டுகாட்டி 959 பனிகேல் கோர்ஸே சூப்பர் பைக் விற்பனைக்கு அறிமுகம்!!
டுகாட்டி 959 பனிகேல் சூப்பர் பைக்கின் ஸ்பெஷல் எடிசன் மாடலாக கோர்ஸே அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கில் மோட்டோஜீபி பைக்குகளில் கொடுக்கப்படும் விசேஷ கிராஃபிக்ஸ் ஸ்டிக்கருடன் புதிய வண்ணங்களி
புதிய டுகாட்டி 959 பனிகேல் கார்ஸ் சூப்பர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

டுகாட்டி 959 பனிகேல் சூப்பர் பைக்கின் ஸ்பெஷல் எடிசன் மாடலாக கார்ஸ் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கில் மோட்டோஜீபி பைக்குகளில் கொடுக்கப்படும் விசேஷ கிராஃபிக்ஸ் ஸ்டிக்கருடன் புதிய வண்ணங்களில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. சாதாரண மாடலைவிட இது பார்ப்பதற்கு மிரட்டலாகவும், ரேஸ் பைக்குகள் போன்ற தோற்றத்தையும் தருகிறது.

இதுதவிர, இந்த புதிய மாடலில் மேம்படுத்தப்பட்ட சாஸியுடன் சிறந்த தொழில்நுட்ப அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த பைக்கில் அதிநவீன தொழில்நுட்பத்திலான டியூவல் சேனல் பாஷ் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், டுகாட்டி டிராக்ஷன் கன்ட்ரோல், டுகாட்டி குயிக் ஷிஃப்ட் வசதி, எஞ்சின் பிரேக் கன்ட்ரோல், ரைடு பை ஒயர் தொழில்நுட்பங்கள் இடம்பெற்றுள்ளன.

புதிய டுகாட்டி 959 பனிகேல் கோர்ஸே பைக்கில் 955சிசி சூப்பர்க்வாட்ரோ எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 157 பிஎச்பி பவரையும், 107.4 என்எம் டார்க் திறனையும் வாரி வழங்கும் திறன் படைத்தது.

இந்த பைக்கில் மூன்று விதமான நிலைகளில் எஞ்சின் இயக்கத்தை கட்டுப்படுத்தும் டிரைவிங் மோடுகள் கொடுக்கப்பட்டுள்ளன. ரேஸ், ஸ்போர்ட் மற்றும் வெட் ஆகிய டிரைவிங் மோடுகள் சாலை நிலை மற்றும் சீதோஷ்ண நிலையை பொறுத்து பயன்படுத்திக் கொள்ள முடியும்.

வெளிநாடுகளில் ஓலின்ஸ் சஸ்பென்ஷன் அமைப்பு, லித்தியம் அயான் பேட்டரி, ஓலின்ஸ் ஸ்டீயரிங் டேம்பர் மற்றும் அக்ரபோவிக் சைலென்சர் உள்ளிட்டவை கொடுக்கப்படுகின்றன. ஆனால், இந்திய மாடலில் இவை இல்லாதது ஏமாற்றம் தரும் விஷயமே.

புதிய டுகாட்டி 959 பனிகேல் கோர்ஸே மாடலுக்கு டெல்லி உள்ளடக்கிய என்சிஆர் பிராந்தியம், மும்பை, புனே, ஆமதாபாத், பெங்களூர், கொச்சி, கொல்கத்தா மற்றும் சென்னை ஆகிய நகரங்களில் உள்ள டீலர்ஷிப்புகளில் முன்பதிவு செய்து டெலிவிரி பெற முடியும்.

அடுத்த மாதம் 13 மற்றும் 14 தேதிகளில் டெல்லி அருகே உள்ள புத் இன்டர்நேஷனல் சர்க்யூட் பந்தய களத்தில் நடைபெற இருக்கும் டுகாட்டி நிறுவனத்தின் பந்தய கள நாள் நிகழ்வின்போது இந்த புதிய மாடல் காட்சிக்கு வைக்கப்பட இருக்கிறது. அங்கும் சென்று வாடிக்கையாளர்கள் இந்த பைக்கை நேரடியாக பார்க்கும் வாய்ப்பு வழங்கப்பட இருக்கிறது.

ரூ.15.20 லட்சத்தில் புதிய டுகாட்டி 959 பனிகேல் கோர்ஸே மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. விலையை குறைவாக நிர்ணயிக்கும் நோக்கில், வெளிநாடுகளில் இருக்கும் சில சிறப்பு தொழில்நுட்ப அம்சங்கள், இந்த மாடலில் இடம்பெறவில்லை என்றாலும், ரேஸ் பைக்குகளை நினைவூட்டும் தோற்றம் இந்திய வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும்.


Click it and Unblock the Notifications