விலை குறைவான புதிய பஜாஜ் பல்சர் 150 பைக் விற்பனைக்கு அறிமுகம்!!
விலை குறைவான புதிய பஜாஜ் பல்சர் 150 மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. பஜாஜ் பல்சர் 150 கிளாசிக் என்ற பெயரில் வந்துள்ள இந்த மாடலிலல், சாதாரண பல்சர் 150 மாடலில் இருக்கும் சில ஆக்சஸெரீக
விலை குறைவான புதிய பஜாஜ் பல்சர் 150 மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த புதிய மாடலின் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

பஜாஜ் பல்சர் 150 கிளாசிக் என்ற பெயரில் இந்த விலை குறைவான மாடல் விற்பனைக்கு வந்துள்ளது. சாதாரண பல்சர் 150 மாடலில் இருக்கும் சில ஆக்சஸெரீகள் நீக்கப்பட்டு இருக்கின்றன.

குறிப்பாக, சாதாரண மாடலில் இடம்பெற்றிருக்கும் பின்புற டிஸ்க் பிரேக், ஸ்பிளிட் இருக்கைகள், பெட்ரோல் டேங்க் ஸ்கூப், கிராஃபிக் ஸ்டிக்கர் போன்ற அம்சங்கள் இந்த பல்சர் 150 கிளாசிக் மாடலில் இடம்பெறவில்லை.

இந்த மாடலுக்கு ரூ.67,437 மும்பை எக்ஸ்ஷோரூம் விலையாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இது இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் கொண்ட விலை உயர்ந்த பல்சர் 150 மாடலைவிட ரூ.10,118 வரை விலை குறைவான மாடலாக வந்திருக்கிறது.

எஞ்சினில் மாற்றங்கள் இல்லை. இந்த பைக்கில் இருக்கும் 149சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் அதிகபட்சமாக 14 எச்பி பவரையும், 13.4 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

ஃப்ரேம் எனப்படும் அடிச்சட்டம் மற்றும் சஸ்பென்ஷனிலும் எந்த மாற்றங்களும் இல்லலை. முன்சக்கரத்தில் 240மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்சக்கரத்தில் 130மிமீ டிரம் பிரேக்கும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

பல்சர் 150 கிளாசிக் மாடல் கருப்பு வண்ணத்தில் மட்டுமே கிடைக்கும். கடந்த 2006ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட பல்சர் 150 யூஜி-3 மாடலின் சாயலை ஒத்திருக்கிறது. இந்த பைக் குறித்த விபரங்கள் இன்னும் பஜாஜ் இணையதளத்தில் பதிவேற்றப்படவில்லை.

எனினும், அடுத்த வாரம் டீலர்களுக்கு இந்த புதிய மாடல் விற்பனைக்கு வந்துவிடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பல்சர் 135 எல்எஸ் மாடலுக்கு அடுத்து விலை குறைவான பல்சர் வரிசை பைக் மாடல் என்பதால், வாடிக்கையாளர் மத்தியில் அ்திக வரவேற்பு இருக்கும் என்று கருதப்படுகிறது.

ஹோண்டா யூனிகார்ன் மற்றும் ஹீரோ அச்சீவர் பைக் மாடல்களுக்கு போட்டியாக இந்த புதிய மாடல் கொண்டு வரப்பட்டுள்ளது. மூன்றாம் நிலை நகரங்களை சேர்ந்த வாடிக்கையாளர்களை குறிவைத்து இந்த புதிய மாடல் களமிறக்கப்படுகிறது.
Source:Autocar


Click it and Unblock the Notifications