பஜாஜ் பல்சர் ஆர்.எஸ். 200 பைக்கில் புதிய ரேசிங் ரெட் எடிசன் ரூ. 1.23 லட்சம் ஆரம்ப விலையில் அறிமுகம்.

பஜாஜ் பல்சர் ஆர்.எஸ். 200 பைக்கில் புதிய ரேசிங் ரெட் எடிசன் ரூ. 1.23 லட்சம் ஆரம்ப விலையில் அறிமுகம்..!!

By Azhagar

இந்தியாவில் பல்சர் ஆர்எஸ் 200 பைக் மாடலில் ரேசிங் ரெட் என்ற புதிய பதிப்பை பஜாஜ் நிறுவனம் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ஏபிஎஸ் மற்றும் ஏபிஎஸ் இல்லாத இரண்டு வேரியண்டுகளில் விற்பனைக்கு வந்துள்ள இந்த பைக்கின் ஆரம்ப விலை ரூ. 1.23 லட்சம் (டெல்லி எக்ஸ்-ஷோரூம் ).

பஜாஜ் பல்சர் ஆர்.எஸ். 200 பைக்கின் ரேசிங் ரெட் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்..!!

பல்சர் ஆர்.எஸ் 200 பைக்கில் வெள்ளை நிறம் பிரதானமாக இடம்பெற்றிருக்க, அதில் சிவப்பு நிறத்திலான டிசைனிங் பட்டைகள் கவர்ந்திழுக்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

பஜாஜ் பல்சர் ஆர்.எஸ். 200 பைக்கின் ரேசிங் ரெட் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்..!!

இதோடு பைக்கின் உபகரணங்கள், எஞ்சின் அமைந்துள்ள பகுதிகளில் கருப்பு நிறம் பிரதானமாக இடம்பெற்றிருக்கிறது.

வெள்ளை, சிவப்பு மற்றும் கருப்பு ஆகிய மூன்று நிற கலவையில் உள்ள பஜாஜ் பல்சர் ஆர்.எஸ் 200 ரேசிங் ரெட் பார்க்க கம்பீரமாக உள்ளது.

பஜாஜ் பல்சர் ஆர்.எஸ். 200 பைக்கின் ரேசிங் ரெட் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்..!!

ரேசிங் ரெட் நிறத்தை தவிர, பஜாஜ் பல்சர் ஆர்எஸ் 200 பைக் ரேசிங் ப்ளூ மற்றும் கிராஃபைட் பிளாக் ஆகிய நிறங்களில் கடந்த 2017ம் ஆண்டே வெளியிடப்பட்டுள்ளது.

பஜாஜ் பல்சர் ஆர்.எஸ். 200 பைக்கின் ரேசிங் ரெட் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்..!!

ரேசிங் ரெட் பல்சர் ஆர்.எஸ் 200 பைக்கின் முன் மற்றும் பின் பக்கங்களில் வெள்ளை மற்றும் சிவப்பு நிறங்கள் இடம்பெற்றிருக்க, அதனுடைய பக்கவாட்டு மற்றும் கீழ் பகுதிகள் கருப்பு நிற அலங்காரங்களை பெற்றுள்ளன.

பஜாஜ் பல்சர் ஆர்.எஸ். 200 பைக்கின் ரேசிங் ரெட் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்..!!

பிரதானமான சிவப்பு நிற தோற்றத்திற்கு ஏற்றவாறு, பைக்கின் அலாய் சக்கரங்களும் அதே வண்னத்தில் உள்ளன. தவிர ஒளியை பிரதிபலிக்கும் ஸ்டிக்கர்கள் வெள்ளை நிறத்தில் உள்ளது.

பஜாஜ் பல்சர் ஆர்.எஸ். 200 பைக்கின் ரேசிங் ரெட் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்..!!

வெறும் தோற்றப்பொலிவில் மெருக்கூட்டப்பட்டடுள்ளதே தவிர, எஞ்சின் செயல்பாடுகளில் எந்த மாற்றமும் இல்லை. பஜாஜ் பல்சர் ஆர். எஸ். 200 ரேசிங் ரெட் பதிப்பில் 199.5சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் உள்ளது.

பஜாஜ் பல்சர் ஆர்.எஸ். 200 பைக்கின் ரேசிங் ரெட் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்..!!

லிக்விடு கூல்டு, ஃபியூல்இன்ஜெக்டடு, ட்ரிபிள் ஸ்பார்க் போன்ற அம்சங்களை கொண்ட இந்த எஞ்சின் 24.1 பிஎச்பி பவர் மற்றும் 18.6 என்.எம் டார்க் திறனை வழங்கும். மேலும் இதில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் உள்ளது.

பஜாஜ் பல்சர் ஆர்.எஸ். 200 பைக்கின் ரேசிங் ரெட் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்..!!

மணிக்கு 141 கி.மீ வேகத்தில் செல்லும் இந்த பைக் ட்வின் ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள், பூமரேங் வடிவம் பெற்ற எல்.இ.டி டெயில் விளக்குகள், டிஜிட்டல் அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் கட்டையான எக்ஸாஸ்ட் பைப்புகளை பெற்றுள்ளது.

பஜாஜ் பல்சர் ஆர்.எஸ். 200 பைக்கின் ரேசிங் ரெட் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்..!!

எளிய முறையில் கையாளக்கூடிய திறன், பயன்பாட்டிற்கு எளிதாகவும் மற்றும் பெரிமீட்டர் ஃபிரேம் ஆகியவற்றில் பஜாஜ் நிறுவனம் பல்சர் ஆர்.எஸ். 200 பைக் மாடலை தயாரித்துள்ளது.

பஜாஜ் பல்சர் ஆர்.எஸ். 200 பைக்கின் ரேசிங் ரெட் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்..!!

பல்சர் ஆர்.எஸ்.200 பைக்கின் முன்பக்கத்தில் டெலஸ்கோபிக் ஃபோர்க்ஸ் மற்றும் பின்பகுதியில் மோனோஷாக் நைட்ரஸ் ஆகியவை சஸ்பென்ஷன் தேவைகளை பூர்த்தி செய்கிறது.

பஜாஜ் பல்சர் ஆர்.எஸ். 200 பைக்கின் ரேசிங் ரெட் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்..!!

அதேபோல இந்த பைக்கின் முன்பக்க சக்கரத்தில் 300 மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் பின்பக்க சக்கரத்தில் 230 மிமீ டிஸ்க் பிரேக் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன. தவிர ஆர்.எல்.பி சென்சாருடன் கூடிய சிங்கிள் சேனல் ஏபிஎஸ் முன்பக்க சக்கரத்தில் இடம்பெற்றுள்ளது.

பஜாஜ் பல்சர் ஆர்.எஸ். 200 பைக்கின் ரேசிங் ரெட் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்..!!

பஜாஜ் நிறுவனம், பல்சர் ஆர்.எஸ். 200 பைக்கின் புதிய ரேசிங் ரெட் பதிப்பை வெளியிட்டுயிருப்பது பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. செயல்திறனில் வலிமையாக இந்த பைக் இருந்தாலும், தோற்றத்திலும் புதுமை சேர்க்கப்பட்டுள்ளது பல்சர் ஆர்.எஸ். 200 பைக்கிற்கு பெரிய விற்பனை திறனை உருவாக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

English summary
Read in Tamil: Bajaj Pulsar RS200 Racing Red Edition Launched In India; Prices Start At Rs 1.23 Lakh. Click for Details...
Story first published: Saturday, February 3, 2018, 12:37 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X