சுஸுகி இன்ட்ரூடர் 150 பைக்கிற்கு ஆப்பு வைக்க புதிய அவென்ச்சர் 180 மாடலை வெளியிடும் பஜாஜ்..!!

சுஸுகி இன்ட்ரூடர் 150 பைக்கிற்கு ஆப்பு வைக்க புதிய அவென்ச்சர் 180 மாடலை வெளியிடும் பஜாஜ்..!!

By Azhagar

இந்தாண்டிற்கான 2018 அவென்ச்சர் சிரீஸ் பைக்குகள் விரைவில் வெளிவரவுள்ளன. இந்நிலையில் அவென்ச்சர் 150 மாடலை இந்தியாவில் கைவிடுவதாக பஜாஜ் தெரிவித்துள்ளது.

சுஸுகி Vs பஜாஜ்: இன்ட்ரூடர் 150-க்கு போட்டி அவென்ச்சர் 180 மாடல்

இதுப்பற்றி திரட்ஸ்ட்சோன் இணையதளம், வரும் பிப்ரவரி மாதத்தில் அவென்ச்சர் 150 மாடல் இந்தியாவில் இருந்து விடைபெறவுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது.

சுஸுகி Vs பஜாஜ்: இன்ட்ரூடர் 150-க்கு போட்டி அவென்ச்சர் 180 மாடல்

அதற்கு பதிலாக அவென்ச்சர் 180 என்ற புதிய ரக மாடல் பைக்கை பஜாஜ் வெளியிடுகிறது. இது சுஸுகியின் இன்ட்ரூடர் 150 பைக்கிற்கு போட்டியாக இந்திய சந்தையில் வலம் வரும்.

சுஸுகி Vs பஜாஜ்: இன்ட்ரூடர் 150-க்கு போட்டி அவென்ச்சர் 180 மாடல்

அவென்ச்சர் 150 மாடலை காட்டிலும் புதிய அவென்ச்சர் 180 பைக்கில் பல புதிய மற்றும் டிரென்டிற்கு ஏற்றவாறான கட்டமைப்புகள் இருக்கும்.

Recommended Video

The Best Two Wheeler Brand In India Is Honda - DriveSpark
சுஸுகி Vs பஜாஜ்: இன்ட்ரூடர் 150-க்கு போட்டி அவென்ச்சர் 180 மாடல்

பல்சர் 180 மாடலில் உள்ள எஞ்சின் தான் இந்த புதிய பைக்கிலும் இடம்பெறுகிறது. தவிர அவென்ச்சர் 180 பைக்கின் மற்ற கட்டமைப்புகள், இன்ட்ரூடர் 150-க்கு போட்டியாகவே அமைக்கப்படவுள்ளன.

சுஸுகி Vs பஜாஜ்: இன்ட்ரூடர் 150-க்கு போட்டி அவென்ச்சர் 180 மாடல்

அதன்படி பஜாஜின் புதிய அவென்ச்சர் 180 பைக்கில் 178.2 சிசி திறன் பெற்ற சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் இடம்பெறும். இது ஆர்/ஆயில் கூல்டு திறனை பெற்றிருக்கும்.

Trending On Drivespark:

சுஸுகி Vs பஜாஜ்: இன்ட்ரூடர் 150-க்கு போட்டி அவென்ச்சர் 180 மாடல்

இதன்மூலம் அவென்ச்சர் 180 மாடல் பைக் அதிகப்பட்சமாக 17 பிஎச்பி பவர் மற்றும் 14 என்.எம் டார்க் திறனை வழங்கும்.

தற்போது அவென்ச்சர் 150 பைக் அதிகப்பட்சமாக 14.3 பிஎச்பி பவர் மற்றும் 12.5 என்.எம் டார்க் திறனை மட்டுமே வழங்கி வருகிறது.

சுஸுகி Vs பஜாஜ்: இன்ட்ரூடர் 150-க்கு போட்டி அவென்ச்சர் 180 மாடல்

இந்த மாடலை விட புதிய அவென்ச்சர் 180 பைக், அதிக எஞ்சின் தேர்வு, செயல்திறன் உட்பட பல அம்சங்களை பெற்றிருக்கும்.

எஞ்சினின் செயல்திறனுக்காக அவென்ச்சர் 180 மாடல் பைக்கின் எஞ்சின் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் கூட்டணியில் தயாரிக்கப்படவுள்ளது

சுஸுகி Vs பஜாஜ்: இன்ட்ரூடர் 150-க்கு போட்டி அவென்ச்சர் 180 மாடல்

இவற்றை தவிர பைக்கின் மற்ற மெக்கானிக்கல் அம்சங்கள் அப்படியே இருக்கும். அதன்படி, அவென்ச்சர் 180 பைக்கின் இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் அம்சம் இருக்கும்.

