TRENDING ON ONEINDIA
-
கூட்டணி உறுதியானதால் குஷி.. அமித்ஷா இன்று மாலை சென்னை வருகை
-
டூவீலர் உற்பத்தியாளர், டீலர், ஆர்டிஓக்கள் இணைந்து 13 ஆண்டுகளாக வாடிக்கையாளர்களிடம் மெகா மோசடி... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...
-
நடிகையாகும் பிரபல ஹீரோவின் மகள்: பொண்ணு ரொம்பத் தெளிவு
-
இந்த ரெண்டு ராசிக்காரங்களுக்கும் கெட்ட நேரம் ஆரம்பிச்சிடுச்சு... கொஞ்சம் கவனமா இருங்க
-
பாகிஸ்தான் இராணுவத்தை தலை பிச்சுக்க விட்ட இந்திய ஹேக்கர்கள்.!
-
தினேஷ் கார்த்திக் எதிர்காலம் முடிஞ்சு போச்சா? ரிஷப் பண்ட்டுக்கு மட்டும் தான் வாய்ப்பா?
-
இந்த ஊர்ல ஒருவரின் சராசரி வருமானமே 3.2 கோடி ரூபாய்.. எந்த ஊர் தெரியுமா..?
-
ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது
அஜீத் போல் சாலைகளில் சீறிப்பாயலாம்.. 3 லட்ச ரூபாய் பட்ஜெட்டிற்குள் கிடைக்கும் அட்டகாசமான பைக்குகள்..
இந்திய சாலைகளில் விலை உயர்ந்த பைக்குகளை பார்ப்பது என்பது ஒரு காலத்தில் அரிதான விஷயமாக இருந்தது. ஆனால் தற்போதைய நிலை வேறு. விலை உயர்ந்த பைக்குகளில், சர்வ சாதாரணமாக இளைஞர் பட்டாளம் வட்டமடிப்பதை சாலைகளில் எளிதாக காண முடிகிறது. இந்த சூழலில், 3 லட்ச ரூபாய்க்குள் கிடைக்கும் சிறந்த பைக்குகள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர்
2018 ஆட்டோ எக்ஸ்போவில் முதல் முறையாக காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர் பைக், கடந்த மாதம்தான் லான்ச் செய்யப்பட்டது. டிவிஎஸ் நிறுவனத்துடன் இணைந்து பிஎம்டபிள்யூ உற்பத்தி செய்யும் ஜி 310 ஆர் பைக், இந்த வருடத்தின் ஹாட்டஸ்ட் லான்ச்களில் ஒன்று என்றால் மிகையல்ல.
இந்த பைக்கில் 313 சிசி, லிக்யூட் கூல்டு, சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ள இந்த இன்ஜின், அதிகபட்சமாக 34 எச்பி பவர் மற்றும் 28 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தி, சாலைகளில் சீறிப்பாயும்.
பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர் பைக்கின் டாப் ஸ்பீடு மணிக்கு 143 கிலோ மீட்டர்கள். பூஜ்ஜியத்தில் இருந்து 50 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 2.5 வினாடிகளில், பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர் பைக் எட்டிவிடும். இதன் டெல்லி எக்ஸ் ஷோரூம் விலை 2.99 லட்ச ரூபாய்.
கவாஸகி நின்ஜா 300
புதிய கவாஸகி நின்ஜா 300 பைக்கில், மிகவும் வலிமையான பேரலல் டிவின் சிலிண்டர், லிக்யூட் கூல்டு, DOHC மற்றும் 8 வால்வு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 39 பிஎஸ் பவர் மற்றும் 27 என்எம் டார்க் திறனை வழங்கும் வல்லமை வாய்ந்தது.
டிவின் சிலிண்டர்கள் பொருத்தப்பட்டிருப்பதுதான் இதன் முக்கியமான சிறப்பம்சம். இதுதவிர டியூயல் சேனல் ஏபிஎஸ் வசதியும் (Anti-Lock Braking System-ABS) வழங்கப்படுகிறது. புதிய கலர்கள் மற்றும் கிராபிக்ஸ் உடன் இந்த பைக் விற்பனைக்கு வருகிறது. இதன் டெல்லி எக்ஸ் ஷோரூம் விலை 2.98 லட்ச ரூபாய்.
டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310
டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக், பிஎம்டபிள்யூ கூட்டணியில்தான் உருவாக்கப்படுகிறது. எனவே பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர் மற்றும் பிஎம்டபிள்யூ ஜி 310 ஜிஎஸ் பைக்குகளில் பொருத்தப்பட்டிருக்கும் அதே இன்ஜின்தான், டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக்கிலும் வழங்கப்பட்டுள்ளது.
டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக்கின் டாப் ஸ்பீடு மணிக்கு 160 கிலோ மீட்டர்கள். பூஜ்ஜியத்தில் இருந்து 60 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை இந்த பைக் வெறும் 2.93 வினாடிகளில் எட்டி விடும். 2.23 லட்ச ரூபாயில் (டெல்லி, எக்ஸ் ஷோரூம்) இருந்து இதன் விலை தொடங்குகிறது.
கேடிஎம் ஆர்சி 390
கேடிஎம் ஆர்சி 390 பைக்கில், 373.3 சிசி, சிங்கிள் சிலிண்டர், லிக்யூட் கூல்டு, ப்யூயல் இன்ஜெக்டட் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 43.50 பிஎஸ் பவர் மற்றும் 35 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியது.
இந்த பைக்கின் டாப் ஸ்பீடு மணிக்கு 179 கிலோ மீட்டர்கள். இந்த பைக் லிட்டருக்கு 25 கிலோ மீட்டர்கள் மைலேஜ் தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பைக் 2.17 லட்ச ரூபாய் முதல் 2.25 லட்ச ரூபாய் வரையிலான டெல்லி எக்ஸ் ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
பஜாஜ் டோமினார் 400
பஜாஜ் டோமினார் 400 பைக்கில், 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் உடனான 373.2 சிசி, DTS-i இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. பஜாஜ் டோமினார் 400 பைக்கின் இன்ஜின் அதிகபட்சமாக 35 பிஎஸ் பவர் மற்றும் 35 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது.
பஜாஜ் டோமினார் 400 பைக்கின் விலை 1.42 லட்ச ரூபாயில் (டெல்லி, எக்ஸ் ஷோரூம்) இருந்து தொடங்குகிறது. இதன் டாப் எண்ட் வேரியண்ட்டான பஜாஜ் டோமினார் 400 ஏபிஎஸ் பைக்கின் டெல்லி எக்ஸ் ஷோரூம் விலை 1.62 லட்ச ரூபாய்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்