பஜாஜ் பல்சர் 150 நியான் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்!

கவர்ச்சிகர அம்சங்களுடன் கூடிய புதிய பஜாஜ் பல்சர் 150 நியான் எடிசன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. பஜாஜ் பல்சர் 150 நியான் மாடலானது கருப்பு வண்ணத்தில் சில அலங்கார பெயிண்ட்டிங் வேலைப்பாடு

கவர்ச்சிகர அம்சங்களுடன் கூடிய புதிய பஜாஜ் பல்சர் 150 நியான் எடிசன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த புதிய மாடல் குறித்த முழுமையான விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

பஜாஜ் பல்சர் 150 நியான் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்!

பஜாஜ் பல்சர் 150 நியான் மாடலானது கருப்பு வண்ணத்தில் சில அலங்கார பெயிண்ட்டிங் வேலைப்பாடுகளுடன் வந்துள்ளது. ஹெட்லைட் ஸ்கூப், பெட்ரோல் டேங்க்கில் பல்சர் பேட்ஜ், பக்கவாட்டு பேனல் க்ரில் அமைப்பு மற்றும் கிராப் ரெயில் கைப்பிடிகளுக்கு பளிச்சென தெரியும் விதத்தில் விசேஷ வண்ணம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

பஜாஜ் பல்சர் 150 நியான் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்!

நியான் ரெட், நியான் சில்வர் மற்ஔறும் மேட் பிளாக் என்ற மூன்று விதமான வண்ணங்களில் இந்த புதிய மாடல் கிடைக்கும். பார்ப்பதற்கு கஸ்டமைஸ் செய்யப்பட்டது போன்ற தோற்றத்தை தருகிறது.

பஜாஜ் பல்சர் 150 நியான் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த பைக்கில் 149சிசி சிங்கிள் சிலிண்டர் டிடிஎஸ்-ஐ எஞ்சின்தான் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 13.8 பிஎச்பி பவரையும், 13.4 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

பஜாஜ் பல்சர் 150 நியான் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்!

பல்சர் 150 நியான் மாடலில் முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் ட்வின் ஷாக் அப்சார்பர்களும் பொருத்தப்பட்டுள்ளன. முன்சக்கரத்தில் 240 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் 130 மிமீ டிரம் பிரேக்கும் பொருத்தப்பட்டுள்ளன. ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் இல்லை.

பஜாஜ் பல்சர் 150 நியான் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த புதிய பல்சர் 150 நியான் மாடல் அறிமுகம் குறித்து பஜாஜ் ஆட்டோ மோட்டார்சைக்கிள் பிரிவுத் தலைவர் எரிக் வாஸ் கூறுகையில்," கடந்த 17 ஆண்டுகளாக பல்சர் பைக் இந்தியாவின் ஆரம்ப ரக ஸ்போர்ட்ஸ் ரக பைக்குகளில் நம்பர் - 1 மாடலாக வலம் வருகிறது.

பஜாஜ் பல்சர் 150 நியான் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய பல்சர் 150 நியான் பைக்கின் தோற்றமும், சாலை ஆளுமை திறனும் வாடிக்கையாளர்களை பெரிதும் கவரும் என்று நம்புகிறோம். 100 மற்றும் 110சிசி ரகத்திலிருந்து சற்று பெரிய பைக்கை வாங்க விரும்புவோருக்கு இந்த பல்சர் 150 நியான் எடிசன் மிகச் சரியான தேர்வாக அமையும்," என்று தெரிவித்தார்.

பஜாஜ் பல்சர் 150 நியான் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த புதிய பல்சர் 150 நியான் மாடல் ரூ.64,998 டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. ஹோண்டா யூனிகார்ன் 150, சுஸுகி ஜிக்ஸெர் 155, ஹீரோ அச்சீவர் 150 ஆகிய மாடல்களுடன் போட்டி போடும்.

Article Published On: Friday, November 30, 2018, 11:04 [IST]
English summary
Bajaj Auto has launched the 2019 Pulsar 150 Neon collection in India. The Bajaj Pulsar 150 Neon is priced at Rs 64,998, ex-showroom (Delhi).
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+