மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் வருகிறது புதிய பஜாஜ் டோமினார் 400 பைக்!!

கடந்த 2016ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட பஜாஜ் டோமினார் 400 பைக் விற்பனையில் ஓரளவு வரவேற்பை பெற்ற மாடலாக இருந்து வருகிறது. ஆனால், பஜாஜ் நிறுவனம் எதிர்பார்த்த அளவு விற்பனை இல்லை.

மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய பஜாஜ் டோமினார் பைக் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. தற்போது இந்த பைக்கின் ஸ்பை படங்கள் வெளியாகி இருக்கின்றன.

மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் வருகிறது புதிய பஜாஜ் டோமினார் 400 பைக்!!

கடந்த 2016ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட பஜாஜ் டோமினார் 400 பைக் விற்பனையில் ஓரளவு வரவேற்பை பெற்ற மாடலாக இருந்து வருகிறது. ஆனால், பஜாஜ் நிறுவனம் எதிர்பார்த்த அளவு விற்பனை இல்லை. இதனையடுத்து, ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்களை சீண்டுவது போல பல விளம்பரங்களை வெளியிட்டு பிரபலம் தேடியது.

Image Source

மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் வருகிறது புதிய பஜாஜ் டோமினார் 400 பைக்!!

ஆனால், அதற்கும் எதிர்பார்த்த பலன் இல்லை என்று தெரிகிறது. இந்த நிலையில், புதுப்பொலிவுடன், கூடுதல் சிறப்பம்சங்களுடன் டோமினார் 400 பைக்கை பஜாஜ் ஆட்டோ நிறுவனம் மேம்படுத்தி வருகிறது. அடுத்த சில மாதங்களில் இந்த புதிய மாடல் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் வருகிறது புதிய பஜாஜ் டோமினார் 400 பைக்!!

மேம்படுத்தப்பட்டிருக்கும் புதிய பஜாஜ் டோமினார் 400 பைக்கின் ஸ்பை படங்கள் வெளியாகி இருக்கின்றன. கேடிஎம் டியூக் 390 பைக்கின் அடிப்படையிலான இந்த மாடலில், கூடுதலாக தற்போது ரைடு பை ஒயட் த்ராட்டில் தொழில்நுட்பம் சேர்க்கப்பட்டிருக்கும் என்று தெரிகிறது.

மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் வருகிறது புதிய பஜாஜ் டோமினார் 400 பைக்!!

அதேபோன்று, புதிய மாடலில் DOHC எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலமாக, இந்த பைக்கின் செயல்திறன் குறிப்பிடத்தக்க அளவில் மேம்பட்டிருக்கும் என்பது எதிர்பார்ப்பு. முன்புறத்தில் அப்சைடு டவுன் ஃபோர்க்குகளுடன் கூடிய சஸ்பென்ஷன் கொடுக்கப்பட இருப்பதால், சிறப்பான கையாளுமையை பெற்றிருக்கும்.

மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் வருகிறது புதிய பஜாஜ் டோமினார் 400 பைக்!!

புதிய பஜாஜ் டோமினார் 400 பைக்கில் கூடுதல் வசதிகளை வழங்கும் வகையில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் மேம்படுத்தப்பட்டு இருக்கும். இந்த மாற்றங்களுடன் கூடுதல் மதிப்பு வாய்ந்த மாடலாக பஜாஜ் டோமினார் வர இருக்கிறது.

மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் வருகிறது புதிய பஜாஜ் டோமினார் 400 பைக்!!

கேடிஎம் 390 மாடல்களில் இருக்கும் அதே 373சிசி ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் கொண்ட எஞ்சின்தான் டோமினார் பைக்கிலும் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 35 பிஎச்பி பவரையும், 35 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கில் மேம்படுத்தப்பட்ட ஸ்லிப்பர் க்ளட்ச் பயன்படுத்தப்பட இருக்கிறது.

மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் வருகிறது புதிய பஜாஜ் டோமினார் 400 பைக்!!

மேற்கண்ட மாற்றங்கள் தவிர்த்து, புதிய வண்ணங்களில் பஜாஜ் டோமினார் 400 பைக் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய மாடலில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் நிரந்தர பாதுகாப்பு வசதியாக அளிக்கப்பட இருக்கிறது. புதிய மாடல் ரூ.15,000 முதல் ரூ.20,000 கூடுதல் விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்படும்.

மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் வருகிறது புதிய பஜாஜ் டோமினார் 400 பைக்!!

பண்டிகை காலத்திலேயே புதிய பஜாஜ் டோமினார் 400 பைக் விற்பனைக்கு வந்துவிடும் என்ற தகவலும் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. குறிப்பாக, அப்சைடு டவுன் ஃபோர்க்குகள் சஸ்பென்ஷனும், ட்வின் போர்ட் சைலென்சர் மஃப்ளரும் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் அம்சங்களாக இருக்கும். எனவே, விற்பனையிலும் சற்று ஏற்றம் ஏற்படும் வாய்ப்பு இருக்கும் என்று நம்பலாம்.

More from DriveSpark

பஜாஜ் நிறுவனம் தற்போது விற்பனை செய்து வரும் பஜாஜ் டோமினோர் பைக்கின் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் மேலே காணலாம்.

Article Published On: Wednesday, September 19, 2018, 11:16 [IST]
English summary
The Bajaj Dominar 400 has been on sale in the Indian market since 2016 and it looks like Bajaj is readying an update for the sports cruiser. Yes, the Bajaj Dominar 400 has been spotted testing with several updates and it is expected to be launched in the coming months.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+