யானையுடன் சண்டையிட்ட பைக்கின் விலை மீண்டும் உயர்ந்தது

பஜாஜ் நிறுவனத்தின் டோமினார் மக்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்றுள்ளது. இந்த பைக்கின் விலை கடந்த ஜனவரி மாதமே உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் ரூ 2000 உயர்த்தப்பட்டுள்ளது.

By Balasubramanian

பஜாஜ் நிறுவனத்தின் டோமினார் மக்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்றுள்ளது. இந்த பைக்கின் விலை கடந்த ஜனவரி மாதமே உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் ரூ 2000 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த பைக் விளம்பரத்தில் ராயல் என்பீல்டு பைக்கின் யானையாக சித்தரித்து அதனுடன் போட்டி போட்டு இந்த பைக் வெற்றி பெறுவது போல சித்தரிக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

யானையுடன் சண்டடையிட்ட பைக்கின் விலை உயர்ந்தது

பஜாஜ் நிறுவனத்தின் டோமினார் மக்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்றுள்ளது. இதற்கு முக்கிய காரணம் இதன் விளம்பரம் தான். ராயல் என்பீல்டு நிறுவனத்தை குறிவைத்து அவர்கள் செய்யும் விளம்பரம் மக்கள் மத்தியிலும், சமூகவலைதளத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

யானையுடன் சண்டடையிட்ட பைக்கின் விலை உயர்ந்தது

இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் புதிய கலர்கள் மற்றும் சில மாற்றங்களுடன் புதிய தோற்றத்தை பெற்றது டோமினார் அப்பொழுது 2017ம் ஆண்டு விற்பனை செய்யப்பட்ட விலையில் இருந்து சுமார் 4 ஆயிரம் ரூபாய் அதிகரித்தது.

யானையுடன் சண்டடையிட்ட பைக்கின் விலை உயர்ந்தது

இந்நிலையில் தற்போது மீண்டும் அந்த பைக்கின் விலை அதிகரித்துள்ளது. தற்போது ரூ 2 ஆயிரம் வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதையடுத்து சாதாரண வேரியன்டின் விலை ரூ 1.46 லட்சத்திற்கும் ஏ.பி.எஸ். வேரியண்ட் விலை ரூ 1.60 லட்சம் என எக்ஸ் ஷோரூம் விலைப்படி விற்பனையாகிறது.

யானையுடன் சண்டடையிட்ட பைக்கின் விலை உயர்ந்தது

இந்த பைக் விற்பனைக்கு வரும் போது நிர்ணயக்கப்பட்ட விலையை விட தற்போது ரூ 10 ஆயிரம் அதிகமாக விற்பனையாகி வருகிறது. இந்நிலையில் டோமினார் 400 பைக்கை பொருத்தவரை 80 சதவீதமான வாடிக்கையாளர்கள் ஏ.பி.எஸ். வேரியண்டை தான் விரும்புகின்றனர் என்றும், அதனால் விரைவில் சாதாரண வேரியண்ட் விற்பனையை நிறுத்தத போவதாகவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

யானையுடன் சண்டடையிட்ட பைக்கின் விலை உயர்ந்தது

டோமினார் 400 நேரடியாக ராயல் என்பீல்டு தண்டர்பேர்டு 350எக்ஸ், மற்றும் மஹேந்திரா மோஜோ யூடி 300 ஆகிய பைக்களுக்கு போட்டியாக திகழ்கிறது.

யானையுடன் சண்டடையிட்ட பைக்கின் விலை உயர்ந்தது

டோமினார் 400 பைக்கில் எல்.இ.டி,. ஹெட்லைட், எல்.சி.டி கிளஸ்டர், ஆகிய வசதிகள் உள்ளன. இன்ஜினை பொருத்தவரை 373 சிசி சிங்கிள் சிலிண்டர், பியூயல் இன்ஜெக்ஸன் இன்ஜின் பெஆருத்தப்பட்டுள்ளது. இது 8000 ஆர்.பி.எம்மில் 34.5 பி.எச்.பி பவர் மற்றும்6500 ஆர்.பி.எம்மில் 35 என் எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியது.

யானையுடன் சண்டடையிட்ட பைக்கின் விலை உயர்ந்தது

இந்த பைக்கில் 17 இன்ச் அலாய் வீல்கள், முன்பக்கம் 110 மிமீ டயர், பின் பக்கம் 150 மிமீ டயர் பொருத்தப்பட்டுள்ளுது. முன்வீலில் 320 மிமீ டிஸ்க், மற்றும் பின் வீலில் 230 மி.மீ., டிஸ்க் பிரேக்கும் பொருத்தப்பட்டுள்ளது. பைக்கின் பின் பக்கம் மேனாஷாக் சஸ்பென்ஸ் மற்றும் முன்பக்கம் டெலஸ்கோபிக் போக்ஸ் பொருத்தப்பட்டுள்ளுது.

யானையுடன் சண்டடையிட்ட பைக்கின் விலை உயர்ந்தது

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

English summary
Bajaj Dominar 400 prices hiked again. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X