கவஸாகி நின்ஜா ஹெச்2 ஹைப்பர்பைக் தோற்றத்திற்கு மாற்றப்பட்ட பல்சர் ஆர்.எஸ் 200 மோட்டார் சைக்கிள்..!!
கவஸாகி நின்ஜா ஹெச்2 ஹைப்பர்பைக் தோற்றத்திற்கு மாற்றப்பட்ட பல்சர் ஆர்.எஸ் 200 மோட்டார் சைக்கிள்..!!
இன்றைய இளைய தலைமுறையினர் விரும்பும் பிரபல பைக்குகளில் ஒன்று பஜாஜ் பல்சர் ஆர்.எஸ் 200. ரூ. 2 லட்சம் பட்ஜெட்டுக்குள் பைக் வாங்க விரும்புபவர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாக இருந்து வருகிறது.

சமீபத்தில் ஃபேஸ்புக் பக்கம் ஒன்றில் பதிவிடப்பட்ட ஒரு பைக்கின் புகைப்படம் வைரலை கிளப்பியுள்ளது. அதற்கான காரணங்கள் மிகவும் சுவாரஸ்யத்தை கூட்டியுள்ளன.

கீழே புகைப்படத்திலிருக்கும் பைக் உங்களுக்கு கவாஸாகியின் நின்ஜா ஹெச்2 சூப்பர்பைக் போல தெரியலாம். ஆனால் இது உண்மையிலே அந்த பைக் கிடையாது.
அப்படியே நின்ஜா ஹெச்2 பைக்கின் காப்பி-கேட்டாக தோன்றும் இந்த பைக் பல்சர் ஆர்.எஸ் 200. நின்ஜா ஹெச்2 போல இது மாடிஃபிகேஷன் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் விற்பனையாகும் என்ட்ரி லெவல் பர்ஃபாமென்ஸ் மோட்டார் சைக்கிள்களில் பஜாஜ் பல்சர் ஆர்.எஸ் 200 சரியாக கல்லா கட்டும் பைக்காக உள்ளது.
டாமினோர் 400 பைக் வெளியான போதிலும் பல்சர் ஆர்.எஸ் 200 பர்ஃபாமென்ஸ் பைக் செக்மென்டில் நின்று விளையாடி வருகிறது.

புதிய நிற தேர்வு, புத்துணர்ச்சி அளிக்கும் கிராஃபிக்ஸ் வேலைபாட்டில் நின்ஜா ஹெச்2 பைக் கலக்குகிறது. வியட்நாமை சேர்ந்த லீயட் மோட்டோ என்ற நிறுவனம் இதை உருவாக்கியுள்ளது.

இந்த பைக்கின் முன்பக்கத்தில் உயரமான வின்ட்ஷீல்டு, ஹெச்-2 முகப்பு விளக்கு மற்றும் கார்பன் ஃப்பைபர் ஏக்சென்ட் பெற்ற கூர்மையான எட்ஜ் என அப்படியே ஹெச்2 ஹைப்பர் பைக்கை நினைவுப்படுத்துகிறது.

கருப்பு மற்றும் சில்வர் என இருவேறு வண்ணப்பூச்சுகளை பெற்றுள்ள இந்த பைக், கிளிப்-ஆன் ஹேண்டில்பார், யுஎஸ்டி டெலஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் அக்ராபோவிக் எக்ஸாஸ்ட் சிஸ்டத்தை பெற்றுள்ளது.

இதுதவிர கவாஸாகி நின்ஜா ஹெச்2 பைக்கில் இருக்கக்கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் பேனல் மற்றும் ஸ்விட்ச்கியர் தேவைகள் இந்த பைக்கில் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

இந்த பைக்கின் பக்கவாட்டு பகுதியில் நின்ஜா ஹெச்2 மாடலில் இருக்கும் பச்சை நிறத்திலான ஃபாக்ஸ்-ட்ரெல்லிஸ் ஃபிரேம் இதிலும் உள்ளது. அதேபோல குறைந்த விலை சந்தையில் கிடைக்கும் அக்ராபோவிக் எக்ஸாஸ்ட் பம்ப் பொருத்தப்பட்டுள்ளது.

நின்ஜா ஹெச்2 ஹைப்பர்பைக் தோற்றத்தை பெற்றிருந்தாலும், இந்த பல்சர் ஆர்.எஸ் 200 மாடலின் சில பக்கவாட்டு அமைப்புகள் மற்றும் அலாய் சக்கரங்களில் மாடிஃபிகேஷன் எதுவுமில்லை.

நின்ஜா ஹெச்2 பைக்கின் தோற்றத்தை பெரும்பாலும் நம் கண் முன் நிறுத்தும் இந்த மாடிஃபிகேஷன் பைக்கிற்கு அதை தயாரித்த லியட் மோட்டோ பல்சர் ஆர்.எஸ்2 என்று பெயரிட்டுள்ளது.

முன்பக்கம் மற்றும் பைக்கின் பக்கவாட்டில் மாடிஃபிகேஷன் திருத்தமாக மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், இந்த பல்சர் ஆர்.எஸ் 200 பைக்கின் பின்பகுதி அவ்வளவாக கவாஸாகி நின்ஜா ஹெச்2 பைக் போல இல்லை.

பஜாஜ் பல்சர் ஆர்.எஸ் 200 பைக்கின் இந்த மாடிஃபிகேஷன் தோற்றம் பெரியளவில் கவர்ந்துள்ளது. இணையதளங்களில் வெளியாகியுள்ள இந்த புகைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications








