TRENDING ON ONEINDIA
-
ஒதுக்கி ஓரம் கட்டப்படும் தம்பிதுரை.. அதிமுகவில் என்னதான் நடக்குது?
-
கை கட்டுகளை அவிழ்த்து விட்ட மோடி... பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட முழு வீச்சில் தயாராகும் இந்திய ராணுவம்...
-
Nayanthara: காதலர் தினத்தில் நயன், விக்கி ஒரே கொஞ்சல்ஸ், முத்தம்: கடுப்பில் மொரட்டு சிங்கிள்ஸ்
-
கொடூரனான துரியோதனன் எப்படி சொர்க்கத்துக்கு சென்றான்? அப்படி என்ன லஞ்சம் கொடுத்தான் தெரியுமா?
-
வாட்ஸ்ஆப்: இனி குரூப்பில் சேர்க்க பயனரின் அனுமதி தேவை.!
-
Ind vs Aus : தினேஷ் கார்த்திக் இடத்தை பறித்த ரிஷப் பண்ட்.. அணியில் இடம் பெற்ற ராகுல், விஜய் ஷங்கர்
-
வெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா
-
250 தூண்கள் கொண்ட தென் காளகஸ்தி - சனியிலிருந்து தப்பிக்க உடனே போங்க
150 கிமீ வேகத்தில் எருமை மாட்டின் மீது மோதிய டுகாட்டி பைக்... குஜராத்தில் கோரம்!

குஜராத்தில், அதிவேகத்தில் சென்ற டுகாட்டி பைக் எருமை மாட்டின் மீது மோதி பயங்கர விபத்தில் சிக்கியது. இந்த கோர சம்பவம் குறித்த தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.
குஜாராத் மாநிலம், ஆமதாபாத் நகரை சேர்ந்தவர் மொயின் ஷேக். அங்குள்ள மோட்டோநோவா என்ற டுகாட்டி நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட டீலரில் விற்பனை பிரதிநிதியாக பணிபுரிந்து வந்தார். பைக் ஓட்டுவதிலும் சூரப்புலியாக இருந்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று குடியரசு தினத்தை முன்னிட்டு டுகாட்டி பைக்கில் மொயின் ஷேக் ரைடு சென்றுள்ளார். அவர் அதிவேகமாக பைக்கை ஓட்டி சென்றுள்ளார்.
காந்திநகர் கோபா சர்க்கிள் என்ற இடம் அருகே அவர் சென்றபோது சாலையின் குறுக்கே எருமை மாடு ஒன்று எதிர்பாராதவிதமாக வந்துள்ளது. அதிவேகத்தில் அவரால் பைக் வேகத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.
எருமை மாடு மீது நேராக பைக்குடன் மோதி இருக்கிறார். மோதிய வேகத்தில் மொயின் ஷேக் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்துடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
எருமை மாடும் இந்த விபத்தில் படுகாயமடைந்து உயிரிழந்தது. இந்த கோர சம்பவம் நேற்று அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
மொயின் ஷேக் ஹெல்மெட் அணிந்திருந்தாலும், ஹெல்மெட்டில் இறுக பற்றிக் கொள்ளும் பூட்டை லாக் செய்யாமல் கழற்றி விட்டு சென்றுள்ளார். இதனால், தலையில் பலத்த காயம் ஏற்பட்டுவிட்டது.
மேலும், மணிக்கு 150 கிமீ வேகத்திற்கும் மேலாக அவர் பைக்கை ஓட்டிச் சென்றதாக கூறப்படுகிறது. அவருக்கு பின்னால் டுகாட்டி பைக்கில் வந்தவர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.
நமது நாட்டில் அதிசக்திவாய்ந்த பைக்குகள் விற்பனை அதிகரித்து வருகிறது. ஆனால், பைக் ஓட்டுபவர்கள் பலரிடம் நிதானம் இல்லை. பைக்கை ஓட்டுவதற்கான வழிமுறைகள் மற்றும் கையாளும் திறன் குறைவாக இருக்கிறது.
இதனால், இதுபோன்ற கோர விபத்துக்களை தவிர்க்க முடியாத விஷயமாக மாறி வருகிறது. டுகாட்டி போன்ற சூப்பர் பைக்குகளை வாங்குபவர்களுக்கும், ஓட்டுபவர்களுக்கும் கடுமையான விதிமுறைகளுடன் பிரத்யேக ஓட்டுனர் உரிமம் வழங்குவது அவசியமாகிறது.
மேலும், இதுபோன்ற பைக்குகளை வாங்குபவர்களும், ஓட்டுபவர்களும் சாலை பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், இடத்திற்கு தகுந்தாற்போல் ஓட்டுவதும் அவசியம்.
மக்கள் மற்றும் விலங்குகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில், போதிய கட்டமைப்பு வசதிகள் இருப்பது இல்லை. எனவே, நம் நாட்டு சாலைகளில் அதிவேகம் நொடியில் இதுபோன்று உயிரை பறித்துவிடும் ஆபத்து இருக்கிறது என்பதை இளைஞர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும்.
எருமை மாடு மீது டுகாட்டி மோதிய டுகாட்டி ரைடர் ஹெல்மெட்டை இறுக கட்டாமல் விட்டதுதான் அவரின் உயிருக்கே உலை வைக்கும் விஷயமாகிவிட்டது. இந்த நிலையில், போலி ஹெல்மெட்டுகளை ஒழிக்கும் நடவடிக்கையில் பெங்களூர் போக்குவரத்து போலீசார் முக்கிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றனர்.