பிஎம்டபிள்யூ ஜி310ஆர் மற்றும் ஜி310 ஜிஎஸ் பைக்குகள் மீது ரூ.50,000 வரை சேமிப்பு!

பிஎம்டபிள்யூ ஜி310ஆர் மற்றும் ஜி 310ஜிஎஸ் பைக் மாடல்களுக்கு ரூ.50,000 வரையிலான சேமிப்புச் சலுகைகள் வழங்கப்படுகின்றன.

பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனத்தின் ஜி 310ஆர் மற்றும் ஜி 310ஜிஎஸ் ஆகிய இரண்டு பைக்குகள் மீதும் ரூ.50,000 வரை சேமிக்கும் வாய்ப்பை டீலர்கள் வழங்குகின்றனர். இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

பிஎம்டபிள்யூ ஜி310ஆர் மற்றும் ஜி310 ஜிஎஸ் பைக்குகள் மீது ரூ.50,000 வரை சேமிப்பு!

பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனத்தின் விலை குறைவான மாடல்களாக ஜி 310ஆர் மற்றும் ஜி 310 ஜிஎஸ் பைக் மாடல்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த நிலையில், ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 மோட்டார்சைக்கிள் வருகை மற்றும் இதர போட்டியாளர்களால் கடும் நெருக்கடியை சந்தித்துள்ளது.

பிஎம்டபிள்யூ ஜி310ஆர் மற்றும் ஜி310 ஜிஎஸ் பைக்குகள் மீது ரூ.50,000 வரை சேமிப்பு!

மேலும், ஆண்டு கடைசியையொட்டி, இருப்பில் உள்ள பைக்குகளை விற்று தீர்க்கவும் இந்த ஆஃபர் வழங்கப்படுகிறது. சென்னை, பெங்களூர், மும்பை, கொச்சி உள்ளிட்ட பல நகரங்களில் உள்ள டீலர்களில் இந்த சேமிப்புச் சலுகை வழங்கப்படுகிறது.

பிஎம்டபிள்யூ ஜி310ஆர் மற்றும் ஜி310 ஜிஎஸ் பைக்குகள் மீது ரூ.50,000 வரை சேமிப்பு!

இரண்டு பைக் மாடல்களுக்கும் ரூ.40,000 முதல் ரூ.50,000 வரையிலான சேமிப்புச் சலுகைளை டீலர்களில் வழங்குகின்றனர். விலையில் தள்ளுபடி, இலவச இன்ஸ்யூரன்ஸ், இலவச ஆக்சஸெரீகள், ஹேண்ட்லிங் சார்ஜ் இல்லாமல் டெலிவிரி கொடுக்கவும் முனைந்துள்ளனர்.

பிஎம்டபிள்யூ ஜி310ஆர் மற்றும் ஜி310 ஜிஎஸ் பைக்குகள் மீது ரூ.50,000 வரை சேமிப்பு!

சென்னை டீலர்களில் ரூ.16,500 மதிப்புக்கு இலவச இன்ஸ்யூரன்ஸ் மற்றும் வெறும் 3 சதவீத வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது. ரூ.50,000 முன்பணம் செலுத்தினால், பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் சொந்த நிதி நிறுவனம் மூலமாக இரு பைக்குகளுக்கும் கடன் அளிக்கப்படுகிறது.

பிஎம்டபிள்யூ ஜி310ஆர் மற்றும் ஜி310 ஜிஎஸ் பைக்குகள் மீது ரூ.50,000 வரை சேமிப்பு!

குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் முதல் அதிகபட்சமாக 5 ஆண்டுகள் வரை மாதத் தவணை போட்டுக் கொள்ளலாம் என சென்னையிலுள்ள பிஎம்டபிள்யூ மோட்டோராட் டீலர் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிஎம்டபிள்யூ ஜி310ஆர் மற்றும் ஜி310 ஜிஎஸ் பைக்குகள் மீது ரூ.50,000 வரை சேமிப்பு!