சுஸுகி Vs பஜாஜ்: இன்ட்ரூடர் 150-க்கு போட்டி அவென்ச்சர் 180 மாடல்

பாதுகாப்பு காரணங்களுக்கு வேண்டி, பஜாஜ் நிறுவனம் அவென்ச்சர் பைக்கில் சிங்கிள்-சேனலுடன் கூடிய ஏபிஎஸ் தேர்வை பொருத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுஸுகி Vs பஜாஜ்: இன்ட்ரூடர் 150-க்கு போட்டி அவென்ச்சர் 180 மாடல்

டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், முன் பின் பகுதிகளில் எல்.இ.டி விளக்குகள் என பலதரப்பட்ட நவீன கட்டமைப்புகளும் புதிய அவென்ச்சர் பைக்கில் இடம்பெறவுள்ளது.

Trending On Drivespark:

சுஸுகி Vs பஜாஜ்: இன்ட்ரூடர் 150-க்கு போட்டி அவென்ச்சர் 180 மாடல்

சுஸுகி இன்ட்ரூடர் 150 பைக்கிற்கு சரிநிகர் போட்டியை அளிக்க, இந்திய சந்தையில் அவென்ன்சர் 180 பைக்கின் விலை நிச்சயம் அதற்கு நெருக்கடி தரும் வகையில் இருக்கும் என்று தெரிகிறது.

சுஸுகி Vs பஜாஜ்: இன்ட்ரூடர் 150-க்கு போட்டி அவென்ச்சர் 180 மாடல்

தற்போது அவென்ச்சர் 150 பைக் ரூ.81, 459 (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலையில் விற்பனையாகி வருகிறது. இதைவிட அவென்ச்சர் 180 பைக்கின் விலை ரூ. 50,000 கூடுதலாக நிர்ணயிக்கப்படலாம் என கருதப்படுகிறது.

சுஸுகி Vs பஜாஜ்: இன்ட்ரூடர் 150-க்கு போட்டி அவென்ச்சர் 180 மாடல்

ரூ. 98,340 (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலையில் இந்தியாவில் சுஸுகி இன்ட்ரூடர் பைக் களமிறங்குகிறது. இதைவிட கூடுதல் விலையில் அவென்ச்சர் 180 களமிறங்கினாலும்,

திறன் என்ற அடிப்படையில் பார்க்கும் போது இன்ட்ரூடர் 150யை காட்டிலும், அவென்ச்சர் 180 நிர்ணயிக்கப்போகும் விலை சற்று குறைவுதான்.

சுஸுகி Vs பஜாஜ்: இன்ட்ரூடர் 150-க்கு போட்டி அவென்ச்சர் 180 மாடல்

இருந்தாலும் தனது தனிப்பட்ட வடிவமைப்பு மற்றும் திறன் தேர்வுகளில் சுஸுகி இன்ட்ரூடர் 150 மாடல் சரியான விலையையே நிர்ணயித்துள்ளது.

முக்கியமாக இந்தியாவில் கவாஸாகி எலிமினேட்டர் 175 மாடல் நிறுத்தப்பட்ட போது இந்திய சந்தையில் அவென்ச்சர் 180 மாடலை பஜாஜ் முன்னதாகவே வெளியிட்டது.

சுஸுகி Vs பஜாஜ்: இன்ட்ரூடர் 150-க்கு போட்டி அவென்ச்சர் 180 மாடல்

தற்போது அதை மேலும் மெருக்கேற்றி, நவீன கால அடையாளம் மற்றும் கட்டமைப்புடன் அவென்ச்சர் 180 பைக்கை மீண்டும் பஜாஜ் வெளியிடுகிறது.

அவென்ச்சர் 150-க்கு போட்டியாக புதுமையான வடிவமைப்பு மற்றும் அம்சங்களுடன் இன்ட்ரூடர் 150 பைக்கை சுஸுகி வெளியிட்டது.

சுஸுகி Vs பஜாஜ்: இன்ட்ரூடர் 150-க்கு போட்டி அவென்ச்சர் 180 மாடல்

தற்போது அதை ஈடுசெய்யும் விதமாக பஜாஜ் அவென்ச்சர் 180 பைக்கிற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சுஸுகி இன்ட்ரூடர் 150 மாடலை சந்தையில் தோற்கடிக்க பஜாஜின் அவென்ச்சர் 180 கணக்கு சரியாகுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Trending DriveSpark YouTube Videos

Subscribe To DriveSpark Tamil YouTube Channel - Click Here

English summary
Read in Tamil: Bajaj New Avenger 180 Is Coming to Take On The Suzuki Intruder 150. Click for Details....
Story first published: Tuesday, January 2, 2018, 11:41 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X