இந்தியன் ஸ்கவுட் அவதாரத்தில் ராயல் என்ஃபீல்டு... இது எப்டி இருக்கு?

புல்லட்டீர் நிறுவனம் புதிய கஸ்டமைஸ் மோட்டார்சைக்கிளை வெளியிட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

By Saravana Rajan

ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்களை மிக சிறப்பாக கஸ்டமைஸ் செய்து தருவதில் பெங்களூரை சேர்ந்த புல்லட்டீர் நிறுவனம் சிறந்து விளங்குகிறது. தற்போது இந்த நிறுவனம் வெளியிட்டு இருக்கும் புதிய மாடல் பிரமிக்க வைக்கிறது.

இந்தியன் ஸ்கவுட் அவதாரத்தில் ராயல் என்ஃபீல்டு...!

ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிளை இந்தியன் ஸ்கவுட் மோட்டார்சைக்கிள் போன்று மாற்றங்களை செய்து வெளியிட்டு இருக்கிறது புல்லட்டீர் கஸ்டமைஸ் நிறுவனம். பார்த்த உடன் இதனை ராயல் என்ஃபீல்டு என்பதை நம்ப முடியாத அளவுக்கு மிக சிறப்பாக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இந்தியன் ஸ்கவுட் அவதாரத்தில் ராயல் என்ஃபீல்டு...!

இந்தியன் ஸ்கவுட் மோட்டார்சைக்கிளை பிரதிபலிக்கும் விதத்தில், வட்ட வடிவிலான சிறிய ஹெட்லைட், ஹேண்டில்பார், ஃபோர்க்குகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

இந்தியன் ஸ்கவுட் அவதாரத்தில் ராயல் என்ஃபீல்டு...!

குறிப்பாக, இதன் பெட்ரோல் டேங்க் அமைப்பும், கருப்பு நிற அலாய் வீல்களும் இந்தியன் ஸ்கவுட் மாடலை ஒத்திருக்கிறது. மார்வெல் என்ற இதன் குறியீட்டுப் பெயரில் பக்கவாட்டு கவுல் பகுதியில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

Recommended Video

BSA Motorcycles India Launch Rumour Shared By Anand Mahindra - DriveSpark
இந்தியன் ஸ்கவுட் அவதாரத்தில் ராயல் என்ஃபீல்டு...!

எஞ்சின் பகுதியும் கருப்பு வண்ண பூச்சு மூலமாக இது ராயல் என்ஃபீல்டு என்பதை கண்டு பிடிக்க முடியாத அளவுக்கு மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன..

Trending On Drivespark:

இந்தியன் ஸ்கவுட் அவதாரத்தில் ராயல் என்ஃபீல்டு...!

சைலென்சரும் இந்தியன் ஸ்கவுட் மோட்டார்சைக்கிளை போலவே கொடுக்கப்பட்டு இருப்பது சிறப்பு. முன்சக்கரத்திலும், பின்சக்கரத்திலும் டிஸ்க் பிரேக்குகள் இருக்கின்றன.

இந்தியன் ஸ்கவுட் அவதாரத்தில் ராயல் என்ஃபீல்டு...!

புல்லட்டீர் நிறுவனத்தின் பெயர் பெட்ரோல் டேங்கின் வசீகரத்தை கூடுதலாக்குகிறது. பழுப்பு வண்ண இருக்கைகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. பின்புறத்தில் டெயில் லைட் கூட இந்தியன் ஸ்கவுட் போலவே இருப்பது சிறப்பு.

Trending On Drivespark:

இந்தியன் ஸ்கவுட் அவதாரத்தில் ராயல் என்ஃபீல்டு...!

இந்த புதிய கஸ்டமைஸ் மோட்டார்சைக்கிள் குறித்த கூடுதல் விபரங்களுக்கு பெங்களூர் புல்லட்டீர் நிறுவனத்தை [email protected] என்ற இ-மெயில் முகவரியின் மூலமாக தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

Image Source: Bulleteer Customs

Trending DriveSpark YouTube Videos

Subscribe To DriveSpark Tamil YouTube Channel - Click Here

Most Read Articles
English summary
Bulleteer Custom has revealed new customised motorcycle based on Royal Enfield.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X