பிஎம்டபிள்யூ நிறுவனம் விற்பனை செய்யும் மாடல்களில் குறைவான விலை பைக்குகளாக கிடைப்பதால் வாடிக்கையாளர் மத்தியில் ஆர்வம் இருக்கிறது. ஜெர்மனியிலுள் உள்ள வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தில் உருவாக்கப்பட்ட இந்த இரண்டு பைக்குகளும், ஓசூரில் உள்ள டிவிஎஸ் ஆலையில் உற்பத்தி செய்யப்படுகின்றன.

பிஎம்டபிள்யூ ஜி310ஆர் மற்றும் ஜி310 ஜிஎஸ் பைக்குகள் மீது ரூ.50,000 வரை சேமிப்பு!

பிஎம்டபிள்யூ ஜி310ஆர் பைக் ரூ.2.99 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும், ஜி 310ஜிஎஸ் பைக் ரூ.3.49 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் கிடைக்கிறது. இதில், ஜி 310ஆர் பைக் நேக்கட் ரக மாடலாகவும், ஜி 310 ஜிஎஸ் மாடல் அட்வென்ச்சர் டூரர் ரக மாடலாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

பிஎம்டபிள்யூ ஜி310ஆர் மற்றும் ஜி310 ஜிஎஸ் பைக்குகள் மீது ரூ.50,000 வரை சேமிப்பு!

இந்த இரண்டு பைக் மாடல்களிலுமே 312சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 34 பிஎச்பி பவரையும், 28 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

பிஎம்டபிள்யூ ஜி310ஆர் மற்றும் ஜி310 ஜிஎஸ் பைக்குகள் மீது ரூ.50,000 வரை சேமிப்பு!

பிஎம்டபிள்யூ ஜி 310ஆர் பைக்கில் முன்புறத்தில் 41 மிமீ அப்சைடு டவுன் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் மோனோ ஷாக்அப்சார்பரும் உள்ளன. 17 அங்குல 5 ஸ்போக் அலாய் வீல்கள் மற்றும் மிச்செலின் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

பிஎம்டபிள்யூ ஜி310ஆர் மற்றும் ஜி310 ஜிஎஸ் பைக்குகள் மீது ரூ.50,000 வரை சேமிப்பு!

பிஎம்டபிள்யூ ஜி 310ஜிஎஸ் பைக்கில் முன்புறத்தில் லாங் டிராவல் சஸ்பென்ஷன் பொருத்தப்பட்டுள்ளது. அதேபோன்று, முன்புறத்தில் 19 அங்குல சக்கரமும், பின்புறத்தில் 17 அங்குல சக்கரமும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

பிஎம்டபிள்யூ ஜி310ஆர் மற்றும் ஜி310 ஜிஎஸ் பைக்குகள் மீது ரூ.50,000 வரை சேமிப்பு!

இந்த பைக்குகளில் முன்சக்கரத்தில் 300 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்சக்கரத்தில் 200 மிமீ டிஸ்க் பிரேக்கும் பொருத்தப்பட்டுள்ளன. டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் நிரந்தர பாதுகாப்பு வசதியாக அளிக்கப்பட்டுள்ளது.

பிஎம்டபிள்யூ ஜி310ஆர் மற்றும் ஜி310 ஜிஎஸ் பைக்குகள் மீது ரூ.50,000 வரை சேமிப்பு!

கேடிஎம் 390 ட்யூக், டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310, கவாஸாகி நின்ஜா 300, ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் உள்ளிட்ட பைக் மாடல்களுடன் போட்டி போடுகின்றன. இந்த பைக்குகளின் முக்கிய மதிப்பு, பிஎம்டபிள்யூ பிராண்டு என்பதே ஆகும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, December 11, 2018, 11:12 [IST]
English summary
BMW Motorrad company dealerships are offering heavy discounts and benefits on their G 310 R & G 310 GS offerings in India. The discounts and benefits on offer are up to Rs 50,000 across various dealerships and models.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+