சிடி 100 பைக்கின் விலையை அதிரடியாக குறைத்துள்ளது பஜாஜ்
இந்தியாவிலோ குறைந்த விலை பைக்கான கருதப்படும் பஜாஜ் சிடி 100 பைக்கின் விலையை மேலும் குறைந்துள்ளது பஜாஜ் நிறுவனம்.
இந்தியாவிலோ குறைந்த விலை பைக்கான கருதப்படும் பஜாஜ் சிடி 100 பைக்கின் விலையை மேலும் குறைந்துள்ளது பஜாஜ் நிறுவனம்.

பஜாஜ் நிறுவனம் சிடி 100 பைக்குகளை லாப நோக்கு இல்லாமல் குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறது. இந்திய ரோடுகளில் அதிக எண்ணிக்கையில் பஜாஜ் பைக்குகளை இறக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக பைக்கின் விலையை பஜாஜ் நிறுவனம் மேலும் குறைத்துள்ளது. இது இந்த பைக்கின் விற்பனையை மேலும் அதிகரிக்கும் அந்நிறுவனம் நிறுவனம் நம்புகிறது.

| மாடல் | பழைய விலை | புதிய விலை | மாற்றம் |
| சிடி 100 பி | ரூ 32,653 | ரூ 30,714 | ரூ 1,939 |
| சிடி 100 கேஎஸ் அலாய் | ரூ 38,637 | ரூ 31,802 | ரூ6,835 |
| சிடி 100 இஎஸ் அலாய் | ரூ41,997 | ரூ39,885 | ரூ2,112 |

இந்த விலை பட்டியலில் படி சிடி 100 கே.எஸ் அலாய் ரக பைக் அதிக அளவு விலை குறைக்கப்பட்டுள்ளது. சிடி 100 பைக்கை விட சுமார் ரூ 1,000 மட்டுமே அதிகமாக இருக்கிறது. இந்த இரு பைக்குகளுக்கும் ஆலாய் வீலை தவிர மற்ற எந்த மாற்றமும் இல்லை.

இந்த பைக்குகள் குறைந்த விலையில் பைக் வாங்க நினைப்பவர் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. வட இந்தியாவில் இந்தாண்டு விவசாய உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில் இது பைக் வாங்க நினைக்கும் விவசாயிகளுக்கு வரப்பிரசாதமாக இருக்கும்.
Source : பஜாஜ் ஆட்டோஸ்
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்:


Click it and Unblock the Notifications