பஜாஜ் பல்சர் 150 கிளாசிக் எடிசனில் புதிய வண்ணங்கள் அறிமுகம்!

கடந்த ஜூன் மாதம் பஜாஜ் பல்சர் 150 கிளாசிக் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், தற்போது பல்சர் 150 கிளாசிக் பைக் மாடலில் மூன்று புதிய வண்ணத் தேர்வுகள் அறிமுகம் செய்யப்பட்ட

பஜாஜ் பல்சர் 150 பைக்கில் கிளாசிக் எடிசன் மாடல் புதிய வண்ணத் தேர்வுகளில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த புதிய மாடல் குறித்த விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

பஜாஜ் பல்சர் 150 கிளாசிக் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்!

கடந்த ஜூன் மாதம் பஜாஜ் பல்சர் 150 கிளாசிக் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. 2006ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட பல்சர் 150 பைக்கை பிரதிபலிக்கும் அம்சங்களுடன் விலை குறைவான மாடலாக நிலைநிறுத்தப்பட்டது.

பஜாஜ் பல்சர் 150 கிளாசிக் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த நிலையில், தற்போது பல்சர் 150 கிளாசிக் பைக் மாடலில் மூன்று புதிய வண்ணத் தேர்வுகள் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. முழுவதுமான கருப்பு, சிவப்பு அலங்காரத்துடன் கருப்பு வண்ணத் தேர்வு மற்றும் சில்வர் வண்ண அலங்காரத்துடன் கருப்பு வண்ணம் என மூன்று புதிய வண்ணங்களில் கிடைக்கும்.

Recommended Video

புதிய ஹீரோ டெஸ்ட்டினி 125 ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!
பஜாஜ் பல்சர் 150 கிளாசிக் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்!

ஹெட்லைட்டுக்கு மேல்புறம், சக்கரங்கள் மற்றும் பக்கவாட்டில் உள்ள ஏர் வென்ட்டுகளில் சில்வர் அல்லது சிவப்பு வண்ணம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதுதவிர, லோகோவும், இருக்கைகளில் தையல்களும் சிவப்பு அல்லது சில்வர் வண்ணத்தில் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இது தனித்துவமான பல்சர் 150 மாடலாக வேறுபடுகிறது.

பஜாஜ் பல்சர் 150 கிளாசிக் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த புதிய மாடல்கள் குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் எதுவும் இல்லை. ஆனால், டீலர்களுக்கு இந்த புதிய மாடல்கள் வந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

பஜாஜ் பல்சர் 150 கிளாசிக் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்!

பஜாஜ் பல்சர் 150 கிளாசிக் பைக்கில் 149சிசி ஏர்கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 14 எச்பி பவரையும், 13.4 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

பஜாஜ் பல்சர் 150 கிளாசிக் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்!

முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் கேஸ் சார்ஜ்டு ஷாக் அப்சார்பர்களும் உள்ளன. இந்த பைக்கில் முன்சக்கரத்தில் 240 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் 130 மிமீ டிரம் பிரேக்கும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இது பழைய பல்சர் 150 மாடலின் அடிப்படையில் வந்திருப்பதால், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் அவசியப்படாது. வரும் மார்ச் மாதத்தோடு விற்பனை நிறுத்தப்படலாம்.

பஜாஜ் பல்சர் 150 கிளாசிக் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய பல்சர் 150 கிளாசிக் மாடலுக்கு ரூ.65.500 எக்ஸ்ஷோரூம் விலையாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. பஜாஜ் டீலர்களில் இந்த புதிய பைக் வருகை குறித்து விசாரணை செய்து கூடுதல் தகவல்களை பெற முடியும்.

Source: Ujjwal Saxena

2018 பஜாஜ் டோமினார் பைக்கின் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் இங்கே காணலாம்.

English summary
Bajaj has launched the Pulsar 150 Classic with to new colour options at an ex-showroom price of Rs 65,500. This development takes the total number of colours to three - Black, Black with Red highlights and Black with Silver highlights.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X