலக்ட்ரிக் பைக்கின் விலை 50 ஆயிரம் ரூபாய் அதிகமாக இருக்கும். அதாவது எலக்ட்ரிக் பைக், 1.5 லட்சத்தில் இருந்து 2 லட்ச ரூபாய்க்குள் விற்பனை செய்யப்படும்.

டியூக், டோமினாருக்கு போட்டியாக களமிறங்கும் சென்னை பசங்களின் எலக்ட்ரிக் பைக்!!!

இந்த விலையானது, பைக் ஆர்வலர்கள் மற்றும் இளைய தலைமுறையினரால் அதிகம் விரும்பப்படும் பஜாஜ் டோமினார் 400 மற்றும் கேடிஎம் டியூக் 250 போன்ற ஹை பெர்பார்மென்ஸ் பைக்குகளுக்கு இணையானது. ஆனால் அத்தகைய பைக்குகளுடன் போட்டியிடும் வகையிலான செயல்பாடுகளுடன் ஏத்தர் எலக்ட்ரிக் பைக் வடிவமைக்கப்படும் என நிச்சயமாக எதிர்பார்க்கலாம்.

டியூக், டோமினாருக்கு போட்டியாக களமிறங்கும் சென்னை பசங்களின் எலக்ட்ரிக் பைக்!!!

ஏனெனில் ஏத்தர் 450 எலக்ட்ரிக் ஸ்கூட்டரில், பூஜ்ஜியத்தில் இருந்து 40 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 3.9 வினாடிகளில் எட்டிவிட முடியும். தற்போதைய நிலையில், இந்தியாவில் அதிகம் விற்பனையாகி வரும் ஸ்கூட்டரான ஹோண்டா ஆக்டிவா இதை செய்வதற்கு 5 வினாடிகள் எடுத்து கொள்கிறது.

டியூக், டோமினாருக்கு போட்டியாக களமிறங்கும் சென்னை பசங்களின் எலக்ட்ரிக் பைக்!!!

இதுபோன்ற காரணங்களால்தான், ஏத்தர் நிறுவனத்தின் எலக்ட்ரிக் பைக் நிச்சயமாக, பஜாஜ் மற்றும் கேடிஎம் நிறுவனங்களுடன் போட்டி போடும் என அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. ஏத்தர் எலக்ட்ரிக் பைக் குறித்த கூடுதல் தகவல்கள் இன்னும் ஓரிரு மாதங்களில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டியூக், டோமினாருக்கு போட்டியாக களமிறங்கும் சென்னை பசங்களின் எலக்ட்ரிக் பைக்!!!

ஆனால் பைக் விற்பனைக்கு வர 2 ஆண்டு காலம் பிடிக்கும் என ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் இணை நிறுவனரான தருண் மெஹ்தா தெரிவித்துள்ளார். ஆனால் முதற்கட்ட பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளன.

டியூக், டோமினாருக்கு போட்டியாக களமிறங்கும் சென்னை பசங்களின் எலக்ட்ரிக் பைக்!!!

பெட்ரோல், டீசல் விலை உயர்வு, அவை சுற்றுச்சூழலுக்கு ஏற்படுத்தும் பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால், எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற பெரும்பாலானோர் விரும்பி வருகின்றனர். அத்தகையவர்களுக்கு, கடந்த சில நாட்களாகவே பயனுள்ள செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன.

டியூக், டோமினாருக்கு போட்டியாக களமிறங்கும் சென்னை பசங்களின் எலக்ட்ரிக் பைக்!!!

ஆம், தமிழகத்தின் கோவையை மையமாக கொண்டு செயல்படும் இ மோஷன் மோட்டார்ஸ் நிறுவனமும், தனது சர்ஜ் என்ற கியருடன் கூடிய எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 200 கிலோ மீட்டர் பயணிக்கலாம், மணிக்கு 120 கிலோ மீட்டர்கள் என்ற டாப் ஸ்பீடு என்ற அந்நிறுவனத்தின் அறிவிப்பும் கவர்ச்சிகரமாக உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

More from DriveSpark

Article Published On: Monday, June 11, 2018, 11:23 [IST]
English summary
Ather Energy to launch a high-performance electric motorcycle next; Details revealed. read in tamil.
மேலும்... #ஏத்தர் #ather energy
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+