சென்னையில் ஆலை அமைக்கிறது பிரெம்போ பிரேக் தயாரிப்பு நிறுவனம்!!
சென்னையில் புதிய ஆலையை அமைக்க இருப்பதாக மோட்டார்சைக்கிள் பிரேக் தயாரிப்பில் புகழ்பெற்ற பிரெம்போ நிறுவனம் தெரிவித்துள்ளது. மானேசர், புனே நகரங்களை தொடர்ந்து சென்னையிலும் பிரெம்போ பிரேக் தயாரிப்பு நிறு
பிரேக் தயாரிப்பில் புகழ்பெற்ற இத்தாலியை பிரெம்போ பிரேக் நிறுவனம் சென்னையில் தனது புதிய ஆலையை அமைக்க இருக்கிறது.

மோட்டார்சைக்கிள்களுக்கான உயர் வகை பிரேக் சிஸ்டம் தயாரிப்பில் பிரெம்போ பிரேக் நிறுவனம் சிறந்து விளங்குகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் பிரேக் சிஸ்டம் தயாரிப்பை துவங்கியது.

ஹரியானா மாநிலம் மானேசர் மற்றும் மஹாராஷ்டிர மாநிலம் புனே ஆகிய இடங்களில் இந்த நிறுவனத்தின் பிரேக் தயாரிப்பு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், எதிர்கால தேவை கருதி சென்னையில் புதிய ஆலையை அமைக்க இருப்பதாக பிரெம்போ நிறுவனம் அறிவித்துள்ளது.

மானேசர் மற்றும் புனே ஆலைகளை மேம்படுத்துவதுடன் சென்னையில் புதிய ஆலையை கட்டுவதற்காக ரூ.72.14 கோடியை முதலீடு செய்ய அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ஆசியாவின் டெட்ராய்ட் என்று போற்றப்படும் சென்னையில் ஏராளமான வாகன தயாரிப்பு நிறுவனங்கள் செயல்படுவதால், அந்த நிறுவனங்களுடன் எளிதில் தொழில்நுட்ப பகிர்மானம் செய்துகொண்டு, பிரேக்குகளை சப்ளை செய்யும் விதத்தில் சென்னையில் ஆலையை அமைக்க இருக்கிறது.

கடந்த ஏப்ரல் 1ந் தேதி முதல் 125சிசி திறனுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கட்டாயமாக்கப்பட்டு இருப்பதும், தேவை அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதனை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளவும் புதிய ஆலை பிரெம்போ நிறுவனத்திற்கு அவசியமாகி இருக்கிறது.

பிரெம்போ நிறுவனம் இரண்டு பிராண்டுகளில் டிஸ்க் பிரேக் சிஸ்டம்களை தயாரித்து வழங்குகிறது. உயர்வகை மோட்டார்சைக்கிள்களுக்கு பிரெம்போ பிராண்டிலும், குறைவான விலை கொண்ட மோட்டார்சைக்கிள்களுக்கு பைப்ரே என்ற பிராண்டிலும் சப்ளை செய்கிறது.

குறைவான விலை மோட்டார்சைக்கிள்களுக்கான பிரேக் தயாரிப்புத் துறையில் 50 சதவீத மார்க்கெட் பங்களிப்பை பிரெம்போ நிறுவனம் இந்தியாவில் வைத்திருக்கிறது. சென்னை ஆலையின் மூலமாக இதனை மேலும் அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








