விரைவில் களமிறங்கும் பஜாஜ் 180 பைக்: விலை, அறிமுகம், வடிவமைப்பு உள்ளிட்ட தகவல்கள்..!!

விரைவில் களமிறங்கும் பஜாஜ் 180 பைக்: விலை, அறிமுகம், வடிவமைப்பு உள்ளிட்ட தகவல்கள்..!!

By Azhagar

இந்தியாவை சேர்ந்த பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தயாரித்து வரும் புதிய அவென்ஜர் 180 மோட்டார் சைக்கிள் விரைவில் வெளியாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

சந்தைக்கு வர தயாராக இருக்கும் பஜாஜின் புதிய அவென்ஜர் 180 பைக்..!!

2018 அவென்ஜர் 220 க்ரூஸ், ஸ்ட்ரீட் மற்றும் அவென்ஜர் 150 ஸ்ட்ரீட் ஆகிய மோட்டார் சைக்கிள் மாடல்களை பஜாஜ் நிறுவனம் இந்தியாவில் வெளியிட்டது.

தொடர்ந்து பெரிய எதிர்பார்ப்பை பெற்றிருந்த அவென்ஜர் 180சிசி பைக்கையும் பஜாஜ் இந்தியாவில் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது.

சந்தைக்கு வர தயாராக இருக்கும் பஜாஜின் புதிய அவென்ஜர் 180 பைக்..!!

இந்நிலையில், அதை உறுதிப்படுத்தும் விதமாக இந்த புதிய 180சிசி இழுவைத்திறன் கொண்ட அவென்ஜர் பைக், இம்மாதம் இறுதியில் இந்தியாவில் அறிமுகமாகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

சந்தைக்கு வர தயாராக இருக்கும் பஜாஜின் புதிய அவென்ஜர் 180 பைக்..!!

இருசக்கர ஆர்வலர்கள் மற்றும் வாடிக்கையாளர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை பெற்றுள்ள இந்த பைக்கிற்கு ரூ. 83,987 (எக்ஸ்-ஷோரூம் இந்தியா) விலை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சந்தைக்கு வர தயாராக இருக்கும் பஜாஜின் புதிய அவென்ஜர் 180 பைக்..!!

அவென்ஜர் 180 பைக்கில் ஸ்ட்ரீட் வேரியன்ட் மட்டும் தான் இந்தியாவில் அறிமுகமாகும். அதன் க்ரூஸ் வேரியன்ட் இந்தியாவிற்கு இல்லை என மேலும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

Recommended Video

New Maruti Swift Launch: Price; Mileage; Specifications; Features; Changes
சந்தைக்கு வர தயாராக இருக்கும் பஜாஜின் புதிய அவென்ஜர் 180 பைக்..!!

2018 அவென்ஜர் 150 மாடலை பின்பற்றி அவென்ஜர் 180 மோட்டார் சைக்கிளுக்கான தயாரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கலாம் என தெரிகிறது.

சந்தைக்கு வர தயாராக இருக்கும் பஜாஜின் புதிய அவென்ஜர் 180 பைக்..!!

பஜாஜ் புத்தம் புதிய வடிவில் தயாரித்து வெளியிட்ட அவென்ஜர் 150 பைக்கிற்கு முற்றிலும் புதிய முகப்பு விளக்குகள், எல்.இ.டி திறன் பெற்ற பகல் நேர விளக்குகள், பெரிய விண்டுஸ்க்ரீன், சிறியளவிலான கௌல் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.

சந்தைக்கு வர தயாராக இருக்கும் பஜாஜின் புதிய அவென்ஜர் 180 பைக்..!!

முகப்பு பகுதியின் இத்தகைய வடிவமைப்புகளை ஈடுசெய்ய சிறியளவிலான ஹேண்டில்பார், சமகால கட்டமைப்பிற்கு ஏற்றவாறு அலாய் சக்கரங்கள் மற்றும் கிராஃப் ரயில் இடம்பெற்றுள்ளன.

சந்தைக்கு வர தயாராக இருக்கும் பஜாஜின் புதிய அவென்ஜர் 180 பைக்..!!

பஜாஜ் தயாரித்துள்ள புதிய அவென்ஜர் 180 ஸ்ட்ரீட் மாடல் பைக்கில் புதிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், புதிய வடிவிலான எக்ஸாஸ்ட் பைப்புகள்,

முகப்பு பகுதி மற்றும் கட்டமைப்பிற்கு ஏற்றவாறான இருக்கை தேர்வு போன்ற அம்சங்கள் இடம்பெறவுள்ளது.

சந்தைக்கு வர தயாராக இருக்கும் பஜாஜின் புதிய அவென்ஜர் 180 பைக்..!!

பஜாஜின் புதிய அவென்ஜர் பைக்கில் 180சிசி இழுவை திறன் கொண்ட எஞ்சின் வழங்கப்படவுள்ளது. இது 17 பிஎச்பி பவர் மற்றும் 14.22 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தும்.

சந்தைக்கு வர தயாராக இருக்கும் பஜாஜின் புதிய அவென்ஜர் 180 பைக்..!!

இந்த பைக்கின் சரியான செயல்பாட்டிற்கான இதன் எஞ்சின் 5 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் கூட்டணி அமைத்துள்ளது. 220 ஸ்ட்ரீட் பைக் அளவிற்கு இல்லை என்றாலும், சுஸுகி இண்ட்ரூடருக்கு போட்டி போடும் வடிவில் அம்சமாக களமிறங்கவுள்ளது பஜாஜ் அவென்ஜர் 180 பைக்.

Article Published On: Saturday, February 17, 2018, 8:30 [IST]
English summary
Read in Tamil: Bajaj Avenger 180 Spotted Ahead Of Launch; Price, Features, Specifications & Images...
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+