புதிய அட்வென்ச்சர் எடிசன் மாடலில் பஜாஜ் பல்சர் என்.எஸ் 200 பைக் அறிமுகம்- தகவல்களுடன் படங்கள்..!!
புதிய அட்வென்ச்சர் எடிசன் மாடலில் பஜாஜ் பல்சர் என்.எஸ் 200 பைக் அறிமுகம்- தகவல்களுடன் படங்கள்..!!
துருக்கி நாட்டில் இஸ்தான்புல் மோட்டார் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் பஜாஜ் நிறுவனம் தயாரித்துள்ள புதிய பல்சர் ஆர்.எஸ் 200 பைக்கின் அட்வென்ச்சர் மாடல் காட்சிப்படுத்தப்பட்டது.

நேக்கிடு ரக மோட்டார் சைக்கிளான இதில் புதிய தோற்றப்பொலிவுகளை பெற்றுள்ளது. இந்த புதிய அப்டேட்டுகள் பல்சர் என்.எஸ் 200 அட்வென்ச்சர் பைக்கை டூரிங்-ஃபிரென்ட்லி மோட்டார்சைக்கிளாக மாற்றியுள்ளது.

பஜாஜ் பல்சர் என்.எஸ் 200 அட்வென்ச்சர் ரக மோட்டார் சைக்கிளான இதில் ஹெட்லைட் க்ரில், நக்கிள் கார்டு, எஞ்சின் பேஷ் பிளேட் மற்றும் அக்சில்லர் லைட் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த அமைப்புகள் அனைத்தும் இந்த மோட்டார் சைக்கிளுக்கு முரட்டுத்தனமான தோற்றத்தை தருகிறது. பைக்கின் முன்பக்க கவுல் மற்றும் ரேடியட்டர் இதை ஒரு தத்ரூபமான அட்வென்ச்சர் பைக்காகவே தோன்றச்செய்கிறது.

இதுதவிர பஜாஜ் நிறுவனம் பல்சர் என்.எஸ் 200 அட்வென்ச்சர் எடிசன் பைக்கின் பின்பகுதியில் சேடில் பேக் அல்லது பேணியர் ஃபிரேமை பொருத்தியுள்ளது.
இப்படியொரு அட்வென்ச்சர் பைக்கில் இப்படி ஒரு வசதியால் மோட்டார் சைக்கிளில்லக்கேஜை வைத்துக்கொள்வது எளிமையாகிறது.

பைக்கின் பில்லியன் ரைடர் பிடிக்க உதவும் கிராப் ரெயில் ட்வீக் செய்யப்பட்டு கூடுதல் பெட்டியை வைக்கும் வசதியை வழங்குகிறது. இத்துடன் ஹேண்டில்பாரில் நேவிகேஷன் சாதனை வைக்கப்பட்டுள்ளது சரியாக உள்ளது.

பஜாஜ் நிறுவனத்தின் பல்சர் என்.எஸ் 200 பைக்கில் 200சிசி சிங்கிள் சிலிண்டர் கொண்ட எஞ்சின் லிக்விடு கூல்டு திறனில் உள்ளது. இது அதிகப்பட்சமாக 24 பிஎச்பி பவர் மற்றும் 18.6 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தும்.

பல்சர் என்.எஸ் 200 போலவே இந்த பைக்கின் மெக்கானிக் அம்சங்களில் எவ்வித மாற்றமுமில்லை. எஞ்சினின் சரியான செயல்பாட்டிற்காக இந்த பைக் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் பெற்றுள்ளது.

புதிய பஜாஜ் பல்சர் என்.எஸ் 200 அட்வென்ச்சர் எடிசனில் பைக்கின் முன்சக்கரத்தில் டெலஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் மோனோஷாக் அப்ஸபர்கள் ஆகியவை சஸ்பென்ஷன் தேவையை பூர்த்தி செய்கிறது.


Click it and Unblock the Notifications








