பிஎம்டபிள்யூ ஜி310 ஜிஎஸ் பைக்கின் ஸ்பை படங்கள்... விரைவில் விற்பனைக்கு வருகிறது!!

இந்திய மண்ணில் பிஎம்டபிள்யூ ஜி310 ஜிஎஸ் பைக் முதல்முறையாக தென்பட்டுள்ளது. இந்த பைக்கின் ஸ்பை படங்கள் முதல்முறையாக ஆட்டோமொபைல் இணையதளங்களில் வெளியாகி இருக்கின்றன. இந்த பைக்கில் 33.5 பிஎச்பி பவரை அளிக

By Saravana Rajan

இந்திய மண்ணில் பிஎம்டபிள்யூ ஜி310 ஜிஎஸ் பைக் முதல்முறையாக தென்பட்டுள்ளது. இந்த பைக்கின் ஸ்பை படங்கள் முதல்முறையாக ஆட்டோமொபைல் இணையதளங்களில் வெளியாகி இருக்கின்றன. படங்களையும், விபரங்களையும் காணலாம்.

பிஎம்டபிள்யூ ஜி310 ஜிஎஸ் பைக்கின் ஸ்பை படங்கள்... விரைவில் விற்பனைக்கு வருகிறது!!

பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர் மற்றும் ஜி 310 ஜிஎஸ் ஆகிய இரண்டு பைக் மாடல்களும் 2018 ஆட்டோமொபைல் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன. இந்த நிலையில், இந்த பைக்குகள் விரைவில் சந்தைக்கு வர இருப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டுள்ளன.

பிஎம்டபிள்யூ ஜி310 ஜிஎஸ் பைக்கின் ஸ்பை படங்கள்... விரைவில் விற்பனைக்கு வருகிறது!!

ஆம். சென்னை- பெங்களூர் நெடுஞ்சாலையில் டிரக் ஒன்றில் பிஎம்டபிள்யூ ஜி 310 ஜிஎஸ் பைக்குகள் எடுத்துச் செல்லப்பட்ட படங்கள் ஆட்டோமொபைல் தளங்களில் வெளியாகி இருக்கின்றன. அந்த பைக்குகள் பெங்களூருக்கு கொண்டு செல்லப்பட்டபோது இந்த படங்கள் எடுக்கப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன.

பிஎம்டபிள்யூ ஜி310 ஜிஎஸ் பைக்கின் ஸ்பை படங்கள்... விரைவில் விற்பனைக்கு வருகிறது!!

அந்த பைக் டீலர்களுக்கு எடுத்துச் செல்லப்படுவதாக கருதப்படுகிறது. இதன்மூலமாக, இந்த பைக் விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருவது உறுதியாகி இருக்கிறது.

பிஎம்டபிள்யூ ஜி310 ஜிஎஸ் பைக்கின் ஸ்பை படங்கள்... விரைவில் விற்பனைக்கு வருகிறது!!

பிஎம்டபிள்யூ ஜி310 ஆர் மற்றும் ஜி310 ஜிஎஸ் ஆகிய இரண்டு பைக் மாடல்களும் ஓசூரில் உள்ள டிவிஎஸ் மோட்டார்ஸ் ஆலையில்தான் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதில், பிஎம்டபிள்யூ ஜி310 ஆர் பைக் நேக்கட் ஸ்ட்ரீட் பைட்டர் ரகத்தை சேர்ந்ததாக வருகிறது. அதேநேரத்தில், ஜி310 ஜிஎஸ் பைக்கானது அட்வென்ச்சர் எனப்படும் சாகச பயணங்களுக்கான ரகத்தை சேர்ந்தது.

பிஎம்டபிள்யூ ஜி310 ஜிஎஸ் பைக்கின் ஸ்பை படங்கள்... விரைவில் விற்பனைக்கு வருகிறது!!

இந்த இரண்டு பைக்குகளும் ஏற்கனவே உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஓசூரில் உள்ள டிவிஎஸ் மோட்டார்ஸ் ஆலையில் உற்பத்தி செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இந்தியாவிலும் இந்த பைக்குகள் விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனத்தின் விலை குறைவான மாடல்களாக வருவதால் அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது.

பிஎம்டபிள்யூ ஜி310 ஜிஎஸ் பைக்கின் ஸ்பை படங்கள்... விரைவில் விற்பனைக்கு வருகிறது!!

இந்த பைக்கில் 313சிசி லிக்யூட் கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 33.5 பிஎச்பி பவரையும், 28 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த எஞ்சினுடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. இதே எஞ்சின் மற்றும் முக்கிய உதிரிபாகங்கள்தான் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

பிஎம்டபிள்யூ ஜி310 ஜிஎஸ் பைக்கின் ஸ்பை படங்கள்... விரைவில் விற்பனைக்கு வருகிறது!!

புதிய பிஎம்டபிள்யூ ஜி310 ஜிஎஸ் பைக்கில் முன்புறத்தில் அப்சைடு டவுன் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டு இருக்கிறது. இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகளும், டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. பிஎம்டபிள்யூ ஜிஸ் வரிசையிலான உயர்வகை மாடல்களில் ஸ்போக்ஸ் சக்கரங்கள் உள்ளன. ஆனால், இந்த பைக்கில் அலாய் சக்கரங்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.

பிஎம்டபிள்யூ ஜி310 ஜிஎஸ் பைக்கின் ஸ்பை படங்கள்... விரைவில் விற்பனைக்கு வருகிறது!!

புதிய பிஎம்டபிள்யூ ஜி310 ஜிஎஸ் பைக்கானது ரூ.3 லட்சம் முதல் ரூ.3.5 லட்சம் வரையிலான விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலமாக, அட்வென்ச்சர் ரக மோட்டார்சைக்கிள் மார்க்கெட்டில் பிஎம்டபிள்யூ அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்றும் கருதப்படுகிறது.

Spy Images: xBhp

More from DriveSpark

Article Published On: Monday, May 14, 2018, 17:29 [IST]
English summary
The BMW G 310 R and the G 310 GS are the most anticipated motorcycles in the Indian market. Both the bikes were showcased at the Auto Expo 2018. Now, xBhp has spotted the BMW G 310 GS in India for the very first time.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+