பஜாஜ் பைக்குகளுக்கு அதிரடி ஆஃபர்கள்... மிஸ் பண்ணிடாதீங்க!!
புதிய பஜாஜ் பைக்குகள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 3 விதமான சிறப்பு சேமிப்புச் சலுகைகளை பெறும் வாய்ப்புள்ளது. பஜாஜ் பிளாட்டினா, டிஸ்கவர், பல்சர் 150, பல்சர் என்எஸ் 160 மற்றும் வி பைக்குகளை வாங்கும் வ
புதிய பஜாஜ் பைக்குகளை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மூன்று அதிரடி சலுகைகளை பஜாஜ் ஆட்டோ நிறுவனம் அறிவித்துள்ளது. பஜாஜ் ஹாட்ரிக் ஆஃபர் என்ற பெயரில் வந்திருக்கும் இந்த சிறப்பு சலுகைகள் குறித்த விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

புதிய பஜாஜ் பைக்குகள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 3 விதமான சிறப்பு சேமிப்புச் சலுகைகளை பெறும் வாய்ப்புள்ளது. பஜாஜ் பிளாட்டினா, டிஸ்கவர், பல்சர் 150, பல்சர் என்எஸ் 160 மற்றும் வி பைக்குகளை வாங்கும் வாடிக்கையாளர்கள் இலவச இன்ஸ்யூரன்ஸ் சலுகையை பெறலாம்.

அதேபோன்று, பஜாஜ் சிடி100, பிளாட்டினா, டிஸ்கவர், பல்சர், பல்சர் என்எஸ், அவென்ஜர், பல்சர் ஆர்எஸ், வி மற்றும் டோமினார் பைக்குகளை வாங்கும் வாடிக்கையாளர்கள் இரண்டு ஆண்டுகளுக்கான இலவச சர்வீஸ் திட்டத்தை பெற முடியும்.

மூன்றாவதாக, புதிய பஜாஜ் மோட்டார்சைக்கிள்களுக்கு 5 ஆண்டுகளுக்கான வாரண்டியை இலவசமாக பெறும் வாய்ப்பும் இருக்கிறது. நாடுமுழுவதும் உள்ள அ னைத்து பஜாஜ் ஷோரூம்களிலும் இந்த சலுகைகளை பெற முடியும்.

வரும் 31ந் தேதி வரை பஜாஜ் பைக்குகளை வாங்குவோருக்கு இந்த சிறப்பு சேமிப்புச் சலுகைகளை பெற முடியும். அதேநேரத்தில், எந்தெந்த மாடலுக்கு என்னென்ன சலுகை பெற முடியும் என்பது குறித்து அருகிலுள்ள பஜாஜ் ஷோரூமை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

தவிரவும், குறைந்த வட்டி திட்டத்திலும், குறைவான முன்பணத்திலும், கடன் வசதியை பெறும் வாய்ப்பும் இப்போது வழங்கப்படுகிறது.பருவமழை காலத்தில் பைக் விற்பனை மந்தமாக இருக்கும் என்பதை மனதில் வைத்து இந்த சிறப்பு சேமிப்பு சலுகைகளை பஜாஜ் ஆட்டோ நிறுவனம் அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








