ஆட்டோமெட்டிக் ரைடிங் பைக்கை தயாரித்தது பிஎம்டபிள்யூ… டெஸ்லாவிற்கு டஃப் போட்டி…..

ஜெர்மன் நாட்டை சேர்ந்த பிஎம்டபிள்யூ மோட்டாேராட் நிறுவனம் கோஸ்ட் ரைடர் என்ற தானியங்கி செல்ப் டிரைவிங் பைக்கை தயாரித்துள்ளது. இந்த கோஸ்ட் ரைடர் என்பது பிஎம்டபிள்யூ ஆர் 1200 ஜிஎஸ் பைக்கின் செல்ப் டிரை

By Bala

ஜெர்மன் நாட்டை சேர்ந்த பிஎம்டபிள்யூ மோட்டாேராட் நிறுவனம் கோஸ்ட் ரைடர் என்ற தானியங்கி செல்ப் டிரைவிங் பைக்கை தயாரித்துள்ளது. இந்த கோஸ்ட் ரைடர் என்பது பிஎம்டபிள்யூ ஆர் 1200 ஜிஎஸ் பைக்கின் செல்ப் டிரைவிங் வெர்ஷன் தான்.

ஆட்டோமெட்டிக் ரைடிங் பைக்கை தயாரித்தது பிஎம்டபிள்யூ… டெஸ்லாவிற்கு டஃப் போட்டி…..

இந்த பைக்கை எந்த ஒரு ரைடரும் இல்லாமல் தானாக ஒட்ட முடியும். பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்த பைக்கை சோதனை டிராக்கில் ஆள் இல்லாமல் இயக்கி சோதனை செய்தது. இது முழுவதுமாக கம்யூட்டரில் இயங்ககூடியது. இதை பைக்கை ஓட்ட எந்த கிட் மற்றும் அசிஸ்டண்ட் தேவையில்லை.

ஆட்டோமெட்டிக் ரைடிங் பைக்கை தயாரித்தது பிஎம்டபிள்யூ… டெஸ்லாவிற்கு டஃப் போட்டி…..

இந்த பைக் சுலபமாக ரோட்டின் முனையிலும் எந்த வித சிக்கலும் இல்லாமல் பயணிக்கும், விபத்து ஏற்படுத்தும் சுழ்நிலை ஏற்பட்டதால் தானாக பைக் நின்று விடும். ஆனால் பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்த பைக்கை முழு ஆட்டோமெட்டிக் பைக்காக தயாரிக்க விருப்பவில்லை.

ஆட்டோமெட்டிக் ரைடிங் பைக்கை தயாரித்தது பிஎம்டபிள்யூ… டெஸ்லாவிற்கு டஃப் போட்டி…..

மாறாக அந்த தொழிற்நுட்பத்தை பைக்கை சரியாக ஓட்ட தெரியாதவர்கள் ஓட்டினாலும் அவர்கள் விபத்தில் சிக்காமல் இருக்கவும், அவர்களுக்கான சிறந்த ரைடிங் அனுபவத்தை வழங்கவும் பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்த தொழிற்நுட்பத்தை பயன்படுத்தவுள்ளது.

ஆட்டோமெட்டிக் ரைடிங் பைக்கை தயாரித்தது பிஎம்டபிள்யூ… டெஸ்லாவிற்கு டஃப் போட்டி…..

பிஎம்டபிள்யூ நிறுவனம் தயாரித்துள்ள இந்த ஆட்டோமெட்டிக் டிரைவிங் தொழிற்நுட்பத்தை நிறுவனத்தின் ஆர் 1200 ஜிஎஸ் பைக்கில் பொருத்தியுள்ளது. இந்த பைக் அட்வெஞ்சர் பைக்காக உள்ளது. இந்த பைக முழுவதும் பேனியர்கள் கொண்டு டிசைன் செய்யப்பட்டுள்ளது. இந்த பைக்கில் உள்ள ஆட்டோமெட்டிக் தொழிற்நுட்பத்தை தவிர மற்ற பாகங்கள் எல்லாம் அதே ஆர் 1200 ஜிஎஸ் பைக்கின் தொழிற்நுட்பங்கள் தான்.

ஆட்டோமெட்டிக் ரைடிங் பைக்கை தயாரித்தது பிஎம்டபிள்யூ… டெஸ்லாவிற்கு டஃப் போட்டி…..

இந்த பிஎம்டபிள்யூ ஆர் 1200 ஜிஎஸ் பைக் 1170 சிசி லிக்யூட் கூல்டு, பிளாட் டுவின் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 123 பிஎச்பி பவரையும், 125 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும், இந்த பைக்கின் இன்ஜின் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் உடன் பொருத்தப்பட்டுள்ளது.

ஆட்டோமெட்டிக் ரைடிங் பைக்கை தயாரித்தது பிஎம்டபிள்யூ… டெஸ்லாவிற்கு டஃப் போட்டி…..

இந்த பைக் அதிகபட்சமாக மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் பயணிக்ககூடியது. ஆனால் ஆட்டோமெட்டிக் ரைடிங் தொழிற்நுட்பத்தில் அதிகபட்ச வேகம் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. பிஎம்டபிள்யூ மோட்டாேராட் நிறுவனம் தான் முதன் முதலாக ஆட்டோமெட்டிக் ரைடிங் தொழிற்நுட்பத்தை விடிவமைத்துள்ளது.

ஆட்டோமெட்டிக் ரைடிங் பைக்கை தயாரித்தது பிஎம்டபிள்யூ… டெஸ்லாவிற்கு டஃப் போட்டி…..

முன்னதாக யமஹா நிறுவனம் மோட்டோபாட் எனும் ரோபோ ஓட்டும் வகையிலான பைக்கை தயாரித்தது, ஹோண்டா நிறுவனம் ரைடர் கொடுக்கும் உத்தரவுகளுக்கு தகுந்தார் போல் இயங்கும் தொழிற்நுட்பத்தை அறிமுகப்படுத்தியது. பிஎம்டபிள்யூ நிறுவனம் தான் முழுவதுமாக ஆட்டாேமெட்டிக்கில் இயங்கும் பைக்கை தயாரித்துள்ளது. இந்த பைக் எவ்வாறு இயங்குகிறது என்பதை கீழே உள்ள வீடியோவில் பாருங்கள்.

பாலாவின் பார்வையில்...

டெஸ்லா நிறுவனம் ஆட்டோமெட்டிக் கார் தயாரித்துள்ள நிலையில் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டிற்கு உரியதே. இது போன்ற தொழிற்நுட்ப வளர்ச்சி விரைவில் ஆட்டோமொபைல் உலகை ஆட்கொண்டு, எதிர்காலத்தில் பயணம் என்பது மிக சுலமாக ஒன்றாக மாற்ற இது போன்ற மற்ற நிறுவனங்களும் தொடர்ந்து முயற்சி செய்தால் நம் காலத்திலேயே நாம் கற்பனை செய்ய முடியாத பல விஷயங்களை நாம் அனுபவிக்க முடியும்.

பிஎம்டபிள்யூ நிறுவனம் தயாரித்துள்ள ஆட்டோமெட்டிக் ரைடிங் கருவியை அந்நிறுவனம் ஆர் 1200 ஜிஎஸ் அட்வெஞ்சர் பைக்கில் பொருத்தியுள்ளது. அந்த ஆர் 1200 ஜிஎஸ் பைக்கின் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் கீழே பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Thursday, September 13, 2018, 11:27 [IST]
English summary
BMW Motorrad Unveils The Ghost Rider — A Self-Driving R 1200 GS. Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+