TRENDING ON ONEINDIA
-
டெல்லி உட்பட வட மாநிலங்களை குலுக்கிய நில அதிர்வு.. மக்கள் பீதி
-
டோல்கேட் விஷயத்தில் மோடி எடுத்த அதிரடி முடிவு இதுதான்... லோக்சபா தேர்தல் நெருங்குவதால் மெகா திட்டம்...
-
Yogi Babu:அடம்பிடிக்கும் வடிவேலு: இம்சை அரசன் ஆகும் யோகி பாபு?
-
லெஸ்பியன், கே போன்றோருக்கு எப்படிப்பட்ட பாலியல் ரீதியான பிரச்சினைகள் உண்டாகும்?
-
சென்னை பெரியமேடு லாட்ஜ் படுக்கை அறையில் இரகசிய கேமராகள்.! உஷார் மக்களே
-
முக்கிய வீரர் யார்? கோலியா? தோனியா? முகமது கைஃப் யாரை சொன்னார் தெரியுமா?
-
பாக் பொருளாதாரத்துக்கு நரம்படி கொடுத்த இந்தியா..? Most Favored Nation ஸ்டேட்டஸால் என்ன ஆகும்..?
-
புல்வாமா - தாக்குதல் நடந்தது இப்படி ஒரு அழகான இடத்துலயா? அடக் கடவுளே!
ஹார்லி டேவிட்சனின் முதல் எலெக்ட்ரிக் பைக் அறிமுகம்: விபரம்
ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மாடல் ஐக்மா கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த மின்சார மோட்டார்சைக்கிளின் கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.
நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்ற சொகுசு அம்சங்கள் கொண்ட க்ரூஸர் ரக மோட்டார்சைக்கிள் தயாரிப்பில் அமெரிக்காவை சேர்ந்த ஹார்லி டேவிட்சன் உலக அளவில் சிறந்து விளங்குகிறது. இந்திய சொகுசு ரக மோட்டார்சைக்கிள் மார்க்கெட்டிலும் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில், பேட்டரியில் இயங்கும் மின்சார மோட்டார்சைக்கிள் தயாரிப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.
அந்த வகையில், லைவ் வயர் என்ற பெயரில் அந்நிறுவனம் மின்சார மோட்டார்சைக்கிள் கான்செப்ட்டை கடந்த 2014-ம் ஆண்டு அறிமுகம் செய்தது. அதன் மேம்படுப்பட்ட தயாரிப்பு நிலை மாடல் இத்தாலியில் நடந்த ஐக்மா கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தது.
ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மாடலாக வர இருக்கும் லைவ் வயர் அடுத்த ஆண்டு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கான கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்போது, சில ஆண்டுகளில் இந்த மாடல் இந்தியாவிலும் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஹார்லி டேவிட்சன் லைவ் வயர் மோட்டார்சைக்கிளில் லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கிறது. மேக்னட் எலெக்ட்ரிக் மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மாடலாக இருப்பதால், க்ளட்ச் மற்றும் கியர் ஷிஃப்ட் லிவர் ஆகியவை இல்லை.
இந்த மோட்டார்சைக்கிளில் டிஎஃப்டி தொடுதிரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் பொருத்தப்பட்டு இருக்கிறது. இதனை புளூடூத் மூலமாக தொடர்புபடுத்தும் வசதியும் இருக்கும். நேவிகேஷன் மற்றும் மியூசிக் சிஸ்டம் ஆகியவற்றையும் இதன் மூலமாக இயக்க முடியும்.
MOST READ: மூன்று புதிய ஜாவா மோட்டார்சைக்கிள்கள் அறிமுகம்: ராயல் என்ஃபீல்டுக்கு நெருக்கடி!
இந்த மோட்டார்சைக்கிளில் இருக்கும் 10 kWh மின் மோட்டார் மணிக்கு 148 கிமீ வேகம் வரை செல்வதற்கான திறனை வழங்கும். இந்த மோட்டார் அதிகபட்சமாக 74 பிஎச்பி பவரையும், 70 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கிறது.
இந்த மோட்டார்சைக்கிளில் கூடுதலாக 12V லித்தியம் அயான் பேட்டரி ஒன்றும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. லைட்டுகள், ஹாரன் மற்றும் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டருக்கு இதிலிருந்துதான் மின்சாரம் பெறப்படும்.
ஹார்லி டேவிட்சன் லைவ் வயர் மின்சார மோட்டார்சைக்கிளில் முழுமையாக அட்ஜெஸ்ட் செய்யும் வசதியுடன் கூடிய ஷோவா சஸ்பென்ஷன் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிளின் முன்சக்கரத்தில் 300 மிமீ விட்டமுடைய இரண்டு டிஸ்க் பிரேக்குகள் கொண்ட பிரெம்போ மோனோ பிளாக் பிரேக் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. கார்னரிங் ஏபிஎஸ் மற்றும் டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டமும் உள்ளது.
இந்த மோட்டார்சைக்கிளில் 7 விதமான நிலைகளில் இயங்கும் டிரைவிங் மோடுகள் உள்ளன. ஓட்டுனரின் விருப்பத்தின்பேரில் இந்த டிரைவிங் மோடுகளை விருப்பப்படி தேர்வு செய்து கொள்ள முடியும்.
ஹார்லி டேவிட்சன் லைவ் வயர் மின்சார மோட்டார்சைக்கிளின் முழுமையான தொழில்நுட்ப விபரங்கள் வரும் ஜனவரி மாதம் அறிவிக்கப்பட்டு, முன்பதிவும் துவங்கப்பட இருக்கிறது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவில் எதிர்பார்க்கலாம்.