டுகாட்டி பைக் பிராண்டை ஃபோக்ஸ்வாகன் குழு விற்க போவதாக வதந்தி கிளம்பியுள்ளது

ஃபோக்ஸ்வாகன் குழுவிற்கு ஏற்பட்ட கடன் அதிகரிப்பு காரணமாக டுகாட்டி உள்ளிட்ட சில நிறுவனங்களை விற்க போவதாக செய்திகள் பரவியது.

By Balasubramanian

ஃபோக்ஸ்வாகன் குரூப் அந்நிறுவனத்தின் வாகனங்களை மட்டும்மல்லாமல் ஆடி, பென்ட்லி, புகாட்டி, லாம்போகினி, போர்சே, ஸ்கோடா, ஆகிய பிராண்ட் கார்களையும், டுகாட்டி பிரண்ட் பைக்கையும் விற்பனை செய்து வருகிறது.

டுகாட்டி பைக் பிராண்டை ஃபோக்ஸ்வாகன் குழு விற்க போவதாக வதந்திகள் கிளம்பியுள்ளது

இந்நிலையில் கடந்தாண்டு ஃபோக்ஸ்வாகன் குழுவிற்கு ஏற்பட்ட கடன் அதிகரிப்பு காரணமாக டுகாட்டி உள்ளிட்ட சில பிரண்ட்டுகளை விற்க போவதாக செய்திகள் பரவியது.

டுகாட்டி பைக் பிராண்டை ஃபோக்ஸ்வாகன் குழு விற்க போவதாக வதந்திகள் கிளம்பியுள்ளது

இதையடுத்து வர்த்தக குழுவினரும், ஃபோக்ஸ்வாகன் ஊழியர்கள் சங்கத்தினரும் இதற்கு எதிர்ப்புகளை தெரிவித்தனர். இதனால் டுகாட்டி பைக் நிறுவனத்திற்கு மற்ற நிறுவனங்கள் நல்ல விலைக்கு கேட்டு வந்த போதும் ஃபோக்ஸ்வாகன் நிறுவனம் அதை தட்டி கழித்தது.

டுகாட்டி பைக் பிராண்டை ஃபோக்ஸ்வாகன் குழு விற்க போவதாக வதந்திகள் கிளம்பியுள்ளது

தற்போது ஃபோக்ஸ்வாகன் நிறுவனத்திற்கு புதிய சிஇஓ வாக ஹர்பேரெட் டைசிஸ் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்னர் பிஎம்டபிள்யூ நிறுவனத்தில் பணியாற்றி கடந்த 2015 ஃபோக்ஸ்வாகன் குழுவில் இணைந்தார்.

டுகாட்டி பைக் பிராண்டை ஃபோக்ஸ்வாகன் குழு விற்க போவதாக வதந்திகள் கிளம்பியுள்ளது

இந்நிலையில் டுகாட்டி பைக் பிராண்டை ஃபோக்ஸ்வாகன் குழு விற்க போவதாக மீண்டும் செய்திகள் உலாவரத்துவங்கியுள்ளது. ஆனால் இது குறித்து அந்நிறுவனம் எந்த வித அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.

டுகாட்டி பைக் பிராண்டை ஃபோக்ஸ்வாகன் குழு விற்க போவதாக வதந்திகள் கிளம்பியுள்ளது

புதிதாக பொறுப்பேற்றுள்ள டைசிஸ் கடந்த 2003 முதல் 2007 வைர பி.எம்.டபிள்யூ மோட்டார்ராட் நிறுவனத்திற்கு தலைமை வகித்தார். அந்த கால கட்டத்தில் அவர் செலவுகளை குறைக்க கடும் நடவடிக்கைகளை எடுத்தார்.

டுகாட்டி பைக் பிராண்டை ஃபோக்ஸ்வாகன் குழு விற்க போவதாக வதந்திகள் கிளம்பியுள்ளது

இதுதான் தற்போது அவர் டுகாட்டி நிறவனத்தை விற்க முடிவெடுக்கலாம் என் கருத்தில் இந்த வதந்தி பரவி வருகிறது. எனினும் டுகாட்டி நிறுவனத்தை ஃபோக்ஸ்வாகன் விற்றாலும் அதை வாங்க மற்ற நிறுவனங்கள் போட்டி போட்டு வருகின்றனர்.

டுகாட்டி பைக் பிராண்டை ஃபோக்ஸ்வாகன் குழு விற்க போவதாக வதந்திகள் கிளம்பியுள்ளது

ஏன் என்றால் டுகாட்டி பைக்குகளின் விற்பனை கடந்த 8 ஆண்டுகளாக தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. கடந்த 2017ம் ஆண்டில் மட்டும் மொத்தம் 55,000 பைக்குகளை விற்பனை செய்தது.

டுகாட்டி பைக் பிராண்டை ஃபோக்ஸ்வாகன் குழு விற்க போவதாக வதந்திகள் கிளம்பியுள்ளது

2018ம் ஆண்டில் டுகாட்டி பைக் விற்பனை பெரும் லாபத்தை ஈட்டி தரும் என நம்பப்படுகிறது. எனினும் ஊழியர்கள் மற்றும் வர்த்தகர்களின் அழுத்தம் காரணமாக ஃபோக்ஸ்வாகன் டுகாட்டி பிராண்டை விற்பனை செய்யுமா என்பது சந்தேகமே.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்:

More from DriveSpark

Article Published On: Wednesday, April 18, 2018, 11:45 [IST]
English summary
Ducati Sale Rumours Begin Again After New VW Chief Appointment
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+