புதிய வண்ணங்களில் பிஎம்டபிள்யூ ஜி 310ஆர் பைக்!

புதிய பிஎம்டபிள்யூ ஜி 310ஆர் பைக்கில் புதிய வண்ணங்கள் வெளியிடப்பட்டுள்ளன.புதிய ரேஸிங் ரெட் என்ற சிவப்பு வண்ணம் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.சிவப்பு வண்ணம் தவிர்த்து, பிஎம்டபிள்யூ ஜி 310ஆர் பைக்கில

By Saravana Rajan

விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் புதிய பிஎம்டபிள்யூ ஜி 310ஆர் பைக்கில் புதிய வண்ணங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய வண்ணங்களில் பிஎம்டபிள்யூ ஜி 301ஆர் பைக்!

வரும் 18ந் தேதி புதிய பிஎம்டபிள்யூ ஜி 310ஆர் மற்றும் ஜி 310ஜிஎஸ் ஆகிய பைக் மாடல்கள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனத்தின் மிக குறைவான விலை பைக் மாடல்கள் என்பதால் இந்திய இளைஞர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது..

புதிய வண்ணங்களில் பிஎம்டபிள்யூ ஜி 301ஆர் பைக்!

இந்த நிலையில், இந்த பைக்குகளில் புதிய வண்ணங்கள் வெளியிடப்பட்டு இருப்பது அந்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. புதிய பிஎம்டபிள்யூ ஜி 310ஆர் பைக்கில் புதிய ரேஸிங் ரெட் என்ற சிவப்பு வண்ணக் கலவை அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

புதிய வண்ணங்களில் பிஎம்டபிள்யூ ஜி 301ஆர் பைக்!

இதே பைக் டிவிஎஸ் பிராண்டில் அப்பாச்சி ஆர்ஆர் 310 என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த பைக்கில் சிவப்பு வண்ணத்திற்கு அதிக வரவேற்பு கிடைத்தது. பல வாடிக்கையாளர்கள் காத்திருந்து இந்த சிவப்பு வண்ணத்தை வாங்குகின்றனர். இதனால், பிஎம்டபிள்யூ நிறுவனமும் ஜி 310ஆர் பைக்கில் சிவப்பு வண்ணத்தை வெளியிட்டு இருக்கிறது.

புதிய வண்ணங்களில் பிஎம்டபிள்யூ ஜி 301ஆர் பைக்!

சிவப்பு வண்ணம் தவிர்த்து, பிஎம்டபிள்யூ ஜி 310ஆர் பைக்கில் எச்பி மோட்டார்ஸ்போர்ட் கலர் என்ற புதிய வெள்ளை வண்ணக் கலவையும் வெளியிடப்பட்டு இருக்கிறது. மேலும், விளம்பரங்களில் பயன்படுத்தப்பட்ட ஸ்ட்ரேட்டோ புளூ மெட்டாலிக் என்ற வண்ணத்தை நீக்கி இருக்கிறது. அதேநேரத்தில், கருப்பு வண்ணம் தக்க வைக்கப்பட்டு இருக்கிறது.

புதிய வண்ணங்களில் பிஎம்டபிள்யூ ஜி 301ஆர் பைக்!

பிஎம்டபிள்யூ ஜி 310ஆர் போன்றே, ஜி 310ஜிஎஸ் பைக்கிலும் புதிய வண்ணங்களில் வரும் என்பது எதிர்பார்ப்பாக உள்ளது. புதிய வண்ணங்களை தவிர்த்து, இந்த பைக்குளில் வேறு எந்த மாற்றங்களும் இல்லை.

புதிய வண்ணங்களில் பிஎம்டபிள்யூ ஜி 301ஆர் பைக்!

பிஎம்டபிள்யூ மோட்டோராட்- டிவிஎஸ் கூட்டணியில் தயாரிக்கப்பட்ட இந்த புதிய பிஎம்டபிள்யூ ஜி 310ஆர் மற்றும் ஜி 310ஜிஎஸ் ஆகிய பைக் மாடல்களில் 313சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 33.5 பிஎச்பி பவரையும், 28 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

புதிய வண்ணங்களில் பிஎம்டபிள்யூ ஜி 301ஆர் பைக்!

புதிய பிஎம்டபிள்யூ ஜி 310ஆர் பைக் ரூ.3.5 லட்சம் ஆரம்ப விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. கேடிஎம் டியூக் 390, பஜாஜ் டோமினார் 400 ஆகிய பைக் மாடல்களுக்கு போட்டியாக இருக்கும். பிஎம்டபிள்யூ ஜி 310ஜிஎஸ் பைக் அட்வென்ச்சர் ரக பைக் மாடலாக வர இருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, July 7, 2018, 11:30 [IST]
English summary
BMW Motorrad has already announced that the G 310 R and the G 310 GS will be launched in the Indian market on July 18, 2018. Ahead of that the German motorcycle maker has updated the G 310 R with new colours. Apart from the new paint scheme the rest of the bike remains unchanged.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+