இந்தியாவின் முதல் டுகாட்டி பனிகேல் வி4 ஸ்பெஷல் பைக்!

இந்தியாவின் முதல் டுகாட்டி பனிகேல் வி4 ஸ்பெஷல் சூப்பர் பைக் வாடிக்கையாளரிடம் டெலிவிரி கொடுக்கப்பட்டுள்ளது. ரூ.51.81 லட்சம் விலையில் இந்த புதிய சூப்பர் பைக் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த

இந்தியாவின் முதல் டுகாட்டி பனிகேல் வி4 ஸ்பெஷல் சூப்பர் பைக் வாடிக்கையாளரிடம் டெலிவிரி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சூப்பர் பைக்கின் சிறப்பம்சங்கள் மற்றும் இதர சுவாரஸ்யத் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

இந்தியாவின் முதல் டுகாட்டி பனிகேல் வி4 ஸ்பெஷல் பைக்!

உலகின் முதல் தர பைக் பந்தயமான மோட்டோ ஜீபியில் டுகாட்டி நிறுவனம் டெஸ்மோசெடிசி ஜிபீ என்ற ரேஸ் பைக்கை பயன்படுத்தி வருகிறது. ரேஸ் டிராக்குகளில் மட்டுமே பயன்படுத்தக்கூடிய இந்த பைக்கில் சில மாறுதல்களுடன் சாதாரண சாலைகளிலும் பயன்படுத்தப்படும் ரகத்தில் பனிகேல் வரிசையில் வி4 ஸ்பெஷல் என்ற விசேஷ மாடலை விற்பனைக்கு கொண்டு வந்தது.

இந்தியாவின் முதல் டுகாட்டி பனிகேல் வி4 ஸ்பெஷல் பைக்!

உலக அளவில் மொத்தமாகவே 1,500 பைக்குகள் மட்டுமே விற்பனைக்கு செல்ல இருப்பதாகவும் டுகாட்டி அறிவித்தது. இந்த சிறப்பு வாய்ந்த மாடலை இந்தியாவை சேர்ந்த பைக் பிரியர் கார்த்திகேய உனியல் முன்பதிவு செய்து இருந்தார். அவருக்கு இந்த விசேஷ டுகாட்டி மாடல் டெலிவிரி கொடுக்கப்பட்டு இருக்கிறது.

இந்தியாவின் முதல் டுகாட்டி பனிகேல் வி4 ஸ்பெஷல் பைக்!

இந்த சக்திவாய்ந்த சூப்பர் பைக்கில் 1,103 வி4 எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது இந்த எஞ்சின் அதிகபட்சமாக 226 பிஎச்பி பவரையும், 133.6 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த எஞ்சினுடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

இந்தியாவின் முதல் டுகாட்டி பனிகேல் வி4 ஸ்பெஷல் பைக்!

டுகாட்டி பனிகேல் வி4 ஸ்பெஷல் பைக்கில் அட்ஜெஸ்ட் வசதியுடன் கூடிய ஓலின்ஸ் சஸ்பென்ஷன் கொடுக்கப்பட்டு இருக்கிறது. முன்புறத்தில் NIX-30 அப்சைடு டவுன் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் TTX36 ஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டு இருக்கிறது.

இந்தியாவின் முதல் டுகாட்டி பனிகேல் வி4 ஸ்பெஷல் பைக்!

இந்த பைக்கிற்கு மெக்னீசியம் ரேஸிங் சக்கரங்களை விருப்பத்தின் பேரில் வாங்கி பொருத்திக் கொள்ளும் வாய்ப்பை டுகாட்டி வழங்க இருக்கிறது. இதற்கு கூடுதல் விலை செலுத்த வேண்டும்.

இந்தியாவின் முதல் டுகாட்டி பனிகேல் வி4 ஸ்பெஷல் பைக்!

இந்த பைக்கில் இத்தாலியின் தேசியக் கொடியை பிரதிபலிக்கும் விதமாக, விசேஷமான மூவர்ண கலவை கொடுக்கப்பட்டு இருக்கிறது. அக்ரபோவிக் நிறுவனத்திடமிருந்து சப்ளை பெறப்படும் சைலென்சர் கொடுக்கப்பட்டு இருக்கிறது. மேலும், ஹேண்டில்பார் நடுவில் சிறப்பு அடையாள எண்களும் பொருத்தப்பட்டுள்ளன.

இந்தியாவின் முதல் டுகாட்டி பனிகேல் வி4 ஸ்பெஷல் பைக்!

அல்கான்ட்ரா இருக்கைகள், கார்பன் ஃபைபரிலான கால் பாதுகாப்பு கவசம், பில்லட் ஸ்டீயரிங் பிளேட் மற்றும் ஸ்கிரீன் பிரிண்டிங் முறையிலான டுகாட்டி லோகோ ஆகியைவயும் இதன் முக்கிய சிறப்பம்சங்களாக இருக்கின்றன.

இந்தியாவின் முதல் டுகாட்டி பனிகேல் வி4 ஸ்பெஷல் பைக்!

ரூ.51.81 லட்சம் விலையில் இந்த புதிய சூப்பர் பைக் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. கவாஸாகி நின்ஜா எச்-2 மற்றும் அப்ரிலியா ஆர்எஸ்வி-4 ஆகிய சூப்பர் பைக் மாடல்களுக்கு இது போட்டியான மாடலாக கூறலாம்.

Article Published On: Thursday, November 15, 2018, 18:32 [IST]
English summary
India’s First Ducati Panigale V4 Speciale Delivered; Priced At Rs 51.81 Lakh
மேலும்... #டுகாட்டி
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+