ரூ. 83,745 விலையில் புதிய பஜாஜ் அவென்ஜர் ஸ்ட்ரீட் 180 பைக் விற்பனைக்கு அறிமுகம்...!!

ரூ. 83,745 விலையில் புதிய பஜாஜ் அவென்ஜர் ஸ்ட்ரீட் 180 பைக் விற்பனைக்கு அறிமுகம்...!!

By Azhagar

இந்தியாவில் பஜாஜ் அவென்ஜர் ஸ்ட்ரீட் 180 மோட்டார் சைக்கிள் ரூ. 83,475 (எக்ஸ்-ஷோரூ, மஹாராஷ்டிரா) விலையில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது.

2015ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட இந்த மாடல் பைக், பஜாஜ் லைன்அப்பில் ஸ்ட்ரீட் 150 பைக்குகளுக்கு மாற்றாக களமிறக்கப்பட்டுள்ளது.

பஜாஜ் அவென்ஜர் ஸ்ட்ரீட் 180 பைக் விற்பனைக்கு அறிமுகம்..!!

புதிய அவென்ஜர் 180 பைக்கில் ஏர்-கூல்டு திறன் பெற்ற 178.6 சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் உள்ளது. இது 15.3 பிஎச்பி பவர் மற்றும் 13.7 என்.எம் டார்க் திறனை வழங்கும்.

5 ஸ்பீடு கியர்பாக்ஸ் பெற்றுள்ள இந்த பைக்கில் 13 லிட்டர் கொள்ளவு கொண்ட எரிவாயு டேங்க் உள்ளது. பைக்கின் மொத்த எடை 150 கிலோ.

பஜாஜ் அவென்ஜர் ஸ்ட்ரீட் 180 பைக் விற்பனைக்கு அறிமுகம்..!!

முன்பக்க சக்கரத்தில் டெலஸ்கோபிக் ஃபோர்க்ஸ் மற்றும் பின்பக்க சக்கரத்தில் ட்வின் ஷாக் அப்ஸபர்கள் புதிய அவென்ஜர் பைக்கிற்கான சஸ்பென்ஷன் தேவையை பூர்த்தி செய்கின்றன.

பஜாஜ் அவென்ஜர் ஸ்ட்ரீட் 180 பைக் விற்பனைக்கு அறிமுகம்..!!

அவென்ஜர் ஸ்ட்ரீட் 220 மாடலை பின்பற்றி தயாராகியுள்ள இந்த பைக் 260 மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் 130 மிமீ டிரம் பிரேக் செட்-அப்பை பெற்றுள்ளது.

பஜாஜ் அவென்ஜர் ஸ்ட்ரீட் 180 பைக் விற்பனைக்கு அறிமுகம்..!!

மெக்கானிக்கல் சார்ந்த அம்சங்களிலும் பெரும்பாலும் ஸ்ட்ரீட் 220 மாடலை தழுவி உருவாக்கப்பட்டுள்ள புதிய அவென்ஜர் 180 பைக்கில் பஜாஜ் நிறுவனம் ஏபிஸ் தேவையை பொருத்தவில்லை.

பஜாஜ் அவென்ஜர் ஸ்ட்ரீட் 180 பைக் விற்பனைக்கு அறிமுகம்..!!

புதிய முகப்பு விளக்குகள், ஒருங்கிணைந்த எல்.இ.டி பகல்நேர விளக்குகள், மேற்பகுதியில் கருப்பு நிறத்திலான கௌல், கருப்பு நிறத்திலான அலாய் சக்கரங்கள், சஸ்பென்ஷன், சைடு பேனல்கள், எஞ்சின், எக்ஸாஸ்ட் மற்றும் புதிய மாற்றம் பெற்ற இருக்கை என அவென்ஜர் 180 பைக்கின் கட்டுமானம் அசரடிக்கிறது.

பஜாஜ் அவென்ஜர் ஸ்ட்ரீட் 180 பைக் விற்பனைக்கு அறிமுகம்..!!

எபானி பிளாக் மற்றும் ஸ்பைஸி ரெட் ஆகிய புதிய நிற தேர்வுகளுடன், கவர்ந்திழுக்கும் கிராஃபிக்ஸ் வேலைபாடுகளில் நம்மை ஈர்க்கிறது புதிய பஜாஜ் அவென்ஜர் 180 பைக். முக்கியமாக பைக்கின் நிறம் மற்றும் கிராஃபிக்ஸ் இரண்டும் கான்ட்ராஸ்டாக இருப்பது சந்தையில் இந்த பைக்கின் மீது தனித்துவத்தை ஏற்படுத்தியுள்ளது.

பஜாஜ் அவென்ஜர் ஸ்ட்ரீட் 180 பைக் விற்பனைக்கு அறிமுகம்..!!

2015ம் ஆண்டிற்கு பிறகு இரண்டாது தலைமுறை பைக்காக பஜாஜ் அவென்ஜர் ஸ்ட்ரீட் 180 மாடல் வெளிவந்துள்ளது. ஸ்ட்ரீட் 150 மாடலை விட இந்த பைக் ரூ. 3000 கூடுதல் விலை பெற்றுள்ளது.

பஜாஜ் அவென்ஜர் ஸ்ட்ரீட் 180 பைக் விற்பனைக்கு அறிமுகம்..!!

புதிய அவென்ஜர் ஸ்ட்ரீட் 150 மாடல் பைக் இந்தியாவில் சுஸுகி இன்ட்ரூடர் 150 பைக்கிற்கு சரிநிகர் போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Article Published On: Friday, February 23, 2018, 10:26 [IST]
English summary
Read in Tamil: Bajaj Avenger Street 180 Launched At Rs 83,475 Specifications, Features & Colours. Click for Details...
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+