பளபளக்கிறது புல்லட் க்ரிஸ்ட்டல் எடிசன்
உலகில் நீண்டகாலமாக மோட்டார் சைக்கிள் உற்பத்தியில் ஈடுபட்டு வரும் ராயல் என்பீல்டு புல்லட் ரக பைக்கில் க்ரிஸ்ட்டல் எடிசன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
உலகில் நீண்டகாலமாக மோட்டார் சைக்கிள் உற்பத்தியில் ஈடுபட்டு வரும் ராயல் என்பீல்டு புல்லட் ரக பைக்கில் க்ரிஸ்ட்டல் எடிசன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்திய மோட்டார் சைக்கிள் சந்தையில் ராயல் என்பீல்டிற்கு என தனி இடம் உள்ளது. இதன் வாடிக்கையாளர்கள் ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிளை தங்களின் பெரும் கவுரவமாகவே கருதுகின்றனர்.

ராயல் என்பீல்டு வாடிக்கையாளர்கள் தொடர்ந்து தங்கள் ஆதரவை அளித்து வருகின்றனர். அதற்கேற்றார் போல் ராயல் என்பீல்டு நிறுவனமும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த வாகனங்களையே வடிவமைத்து தருகிறது.

ராயல் என்பீல்டு புல்லட் ரக வாகனத்தின் வெற்றிக்கு காரணம் அதன் டிசைன் தான் என கருதும் ராயல் என்பீல்டு நிறுவனம் பல ஆண்டுகளாக அந்த டிசைனில் பெரும் மாற்றத்தை செய்யாமல் அதன் தொழிற்நுட்பங்களை அவ்வப்போது அப்டேட் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் வாடிக்கையாளர்கள் புல்லட் வாகனத்தின் மீது பல ஆண்டுகளாக காட்டி வரும் ஆர்வத்தை கொண்டாடும் வகையில் முற்றிலும் க்ரிஸ்ட்டல்களால் இழைக்கப்பட்ட ராயல் என்பீல்டு புல்லட் க்ரிஸ்ட்டல் எடிசன் பைக் அரியானா மாநிலம் குர்கானில் உள்ள பாரம்பரிய போக்குவரத்து அருங்காட்சியங்கத்தில் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கிறது.

இந்த புல்லட் முழுவதும் பளபளக்கும் க்ரிஸ்ட்டல் கற்கள் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கின் முகப்பு பகுதியில் இருந்து பின்புற மட்கார்டு பகுதி வரை க்ரிஸ்ட்டல் கற்கள் பதிக்கப்பட்டுள்ளதால் காண்பவர்கள் கண்களை கவர்கிறது.

இதன் 346 சிசி வெரியண்ட் 19.8 பி.எச்.பி., மற்றும் 28 என்.எம். டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியது. அதே போல் 499 சிசி வெரியண்ட் 27.1 பி.எச்பி. மற்றும் 41.4 என்.எம். டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியது.

இது போன்று க்ரிஸ்ட்டல் கற்களால் அழகூட்டப்படும் விதம் இதற்கு முன்னர் சூப்பர் கார்களில் செய்யப்பட்டது. அது சூப்பர் கார் ஓனர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பிற்குள்ளானது.

தற்போது காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள இந்த புல்லட் க்ரிஸ்ட்டல் எடிசன் பைக் விற்பனைக்கு வராது என்பது கூடுதல் தகவல்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்:


Click it and Unblock the Notifications








