ராயல் என்பீல்டு உடன் நேரடியாக மோத பெனெல்லி ரெடி.. இந்தியாவில் புதிய பைக்கை களமிறக்குகிறது..

இந்தியாவின் ராயல் என்பீல்டு நிறுவனத்திற்கு போட்டியாக, இத்தாலியின் பெனெல்லி நிறுவனம் இம்பீரியல் 400 மோட்டார் சைக்கிளை களமிறக்க உள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

By Arun

இத்தாலி நாட்டை சேர்ந்த பழமையான மோட்டார் சைக்கிள் உற்பத்தி நிறுவனமான பெனெல்லி, ராயல் என்பீல்டு நிறுவனத்திற்கு போட்டியாக, இம்பீரியல் 400 எனும் புதிய மோட்டார் சைக்கிளை, இந்தியாவில் லான்ச் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.

ராயல் என்பீல்டு உடன் நேரடியாக மோத பெனெல்லி ரெடி.. இந்தியாவில் புதிய பைக்கை களமிறக்குகிறது..

பெனெல்லி நிறுவனத்தின் இம்பீரியல் 400, இந்தியாவில் அடுத்த ஆண்டு லான்ச் ஆகும் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் இம்பீரியல் 400 லான்ச் செய்யப்பட்டால், ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கிற்கு நேரடி போட்டியாக விளங்கும்.

ராயல் என்பீல்டு உடன் நேரடியாக மோத பெனெல்லி ரெடி.. இந்தியாவில் புதிய பைக்கை களமிறக்குகிறது..

இத்தாலி நாட்டின் மிலன் நகரில், 2017ம் ஆண்டு நடைபெற்ற EICMA கண்காட்சியில்தான் இம்பீரியல் 400 மோட்டார் சைக்கிளை, பெனெல்லி நிறுவனம் முதல் முறையாக காட்சிக்கு வைத்திருந்தது. இது ரெட்ரோ ஸ்டைல்டு க்ரூய்ஸர் மோட்டார் சைக்கிள் ஆகும்.

ராயல் என்பீல்டு உடன் நேரடியாக மோத பெனெல்லி ரெடி.. இந்தியாவில் புதிய பைக்கை களமிறக்குகிறது..

பெனெல்லி இம்பீரியல் 400 பைக்கின் முன்னால் டிஸ்க் பிரேக்கும், பின்னால் டியூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கும் ஸ்டாண்டர்டாக வழங்கப்படும். இந்த பைக்கின் மொத்த எடை 200 கிலோ. இதன் ப்யூயல் டேங்க்கின் மொத்த கொள்ளளவு 12 லிட்டர்கள்.

ராயல் என்பீல்டு உடன் நேரடியாக மோத பெனெல்லி ரெடி.. இந்தியாவில் புதிய பைக்கை களமிறக்குகிறது..

பெனெல்லி இம்பீரியல் 400 பைக்கில், 373.3 சிசி, சிங்கிள் சிலிண்டர், SOHC இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 5,500 ஆர்பிஎம்மில் 19 பிஎச்பி பவர் மற்றும் 3,500 ஆர்பிஎம்மில், 28 என்எம் டார்க் திறனை உருவாக்கும் வல்லமை வாய்ந்தது. 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் உடன் இந்த இன்ஜின் இணைக்கப்பட்டுள்ளது.

ராயல் என்பீல்டு உடன் நேரடியாக மோத பெனெல்லி ரெடி.. இந்தியாவில் புதிய பைக்கை களமிறக்குகிறது..

தற்போதைய நிலையில், இந்த செக்மெண்டின் கிங் ராயல் என்பீல்டுதான். அதில் நுழையவே பெனெல்லி திட்டமிட்டுள்ளது. இதுதவிர இங்கிலாந்தை சேர்ந்த தங்கள் கூட்டாளியான டிரையம்ப் உடன் இணைந்து, ஒரு புதிய மோட்டார் சைக்கிள் மூலமாக, பஜாஜ் நிறுவனமும் இந்த செக்மெண்டில் நுழைய திட்டமிட்டு வருகிறது.

ராயல் என்பீல்டு உடன் நேரடியாக மோத பெனெல்லி ரெடி.. இந்தியாவில் புதிய பைக்கை களமிறக்குகிறது..

அத்துடன் இந்த சப் 500 சிசி செக்மெண்டில் (sub 500 cc segment) நுழைய, அமெரிக்காவின் ஹார்லி டேவிட்சன் நிறுவனமும் முயற்சி செய்து வருகிறது. எனவே ராயல் என்பீல்டு நிறுவனத்திற்கு போட்டி அதிகமாகி கொண்டே செல்கிறது என்பதே உண்மை.

ராயல் என்பீல்டு உடன் நேரடியாக மோத பெனெல்லி ரெடி.. இந்தியாவில் புதிய பைக்கை களமிறக்குகிறது..

ஆனால் தற்போதைய நிலையில், ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிள்களின் விற்பனை, அதிகமாகி கொண்டேதான் இருக்கிறது. எனினும் இந்த புதிய வீரர்கள் இணைந்து, ராயல் என்பீல்டு நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சியை தடுத்து நிறுத்துவார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ராயல் என்பீல்டு உடன் நேரடியாக மோத பெனெல்லி ரெடி.. இந்தியாவில் புதிய பைக்கை களமிறக்குகிறது..

முன்னதாக பெனெல்லி நிறுவனம் இந்தியாவில் அடுத்த ஆண்டு லான்ச் செய்ய திட்டமிட்டுள்ள இம்பீரியல் 400 பைக்கின் விலை ரூ.2.5-3 லட்சத்திற்குள்தான் இருக்கும் என தெரிகிறது. நீண்ட காலமாக திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்டு வந்த இந்த பைக், இறுதியாக EICMA கண்காட்சியில்தான் காட்சிபடுத்தப்பட்டது.

ராயல் என்பீல்டு உடன் நேரடியாக மோத பெனெல்லி ரெடி.. இந்தியாவில் புதிய பைக்கை களமிறக்குகிறது..

பெனெல்லி இம்பீரியல் 400 மோட்டார் சைக்கிளுக்கு, சிகப்பு மற்றும் கருப்பு என கவர்ச்சிகரமான கலர் ஸ்கீம் வழங்கப்பட்டுள்ளது. ஹாலோஜென் ஹெட் மற்றும் டெயில் லேம்ப்களை (halogen head and tail lamps) இந்த மோட்டார் சைக்கிள் பெற்றுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

More from DriveSpark

Article Published On: Tuesday, August 7, 2018, 16:32 [IST]
English summary
Benelli Confirms to Launch Imperiale 400 in India Next Year. Read in Tamil
மேலும்... #பெனெல்லி #benelli
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+