’யானை போல இருக்க வேண்டாம்’ ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தை வம்புக்கு இழுக்கும் பஜாஜ்..!!

Written By:

இந்தியாவில் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தை குறிவைத்து பஜாஜ் இயங்கி வருவது எல்லாருக்கும் தெரிந்தது தான்.

கடந்த வருடம் யானை கூட்டத்திற்கு மத்தியில் விருட்டென பாயும் பைக்குகளை வைத்து பஜாஜ் விளபரத்தை வெளியிட்டது.

ராயல் என்ஃபீல்டு பைக்குகளை யானையுடன் ஒப்பிடும் பஜாஜ்..!!

விளம்பரத்தில் இடம்பெற்றிருந்த யானைகள் ராயல் என்ஃபீல்டு பைக்குகள் எனவும், இந்திய வாகன விற்பனை சந்தையில் ராயல் என்ஃபீல்டு பைக்குகளை பஜாஜ்சரிநிகர் போட்டியாக கருதுவதாக செய்திகள் வெளியாயின.

ராயல் என்ஃபீல்டு பைக்குகளை யானையுடன் ஒப்பிடும் பஜாஜ்..!!

அதனை தொடர்ந்து தனது புதிய டாமினோர் பைக்குகளுக்கு வேண்டி புத்தம் புதிய மூன்று விளம்பர சிரீஸுகளை இந்தாண்டில் பஜாஜ் வெளியிட்டுள்ளது.

ராயல் என்ஃபீல்டு பைக்குகளை யானையுடன் ஒப்பிடும் பஜாஜ்..!!

அதில் ராயல் என்ஃபீல்டு தயாரிப்புகளை மீண்டும் யானைகள் போல உருவகப்படுத்தி ஹிந்தியில் 'ஹாத்தி மாட் பலோ' (யானையை எழுப்பாதே) என்ற வாசகத்துடன் விளம்பரம் வெளிவந்துள்ளது.

கிட்டத்தட்ட மூன்று விளம்பரங்கள் டாமினோர் பைக்கிற்காக வெளியாகியுள்ள நிலையில், அவற்றில் ராயல் என்ஃபீல்டு பைக்குகள் யானைகளாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது. இது ராயல் என்ஃபீல்டு ஆர்வலர்களை ஏகத்திற்கும் டென்ஷாக்கி உள்ளது.

சமூகவலைதளங்களில் பஜாஜ் வாகன ஆர்வலர்கள், ராயல் என்ஃபீல்டு தயாரிப்புகளை கலாய்த்து சிரிப்புகள் வரவைக்கும் அளவிற்கு மீம்ஸ் மற்றும் கருத்துகளை பரப்பி வருகின்றனர்.

ராயல் என்ஃபீல்டு பைக்குகளை யானையுடன் ஒப்பிடும் பஜாஜ்..!!

ஹாத்தி மட் பாலோ விளம்பரத்தில் ராயல் என்ஃபீல்டு தயாரிப்புகளுடன் ஒப்பிட்டு பஜாஜ் நிறுவனம் டாமினோர் பைக்கிற்கான மூன்று வலிமையான செய்திகளை முன்வைத்துள்ளது.

Recommended Video - Watch Now!
Auto Rickshaw Explodes In Broad Daylight
ராயல் என்ஃபீல்டு பைக்குகளை யானையுடன் ஒப்பிடும் பஜாஜ்..!!

அதில் முதல் விளம்பரம் ராயல் என்ஃபீல்டு தயாரிப்புகளில் பிரேக்கிங் குறைபாடு உள்ளதாக காட்டப்பட்டுள்ளது.

இரண்டாவது விளம்பரத்தில் ராயல் என்ஃபீல்டு பைக்கில் அமைந்துள்ள 'கோல்டு ஸ்டார்ட்' அம்சத்தை பஜாஜ் விமர்சித்துள்ளது.

மூன்றாவது விளம்பரத்தில் தான் பெரிய ஹைலைட்டான செய்தியே இடம்பெற்றுள்ளது. அதாவது ராயல் என்ஃபீல்டு பைக் செங்குத்தான பகுதிகளில் ஏறும்போது சோர்ந்துவிடுவதாக யானைகள் வழியே காட்டப்பட்டுள்ளது.

ராயல் என்ஃபீல்டு பைக்குகளை யானையுடன் ஒப்பிடும் பஜாஜ்..!!

நடுத்தர-எஞ்சின் பெற்ற வாகன விற்பனையில் இந்தியாவில் ராயல் என்ஃபீல்டு தான் கில்லி. இந்திய சந்தைக்கான நடுத்தர எஞ்சின் வாகன விற்பனை பிரிவில் 90 சதவீத சந்தையை ராயல் என்பீல்டு தக்கவைத்துள்ளது.

ராயல் என்ஃபீல்டு பைக்குகளை யானையுடன் ஒப்பிடும் பஜாஜ்..!!

இதை தகர்க்க பல்வேறு வாகன தயாரிப்பாளர்கள், நடுத்தர-எஞ்சின் செக்மென்டில் கால் பதிக்க ஆயத்தமாகி வருகிறார்கள். அவற்றில் அதிக முனைப்பு காட்டி வருவது இந்திய நிறுவனமான பஜாஜ் தான்.

ராயல் என்ஃபீல்டு பைக்குகளை யானையுடன் ஒப்பிடும் பஜாஜ்..!!

மற்ற நிறுவனங்களுக்கு ராயல் என்ஃபீல்டின் 350சிசி முதல் 500சிசி திறன் பெற்ற வாகனங்கள் தான் இலக்கு என்றாலும், பஜாஜ் இதே ரக வாகன விற்பனை பிரிவில் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தை நேரடியாகவே சீண்டி வருகிறது.

ராயல் என்ஃபீல்டு பைக்குகளை யானையுடன் ஒப்பிடும் பஜாஜ்..!!

பல ஆண்டுகளாகவே நடுத்தர எஞ்சின் செக்மென்டில் ராயல் என்ஃபில்டை கப்பம்கட்டி தூக்க பல்வேறு பைக் தயாரிப்பாளர்கள் கடுமையாக போராடினார். ஆனால் எல்லாம் வீண் தான்.

ராயல் என்ஃபீல்டு பைக்குகளை யானையுடன் ஒப்பிடும் பஜாஜ்..!!

இந்த நிலையில் பஜாஜ் ஆட்டோ தன்னுடைய வேட்கையை மேலும் வலிமைப்படுத்தியுள்ளது. தற்போது வெளியான இந்த விளம்பரங்களின் மூலம் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தை பஜாஜ் நேரடியாக தாக்கியுள்ளது.

ராயல் என்ஃபீல்டு பைக்குகளை யானையுடன் ஒப்பிடும் பஜாஜ்..!!

ராயல் என்ஃபீல்டு மாடல் பைக்குகளை விட, பஜாஜின் டாமினோர் 400 மோட்டார் சைக்கிள் தொழில்நுட்ப ரீதியில் சிறந்த தயாரிப்பு தான் என்றாலும், அதன் சந்தை லாபத்தை டாமினோர் 400 பைக்கால்ஏனோ நெருங்க நெருங்க முடியவில்லை.

ராயல் என்ஃபீல்டு பைக்குகளை யானையுடன் ஒப்பிடும் பஜாஜ்..!!

2018 டாமினோர் மாடல் பைக்கை பஜாஜ் நிறுவனம் புதிய நிற தேர்வுகளில் வெளியிட்டுள்ளது. இதன் காரணமாக டாமினோர் 400 பைக்குகளின் விற்பனை அதிகரிக்கும் என பஜாஜ் திட்டமிடுகிறது.

ராயல் என்ஃபீல்டு பைக்குகளை யானையுடன் ஒப்பிடும் பஜாஜ்..!!

இந்த பைக் வெளியீட்டு விழா நடைபெற்ற தருணத்தில் இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் 10,000 பைக்குகளை பஜாஜ் விற்கும் எல சொல்லப்பட்டது. ஆனால் சராசரியாக மாத இறுதியில் 1500 டாமினோர் பைக்குகள் மட்டுமே விற்பனையாகி வருகிறது.

ராயல் என்ஃபீல்டு பைக்குகளை யானையுடன் ஒப்பிடும் பஜாஜ்..!!

பஜாஜின் விற்பனை நிலவரம் இப்படியிருக்க, ராயல் என்ஃபீல்டு சந்தையோ எகிறிக்கொண்டு இருக்கிறது. இதுவரை 76,205 இருசக்கர வாகனங்களை ராயல் என்ஃபீல்டு விற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

ராயல் என்ஃபீல்டு பைக்குகளை யானையுடன் ஒப்பிடும் பஜாஜ்..!!

இந்திய நடுத்தர பைக் விற்பனை சந்தையில் கடந்தாண்டை விட இந்தாண்டு ஜனவரி 30ம் தேதி வரையில் ராயல் என்ஃபீல்டு 30 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளது.

ராயல் என்ஃபீல்டு பைக்குகளை யானையுடன் ஒப்பிடும் பஜாஜ்..!!

ராயல் என்ஃபீல்டு சந்தை ஒருபக்கம் வளர்ந்துக்கொண்டே சென்றாலும், இந்தியாவில் 400சிசி செக்மென்ட் பைக் விற்பனையில் ராயல் என்ஃபீல்டிற்கு மாற்று டாமினோர் 400சிசி என்றே பஜாஜ் பிரச்சாரம் செய்து வருகிறது.

ராயல் என்ஃபீல்டு பைக்குகளை யானையுடன் ஒப்பிடும் பஜாஜ்..!!

373சிசி திறன் பெற்ற பஜாஜ் டாமினோர் 400 மாடல், 35 பிஎச்பி பவர் மற்றும் 35 என்.எம் டார்க் திறனை அதிகப்பட்சமாக வழங்கும்.

6 ஸ்பீடு கியர்பாக்ஸ் பெற்ற இந்த பைக் ஏபிஎஸ் மற்றும் ஏபிஎஸ் தேவை இல்லாமல் கிடைக்கிறது. இதனுடைய ஆரம்ப விலை ரூ. 1.42 லட்சம்.

ராயல் என்ஃபீல்டு பைக்குகளை யானையுடன் ஒப்பிடும் பஜாஜ்..!!

ராயல் என்ஃபீல்டு பைக்குகளை ஒப்பிட்டு பார்க்கும் போது பஜாஜ் டாமினோர் 400சிசி தொழில்நுட்ப தேவைகளில் மிகுந்த முன்னோடியாக உள்ளது.

ராயல் என்ஃபீல்டு பைக்குகளை யானையுடன் ஒப்பிடும் பஜாஜ்..!!

இருந்தாலும் சாலைகளில் செல்லும் போது அனைவரையும் கவனிக்க வைப்பது ராயல் என்ஃபீல்டு மாடல்களே என்பதால், இந்திய வாடிக்கையாளர்கள்பஜாஜ் டாமினோர் 400 பைக் வாங்குவதில் பெரிய ஆர்வம் காட்டுவதில்லை.

பார்ப்பதற்கு பாபர் ஸ்டைல் போலவே இருக்கும் இந்த பைக் எது தெரியுமா..?? அசரடிக்கும் ஒரு மாடிஃபிகேஷன்..!

பார்ப்பதற்கு பாபர் ஸ்டைல் போலவே இருக்கும் இந்த பைக் எது தெரியுமா..?? அசரடிக்கும் ஒரு மாடிஃபிகேஷன்..!

இரவில் யாருமே இல்லாத சாலையில் ஒற்றை ஆளாக ஒரு க்ரூஸரோ அல்லது பாபர் ரக பைக்கிலோ நிதானமான ஒரு ரைட் செல்வதில் பலருக்கும் ஆவலாக இருக்கலாம்.

பார்ப்பதற்கு பாபர் ஸ்டைல் போலவே இருக்கும் இந்த பைக் எது தெரியுமா..?? அசரடிக்கும் ஒரு மாடிஃபிகேஷன்..!

பைக்கில் செல்லும் போது இரவில் ஒளிரும் தெருவிளக்குகளை ஒவ்வொன்றாக கடக்கும் போது ஏற்படும் சிலிர்ப்பு எதற்குமே ஈடாகாது.

