ஜூலையில் வெளியாகிறது புதிய டொமினார் ஸ்க்ரம்ப்லர்

Written By:

பஜாஜ் டொமினார் -400 பைக்கின் புதிய மாடலான ஸ்க்ரம்ப்லர் வரும் ஜூலை மாதம் வெளியாகவுள்ளது. ஏற்கனவே டொமினார் இந்தியாவில் மார்க்கெட்டை பிடித்துள்ள நிலையில் அதிக வேரியன்ட் மூலம் விற்பனையை அதிகரிக்க இந்த மாடல் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

ஜூலையில் வெளியாகிறது புதிய டொமினார் ஸ்க்ரம்ப்லர்

பஜாஜ் நிறுவனம் டொமினாருக்கான விளம்பரங்களில் ராயல் என்பீல்டு பைக்குகளை கடுமையாக விமர்சித்து வருகிறது. ராயல் என்பீல்டு பைக்குளில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டி விளம்பரம் செய்து வருவது சமூக வலைதளங்களில் விவாதங்களை கிளப்பியுள்ளது.

ஜூலையில் வெளியாகிறது புதிய டொமினார் ஸ்க்ரம்ப்லர்

மிக முக்கியமாக ரோடு இல்லாத பகுதிகளில் ராயல் என்பீல்டு பைக் ஓட்ட லாயக்கில்லாதது என்ற வகையில் விளம்பரம் செய்து வருகிறது. இதற்கு பதிலளிக்கும் வகையில் ராயல் என்பீல்டு ஹமாலயன் பைக்கை வெளியிட்டாலும் அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற முடியவில்லை.

ஜூலையில் வெளியாகிறது புதிய டொமினார் ஸ்க்ரம்ப்லர்

புதிய டொமினார் ஸ்க்ரம்ப்லரை பொறுத்தவரை நீண்டதுார பயணம்,மற்றும் ரோடுகள் இல்லாத/ சரியில்லாத பகுதிகளில் பயணம் செய்வதற்கு தகுந்தார்போல் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், அதை குறிவைத்த இந்த வேரியன்ட் பைக்கிற்கான மார்க்கெட்டிங் நடக்கவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

ஜூலையில் வெளியாகிறது புதிய டொமினார் ஸ்க்ரம்ப்லர்

ஏ.பி.எஸ். இல்லாத பைக்குகளுக்கு மார்ச் 31பின் அரசு தடை விதித்துள்ள நிலையில் டொமினாரில் உள்ள ஏ.பி.எஸ். இல்லாத வேரியன்டை நீக்கவும் பஜாஜ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

ஜூலையில் வெளியாகிறது புதிய டொமினார் ஸ்க்ரம்ப்லர்

டொமினார் ஸ்க்ரம்ப்லர் பைக் தற்போது விற்பனையாகி வரும் டெமினார் உயர் ரக வெரியன்டில் இருந்து ரூ 5,000 வரை அதிகமாக விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்:

01.ஏப்.1 வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் கட்டணம் மாற்றியமைப்பு

02.புதிய ஜீப் காம்பஸ் எஸ்.யூ.வி. காரை வாங்கியுள்ளா் இந்தி திரைப்பட நடிகர் அக்ஷய் குமார்

03.டொயோட்டா பிராண்டிலும் விற்பனைக்கு வரப்போகும் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா!!

04.விபத்தில் பல முறை உருண்ட டாடா நெக்ஸான் கார் ; காரில் இருந்தவருக்கு கீறல் கூட இல்லையாம்

05.ஓட்டுனர் உரிமம் பெற வயது சான்றாக ஆதார் சமர்ப்பிக்கும் முறை அறிமுகம்!

மேலும்... #பஜாஜ் #bajaj
English summary
Bajaj Dominar 400 Scrambler And Classic Variants In The Works; Expected Launch & More Details.Read in Tamil.
Story first published: Friday, March 30, 2018, 16:45 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark