பஜாஜ் பைக் நஷ்டத்தில் விற்பனையாகிறதாம்; விஷயம் தெரிந்தும் விற்பனையை ஏன் தொடர்கிறது தெரியுமா?

பஜாஜ் நிறுவனம் தயாரிக்கும் சி.டி 100 பைக்கை அந்நிறுவனம் நஷ்டத்தில் விற்பனை செய்து வருகிறது. இது தெரிந்தும் அந்நிறுவனம் தொடர்ந்து விற்பனை செய்து வருகிறது.

By Balasubramanian

பஜாஜ் நிறுவனம் தயாரிக்கும் சி.டி 100 பைக்கை அந்நிறுவனம் நஷ்டத்தில் விற்பனை செய்து வருகிறது. இது தெரிந்தும் அந்நிறுவனம் தொடர்ந்து விற்பனை செய்து வருகிறது. அதற்கான காரணம் என்ன என்பதை கீழே காண்போம் வாருங்கள்.

பஜாஜ் பைக் நஷ்டத்தில் விற்பனையாகிறதாம்; விஷயம் தெரிந்தும் விற்பனையை ஏன் தொடர்கிறது தெரியுமா?

மக்களின் தேவையை அறிந்து அதற்கான வாகனங்களை தயாரிப்பதில் பஜாஜ் கில்லாடி அந்த வகையில் குறைந்த விலை முதல் அதிக விலை அந்நிறுவனம் அறிமுகப்படுத்திய பெரும்பாலான வாகனங்கள் ஹிட் தான்.

பஜாஜ் பைக் நஷ்டத்தில் விற்பனையாகிறதாம்; விஷயம் தெரிந்தும் விற்பனையை ஏன் தொடர்கிறது தெரியுமா?

இந்நிறுவனம் அறிமுகப்படுத்திய பல்சர் பைக் இளைஞர்கள் மனதில் ஏகோபித்த இடத்தை பிடித்து விட்டது. பல்சர் பைக் மீது பல இளைஞர்கள் பைத்தியமாக சுற்றவதை கூட நம்மால் ஆங்காங்கே பார்க்க முடிந்தது.

பஜாஜ் பைக் நஷ்டத்தில் விற்பனையாகிறதாம்; விஷயம் தெரிந்தும் விற்பனையை ஏன் தொடர்கிறது தெரியுமா?

காலங்கள் கடந்து செல்ல இளைஞர்கள் மனதை மெல்லமாக கொள்ளையாடிக்க துவங்கியது ராயல் என்பீல்டு, ரசிகர்கள் கொஞ்ச கொஞ்சமாக பல்சரை விட்டு விட்டு ராயல் என்பீல்டு பக்கம் திரும்பினர். இதை உணர்ந்த பஜாஜ் நிறுவனம் ராயல் என்பீல்டிற்கு போட்டியாக ஒரு பைக்கை தயாரிக்க முடிவு செய்தது.

பஜாஜ் பைக் நஷ்டத்தில் விற்பனையாகிறதாம்; விஷயம் தெரிந்தும் விற்பனையை ஏன் தொடர்கிறது தெரியுமா?

இதன் விளைவுதான் புதிய டோமினோர் பைக். ராயல் என்பீல்டு நிறுவனம் பழங்காலத்தில் இருந்தே பைக்குளை விற்றுவதால் மக்களிடம் நல்ல பெயரை சம்பாதித்து வைத்துள்ளது. தற்போது இளைஞர்கள் கிளாசிக் பைக்குகள் மீது விரும்பம் அதிகமானதால் பலர் ராயல் என்பீல்டை நோக்கி பாய்ந்தனர்.

பஜாஜ் பைக் நஷ்டத்தில் விற்பனையாகிறதாம்; விஷயம் தெரிந்தும் விற்பனையை ஏன் தொடர்கிறது தெரியுமா?

தன் பைக்கில் உள்ள கிளாசிக் லுக் தான் தங்களது யூஎஸ்பி என்பதை உணர்ந்த ராயல் என்பீல்டு நிறுவனமும் அந்த பைக்கின் லுக்கை மாற்றாமல் இருந்து வருகிறது. ராயல் என்பீல்டு உடனான போட்டியை சமாளிக்க பஜாஜ் நிறுவனம் டோமினோர் பைக்கிற்கான விளம்பரத்தில் ராயல் என்பீல்டை கிண்டல் செய்து வருகிறது.

பஜாஜ் பைக் நஷ்டத்தில் விற்பனையாகிறதாம்; விஷயம் தெரிந்தும் விற்பனையை ஏன் தொடர்கிறது தெரியுமா?

என்னதான் ராயல் என்பீல்டை பஜாஜ் நிறுவனம் கிண்டல் செய்தால் அதன் விற்பனையை சரிக்க முடியவில்லை. தொடர்ந்து ராயல் என்பீல்டு பைக்கின் விற்பனை அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. அதே நேரத்தில் மக்கள் சமீப காலமாக டோமினோர் பைக் மீது தங்கள் கவனத்தை திருப்ப துவங்கியுள்ளனர்.

பஜாஜ் பைக் நஷ்டத்தில் விற்பனையாகிறதாம்; விஷயம் தெரிந்தும் விற்பனையை ஏன் தொடர்கிறது தெரியுமா?

என்னதான் பஜாஜ் நிறுவனம் லட்ச கணக்கிலான விலையில் பைக்குளை விற்பனை செய்து வந்தாலும், மிக குறைந்த விலை பைக்குகளையும் விற்பனை செய்து தான் வருகிறது. பஜாஜ் நிறுவனம் விற்பனை செய்யும் பைக்குகளிலயே குறைந்த விலை பைக் பஜாஜ் சிடி 100 தான்.

பஜாஜ் பைக் நஷ்டத்தில் விற்பனையாகிறதாம்; விஷயம் தெரிந்தும் விற்பனையை ஏன் தொடர்கிறது தெரியுமா?

100 சிசி திறன் கொண்ட இந்த பைக்கை எக்ஸ் ஷோரூம் விலைப்படி ரூ 30,714க்கு அந்நிறுவனம் விற்பனை செய்கிறது. இது டி.வி.எஸ் நிறுவனம் விற்பனை செய்யும் டி.வி.எஸ். எக்ஸ்எல் 100 பைக்கை விட குறைந்த விலையாகும். டிவிஎஸ் எக்ஸ்எல் பைக் எக்ஸ் ஷோரூம் விலைப்படி ரூ 32,909க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பஜாஜ் பைக் நஷ்டத்தில் விற்பனையாகிறதாம்; விஷயம் தெரிந்தும் விற்பனையை ஏன் தொடர்கிறது தெரியுமா?

சமீபத்தில் பஜாஜ் நிறுவனம் சி.டி. 100 பைக்கிற்கான விலையை ரூ 3000 - 3500 வரை குறைத்தது. இதன் பின் தான் ரூ 30 ஆயிரத்தில் விற்பனை செய்கிறது. இந்த விலையால் பிஜாஜ் நிறுவனம் நஷ்டத்தை தான் சந்திக்கிறது. இதை அந்நிறுவனம் உணர்ந்திருந்தாலும் அதை பற்றி கவலையில்லாமல் தொடர்ந்து விற்பனையை நடத்தி வருகிறது.

பஜாஜ் பைக் நஷ்டத்தில் விற்பனையாகிறதாம்; விஷயம் தெரிந்தும் விற்பனையை ஏன் தொடர்கிறது தெரியுமா?

இது குறித்து அந்நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில் : " பஜாஜ் சிடி 100 பைக்கின் விலை எங்களுக்கு நஷ்டத்தை தான் ஏற்படுத்தும். ஆனால் இந்தியாவில் கல்யாணத்திற் சீராக பைக் கொடுக்கும் பழக்கம் உள்ளது. அவர்கள் குறைந்த விலை பைக்குகளையே எதிர்பார்க்கின்றனர்.

பஜாஜ் பைக் நஷ்டத்தில் விற்பனையாகிறதாம்; விஷயம் தெரிந்தும் விற்பனையை ஏன் தொடர்கிறது தெரியுமா?

அந்த வாடிக்கையாளர்களை இழுக்கவும், குறைந்த விலை பைக் விற்பனை செய்வதால் அதிக பைக் விற்பனையாகும் அதனால் எங்களது சர்வீஸ் சென்டர்களை முடிந்த அளவு அதிகமாக பயன்படுத்தலாம் இதனால் நஷ்டத்தை பார்க்காமல் எங்கள் பைக்கை குறைந்த விலையில் விற்பனை செய்கிறோம்" இவ்வாறு கூறினார்.

பஜாஜ் பைக் நஷ்டத்தில் விற்பனையாகிறதாம்; விஷயம் தெரிந்தும் விற்பனையை ஏன் தொடர்கிறது தெரியுமா?

தற்போது விறுவிறுப்பாக விற்பனையாகி வரும் பஜாஜ் சி.டி 100 பைக்கில் மொத்தம் 3 விதமாக வேரியன்ட்கள் உள்ளன. இந்த 3 வேரியன்ட்டும் 99 சிசி, 4 ஸ்டோக் இன்ஜின், 4 ஸ்பீடு கியர் பாக்ஸ் கொண்டுள்ளது. இது 8.1 பிஎச்பி பவரையும், 8.05 என்எம் டாக் திறனையும் வெளிப்படுத்தக்கூடியது.

பஜாஜ் பைக் நஷ்டத்தில் விற்பனையாகிறதாம்; விஷயம் தெரிந்தும் விற்பனையை ஏன் தொடர்கிறது தெரியுமா?

முன் பக்கம் டெலஸ்கோபிக் போக்ஸ் மற்றும் பின்பக்கம் கேஸால் நிரப்பப்பட்ட ஷாக் அப்ஷர்பர்கள், பொருத்தப்பட்டுள்ளன. இரண்டு வீல்களிலும் டிரம் பிரேக்குகள் உள்ளது. 17 இன்ச் ஸ்போக்ஸ் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன. டாப் என்ட் மாடலில் மட்டும் அலாய் வீல் மற்றும் எலெக்ட்ரிக் ஸ்டார்ட் ஆப்ஷன்கள் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

English summary
Bajaj CT100 being sold for a loss but Bajaj Auto doesn’t mind. Read in Tamil
Story first published: Wednesday, May 23, 2018, 15:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X