பார்ப்பதற்கு பாபர் ஸ்டைல் போலவே இருக்கும் இந்த பைக் எது தெரியுமா..?? அசரடிக்கும் ஒரு மாடிஃபிகேஷன்..!

இந்த அனுபவத்தை பைக்கில் நிதானமாக செல்லும் போதுதான் முழுமையாக பெற முடியும். நிதானமான ரைடிங்கிற்கு வேண்டி இந்தியாவில் பல வாகன ஆர்வலர்கள் க்ரூஸர் ரக பைக்குகளை தேடி செல்வது தான் வழக்கம்.

பார்ப்பதற்கு பாபர் ஸ்டைல் போலவே இருக்கும் இந்த பைக் எது தெரியுமா..?? அசரடிக்கும் ஒரு மாடிஃபிகேஷன்..!

ஆனால் இன்றைய வாகன ஆர்வலர்கள் பலர் பாபர் ரக பைக்குகள் மீது பெரிய மோகம் கொண்டுள்ளனர். இந்த ரக பைக்குகளை வாங்குவது அவ்வளவு எளிதான காரியமல்ல.

பார்ப்பதற்கு பாபர் ஸ்டைல் போலவே இருக்கும் இந்த பைக் எது தெரியுமா..?? அசரடிக்கும் ஒரு மாடிஃபிகேஷன்..!

குறிப்பிட்ட நாடுகளுக்காகவும் மற்றும் எண்ணிக்கையில் மட்டும் தான் பாபர் ரக பைக் மாடல்களை பெரும்பாலான நிறுவனங்கள் தயாரித்து வழங்குகின்றன.

பார்ப்பதற்கு பாபர் ஸ்டைல் போலவே இருக்கும் இந்த பைக் எது தெரியுமா..?? அசரடிக்கும் ஒரு மாடிஃபிகேஷன்..!

பாபர் ரக பைக்குகள் ஏற்கனவே முன்பதிவு செய்து விற்பனைக்கு வருவதால் இந்தியாவில் விரல்விட்டு எண்ணக்கூடியவர்கள் தான் பாபர் ரக பைக்குகள் வைத்துள்ளனர்.

பார்ப்பதற்கு பாபர் ஸ்டைல் போலவே இருக்கும் இந்த பைக் எது தெரியுமா..?? அசரடிக்கும் ஒரு மாடிஃபிகேஷன்..!

இப்படியொரு குறையை போக்க புல்லட்டீர் கஸ்டமஸ் என்ற நிறுவனம், ராயல் என்ஃபீல்டு பைக் மாடல் ஒன்றில் பிளாக்-அவுட் என்ற கஸ்டமஸ் பாபர் ரக பைக்கை உருவாக்கியுள்ளது.

பார்ப்பதற்கு பாபர் ஸ்டைல் போலவே இருக்கும் இந்த பைக் எது தெரியுமா..?? அசரடிக்கும் ஒரு மாடிஃபிகேஷன்..!

யுஎஸ்டி ஃபோர்க்ஸ், நவீன ரப்பர் பொருத்தப்பட்ட டயர்கள், ஃபிளஷ் ஃபிட்டிங் ஃபென்டர் மற்றும் எல்.இ.டி திறன் கொண்ட விளக்கு அமைப்புகள் என ஒரு புதிய ரக பாபர் மாடலாகவே பிளாக்-அவுட் இருக்கிறது.

பார்ப்பதற்கு பாபர் ஸ்டைல் போலவே இருக்கும் இந்த பைக் எது தெரியுமா..?? அசரடிக்கும் ஒரு மாடிஃபிகேஷன்..!

சிங்கிள் பாட் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் கொண்ட இந்த பைக்கில், ராயல் என்ஃபீல்டு தயாரிப்புகளில் இருக்கும் ஓ.ஆர்.வி.எம் அப்படியே உள்ளது. ஆனால் இந்த பைக்கின் செயல்திறன் அதிகளவில் கொண்டுவர அதற்கு ஏற்றவாறான கட்டமைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பார்ப்பதற்கு பாபர் ஸ்டைல் போலவே இருக்கும் இந்த பைக் எது தெரியுமா..?? அசரடிக்கும் ஒரு மாடிஃபிகேஷன்..!

பைக்கின் எஞ்சின், ஃபிரேம் உள்ளிட்ட அனைத்து கட்டமைப்புகளும் புதிய தோற்றத்தை தருகின்றன. சேடில் வகை இருக்கை பின்பகுதிக்கான கேஸ்-சார்ஜிடு ரியர் ஸ்பிரிங்குடன் இணைக்கப்பட்டுள்ளது.

பார்ப்பதற்கு பாபர் ஸ்டைல் போலவே இருக்கும் இந்த பைக் எது தெரியுமா..?? அசரடிக்கும் ஒரு மாடிஃபிகேஷன்..!

தவிர, ஒற்றை பகுதியில் சிறியளவிலான ஃபாக்ஸ் யூனிட் எக்ஸாஸ்ட் பைப்பின் அமைப்பை கொண்டு இந்த பிளாக்அவுட் பாபர் பைக்கின் கஸ்டமைஸ் அம்சங்களை கணித்துவிடலாம்.

பார்ப்பதற்கு பாபர் ஸ்டைல் போலவே இருக்கும் இந்த பைக் எது தெரியுமா..?? அசரடிக்கும் ஒரு மாடிஃபிகேஷன்..!

ஆனால் அந்த கஸ்டமைஸ் பணிகள் எந்த பைக் மாடலிலிருந்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பதை அறிய ராயல் என்ஃபீல்டு தயாரிப்புகளின் தீவிர ரசிகாராக இருத்தல் அவசியம்.

பார்ப்பதற்கு பாபர் ஸ்டைல் போலவே இருக்கும் இந்த பைக் எது தெரியுமா..?? அசரடிக்கும் ஒரு மாடிஃபிகேஷன்..!

கஸ்டமைஸ் செய்யப்பட்ட ஸ்விங்ஆர்ம் பைக்கின் சக்கரங்களோடு இணைக்கப்பட்டுள்ளது. ஸ்விங்ஆர்ம் நீண்டு பிரம்மாண்டமான அந்த சக்கரங்களோடு இணைவதை பார்க்கும் நமக்கு மூர்ச்சை வந்துவிடுகிறது.

பார்ப்பதற்கு பாபர் ஸ்டைல் போலவே இருக்கும் இந்த பைக் எது தெரியுமா..?? அசரடிக்கும் ஒரு மாடிஃபிகேஷன்..!

பைக்கின் பின்பகுதிக்குரிய விளக்குகள், ஒரு மெல்லிய பட்டையில் எல்.இ.டி திறனில் கொடுக்கப்பட்டுள்ளது. அது சேடில் இருக்கையுடன் பொருத்தப்பட்டு உள்ளது பார்க்க புதிய ஸ்டைலாக உள்ளது.

பார்ப்பதற்கு பாபர் ஸ்டைல் போலவே இருக்கும் இந்த பைக் எது தெரியுமா..?? அசரடிக்கும் ஒரு மாடிஃபிகேஷன்..!

புல்லட்டீர் கஸ்டம்ஸ் நிறுவனம் பிளாக்-அவுட் கஸ்டமைஸ் பைக்கிற்கான புகைப்படங்கள் மற்றும் தகவல்களை பகிர்ந்த கொண்டபின், உடனே அது இணையதளங்களில் வைரலாகி உள்ளது.

பார்ப்பதற்கு பாபர் ஸ்டைல் போலவே இருக்கும் இந்த பைக் எது தெரியுமா..?? அசரடிக்கும் ஒரு மாடிஃபிகேஷன்..!

ட்வின் மோட்டார் திறன் பெற்ற இந்த பாபர் ரக கஸ்டமைஸ் பைக்கை எங்களது சாலைக்கு எடுத்து வாருங்கள், நாங்கள் செல்ஃபி எடுத்து கொள்கிறோம் என புல்லட்டீர் கஸ்டம்ஸ் நிறுவனத்திற்கு பலரிடமிருந்து கோரிக்கைகள் கிடைக்கப்பெற்று வருகின்றன.

மேலும்... #பஜாஜ் #bajaj
English summary
Read in Tamil: Bajaj Dominar 'Haathi Mat Paalo' Part 2 Ads Takes A Sly Dig At Royal Enfield. Click for Details...

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark