க்ளீவ்லேண்ட் ஏஸ் டீலக்ஸ் மற்றும் மிஸ்ஃபிட் மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு அறிமுகம்!!

ஆட்டோ எக்ஸ்போவில் 4 மோட்டார்சைக்கிள் மாடல்களை க்ளீவ்லேண்ட் காட்சிப்படுத்தி இருந்தது. அதில், ஏஸ் டீலக்ஸ் மற்றும் மிஸ்ஃபிட் ஆகிய இரண்டு மாடல்களையும் தற்போது விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. ஏஸ் டீலக்ஸ்

ஹார்லி டேவிட்சன், இந்தியன் மோட்டார்சைக்கிள் மற்றறும் யுஎம் நிறுவனங்களின் வரிசையில் அமெரிக்காவை சேர்ந்த க்ளீவ்லேண்ட் சைக்கிள்ஒர்க்ஸ் மோட்டார்சைக்கிள் தயாரிப்பு நிறுவனம் இந்தியாவில் வர்த்தகத்தை துவக்கி இருக்கிறது.

க்ளீவ்லேண்ட் ஏஸ் டீலக்ஸ் மற்றும் மிஸ்ஃபிட் மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு அறிமுகம்!!

கடந்த பிப்ரவரி மாதம் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் 4 மோட்டார்சைக்கிள் மாடல்களை க்ளீவ்லேண்ட் காட்சிப்படுத்தி இருந்தது. அதில், ஏஸ் டீலக்ஸ் மற்றும் மிஸ்ஃபிட் ஆகிய இரண்டு மாடல்களையும் தற்போது விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. ஏஸ் டீலக்ஸ் மோட்டார்சைக்கிள் ரூ.2.24 லட்சத்திலும், மிஸ்ஃபிட் மோட்டார்சைக்கிள் ரூ.2.49 லட்சத்திலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

க்ளீவ்லேண்ட் ஏஸ் டீலக்ஸ் மற்றும் மிஸ்ஃபிட் மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு அறிமுகம்!!

க்ளீவ்லேண்ட் ஏஸ் டீலக்ஸ் மாடலானது பாரம்பரிய டிசைன் தாத்பரியங்களை கொண்ட ரெட்ரோ கிளாசிக் ரக மாடலாகவும், மிஸ்ஃபிட் மாடலானது கஃபே ரேஸர் ரக மாடலாகவும் டிசைன் தாத்பரியங்களை பெற்றிருக்கின்றன.

க்ளீவ்லேண்ட் ஏஸ் டீலக்ஸ் மற்றும் மிஸ்ஃபிட் மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு அறிமுகம்!!

இந்த இரண்டு மோட்டார்சைக்கிள்களிலும் 229சிசி ஏர்கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 15.4 பிஎச்பி பவரையும், 16 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

க்ளீவ்லேண்ட் ஏஸ் டீலக்ஸ் மற்றும் மிஸ்ஃபிட் மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு அறிமுகம்!!

க்ளீவ்லேண்ட் மிஸ்ஃபிட் மோட்டார்சைக்கிளானது டபுள் கிராடில் சாஸியிலும், ஏஸ் டீலக்ஸ் மாடலானது சிங்கிள் டவுன்ட்யூப் ஃப்ரேமிலும் கட்டமைக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு மோட்டார்சைக்கிளிலுமே அப்சைடு டவுன் ஃபோர்க்குகள் கொண்ட முன்புற சஸ்பென்ஷனும், பின்புறத்தில் அட்ஜெஸ்ட் வசதியுடன் கூடிய டியூவல் ஷாக் அப்சார்பர்களும் பொருத்தப்பட்டுள்ளன.

க்ளீவ்லேண்ட் ஏஸ் டீலக்ஸ் மற்றும் மிஸ்ஃபிட் மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு அறிமுகம்!!

க்ளீவ்லேண்ட் மிஸ்ஃபிட் மாடலின் முன்சக்கரத்தில் 320மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்சக்கரத்தில் 220மிமீ டிஸ்க் பிரேக்கும் கொடுக்கப்பட்டுள்ளன. ஏஸ் டீலக்ஸ் மாடலில் முன் சக்கரத்தில் 298மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்சக்கரத்தில் 210மிமீ டிஸ்க் பிரேக்கும் பொருத்தப்பட்டுள்ளன.

க்ளீவ்லேண்ட் ஏஸ் டீலக்ஸ் மற்றும் மிஸ்ஃபிட் மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு அறிமுகம்!!

இதனிடையே, நாட்டின் முக்கிய நகரங்களில் டீலர்ஷிப்புகளை அமைக்கும் முயற்சியில் க்ளீவ்லேண்ட் சைக்கிள்ஒர்க்ஸ் நிறுவனம் தீவிரமாக இறங்கி இருக்கிறது. நவி மும்பையில் உள்ள வாஷி என்ற இடத்தில் முதல் ஷோரூமை திறந்துள்ளது. குறிப்பாக, முதல்கட்டமாக தென் இந்தியாவில் அதிக ஷோரூம்களை திறக்க திட்டமிட்டுள்ளது.

க்ளீவ்லேண்ட் ஏஸ் டீலக்ஸ் மற்றும் மிஸ்ஃபிட் மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு அறிமுகம்!!

க்ளீவ்லேண்ட் மோட்டார்சைக்கிள்கள் முக்கிய உதிரிபாகங்களாக தருவிக்கப்பட்டு, புனேயில் அமைக்கப்பட்டு இருக்கும் ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது. டீலர் நெட்வொர்க் வலுவாக்கப்பட்ட பின்னர் புதிய மாடல்களை க்ளீவ்லேண்ட் நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

க்ளீவ்லேண்ட் ஏஸ் டீலக்ஸ் மற்றும் மிஸ்ஃபிட் மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு அறிமுகம்!!

பாரம்பரிய டிசைன் தாத்பரியங்களின் அடிப்படையில் ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் மாடல்களை குறிவைத்து களமிறக்கப்பட்டாலும், எஞ்சின் சிசி குறைவாக இருப்பதாலும், ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்களை விட விலை மிக அதிகம் என்பதும், இந்த மாடல்களுக்கு சற்று பின்னடைவாக கருதப்படுகிறது. எனினும், புதுமையை விரும்பும் இந்தியர்களுக்கு இது நல்ல தேர்வாக அமையும்.

More from DriveSpark

Article Published On: Friday, September 21, 2018, 11:31 [IST]
English summary
Cleveland Cyclewerks Misfit And Ace Deluxe Launched In India: American motorcycle manufacturer Cleveland Cyclewerks has launched the Misfit and Ace Deluxe in the country. The Cleveland Misfit is priced at Rs 2.49 lakh while the Cleveland Ace Deluxe carries a price tag of Rs 2.24 lakh. Both prices are ex-showroom (Delhi).
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+