மூங்கில் மர பாடி பேனல்களுடன் முதல் எலக்ட்ரிக் பைக் அறிமுகம்!!

Written By:

கலப்பு உலோகங்கள் மற்றும் புதுமையான வழிகளில் வாகனங்களை உருவாக்கும் முயற்சிகள் உலக அளவில் நடந்து வருகின்றன. குறிப்பாக, சுற்றுச்சூழல் பாதிப்பை குறைக்கும் வகையில், வாகனங்களை உருவாக்குவது இப்போது பல நிறுவனங்களின் நோக்கமாக அமைந்துள்ளது.

மூங்கில் மர சட்டத்தில் உருவாக்கப்பட்ட முதல் எலக்ட்ரிக் பைக்!!

அந்த வகையில், மூங்கில் மர சட்டங்களை கொண்டு உருவாக்கப்பட்ட முதல் எலக்ட்ரிக் பைக் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. க்ரீன் ஃபால்கன் என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த பைக்கை பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த பனாட்டி என்ற நிறுவனம் உருவாக்கி இருக்கிறது.

மூங்கில் மர சட்டத்தில் உருவாக்கப்பட்ட முதல் எலக்ட்ரிக் பைக்!!

கான்செப்ட் எனப்படும் மாதிரி மாடலாக உருவாக்கப்பட்டு இருக்கும் இந்த மின்சார பைக்கில் பொருத்தப்பட்டு இருக்கும், மூங்கில் பாடி பேனல்கள் வெறும் 6.5 கிலோ மட்டுமே எடை கொண்டது.

மூங்கில் மர சட்டத்தில் உருவாக்கப்பட்ட முதல் எலக்ட்ரிக் பைக்!!

இந்த பைக் மணிக்கு 120 கிமீ வேகம் வரை செல்லும் திறனை பெற்றிருக்கிறது. எனினும், நகரத்தில் இயக்கும்போது பாதுகாப்பு கருதி மணிக்கு 96.5 கிமீ வேகம் வரை செல்லும் வகையில் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது.

மூங்கில் மர சட்டத்தில் உருவாக்கப்பட்ட முதல் எலக்ட்ரிக் பைக்!!

இந்த பைக்கின் மூங்கில் மரத்தில் செய்யப்பட்ட பாடி பேனல்கள், ஸ்டீல் ஃப்ரேமிற்கு இணையானதாக இருக்கும் என்று தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த பைக்கில் இரண்டடுக்கு மூங்கில் சட்டங்களுடன் பாடி பேனல்கள் செதுக்கப்பட்டு இருக்கின்றன.

மூங்கில் மர சட்டத்தில் உருவாக்கப்பட்ட முதல் எலக்ட்ரிக் பைக்!!

இந்த பைக்கில் இருக்கும் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 43 முதல் 49 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். நகர்ப்புற பயன்பாட்டிற்கு ஏற்றதாக இருக்கும்.

மூங்கில் மர சட்டத்தில் உருவாக்கப்பட்ட முதல் எலக்ட்ரிக் பைக்!!

இந்த பைக்கின் மூங்கில் மர பாடி பேனல்களை புதுமையான வழிகளில் மேம்படுத்துவதற்கான முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட போவதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவிக்கிறது. எனினும், இந்த கான்செப்ட் மாடல் உற்பத்தி நிலைக்கு கொண்டு செல்வதற்கான வாய்ப்புகள் குறைவாக இருப்பதாக கருதப்படுகிறது.

Picture credit: Banatti

English summary
A Philippines-based Meep Inc has unveiled electric bike with bamboo body panels.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark