பிரம்மாண்டம், பிரமிப்பு... புதிய ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிளின் டீசர்!

அதிசக்திவாய்ந்த புதிய மோட்டார்சைக்கிள் மாடலின் கான்செப்ட்டை ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இத்தாலியில் நடைபெறும் இஐசிஎம்ஏ மோட்டார்சைக்கிள் கண்காட்சியில் காட்சிப்படுத்த இருக்கிறது. இந்தநிலையில், தனது ரசிகர்

அதிசக்திவாய்ந்த புதிய மோட்டார்சைக்கிள் மாடலின் கான்செப்ட்டை ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இத்தாலியில் நடைபெறும் இஐசிஎம்ஏ மோட்டார்சைக்கிள் கண்காட்சியில் காட்சிப்படுத்த இருக்கிறது. இந்தநிலையில், தனது ரசிகர்களின் ஆவலை அதிகப்படுத்தும் விதத்தில் மேலும் புதிய டீசரை அந்நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது.

பிரம்மாண்டம், பிரமிப்பு... புதிய ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிளின் டீசர்!

பாபர் ரக வடிவமைப்பில் வர இருக்கும் இந்த புதிய ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் மிக பிரம்மாண்டமாக இருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிளில் வட்ட வடிவிலான ஹெட்லைட், ஒற்றை இருக்கை, முன்புறம், பின்புறத்தில் பெரிய சைஸ் டயர்களுடன் அசத்தலாக இருக்கிறது.

பிரம்மாண்டம், பிரமிப்பு... புதிய ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிளின் டீசர்!

எல்இடி ஹெட்லைட், தட்டையான ஹேண்டில்பார் அமைப்பு ஆகியவையும் இந்த பாபர் ரக மோட்டார்சைக்கிளின் முத்தாய்ப்பான விஷயமாக இருக்கிறது. இரண்டு சக்கரங்களிலும் ட்வின் டிஸ்க் பிரேக் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பர் இடம்பெற்றுள்ளது.

பிரம்மாண்டம், பிரமிப்பு... புதிய ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிளின் டீசர்!

அத்துடன், இந்த மோட்டார்சைக்கிளில் வி- ட்வின் அமைப்புடைய இரண்டு சிலிண்டர்கள் கொண்ட 834சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கும். மேலும், அதற்காக இரண்டு புகைப்போக்கி குழல்கள் இருப்பதும் டீசரில் தெளிவாக இருக்கிறது.

பிரம்மாண்டம், பிரமிப்பு... புதிய ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிளின் டீசர்!

இந்த புதிய எஞ்சினை அமெரிக்காவை சேர்ந்த போலரிஸ் நிறுவனத்துடன் இணைந்து ராயல் என்ஃபீல்டு உருவாக்கி இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 90 பிஎச்பி பவரையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது.

பிரம்மாண்டம், பிரமிப்பு... புதிய ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிளின் டீசர்!

இந்த எஞ்சின் பிஎஸ்-6 மாசு உமிழ்வு கட்டுப்பாட்டு தரமுடையதாக இருக்கும். இங்கிலாந்தில் உள்ள ராயல் என்ஃபீல்டு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையமும், போலரிஸ் நிறுவனத்தின் தொழில்நுட்ப மையமும் இணைந்து இந்த புதிய எஞ்சினை உருவாக்கி இருக்கின்றன.

பிரம்மாண்டம், பிரமிப்பு... புதிய ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிளின் டீசர்!

இந்த புதிய ராயல் என்ஃபீல்டு பாபர் ரக மோட்டார்சைக்கிள் அடுத்த ஆண்டு இறுதியில் அல்லது 2020ம் ஆண்டு துவக்கத்தில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரம்மாண்டம், பிரமிப்பு... புதிய ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிளின் டீசர்!

ஜாவா மோட்டார்சைக்கிள் நிறுவனம் புதிய மோட்டார்சைக்கிள் மாடல்களை இஐசிஎம்ஏ கண்காட்சியில் அறிமுகம் செய்ய இருக்கும் நிலையில், சந்தைப் போட்டியை சமாளிக்க பல புதிய மாடல்களை ராயல் என்ஃபீல்டு நிறுவனமும் அறிமுகம் செய்து வருகிறது. இது நிச்சயம் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் தேர்வுகளை அளிக்கும் விஷயமாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, November 6, 2018, 15:21 [IST]
English summary
Royal Enfield Bobber V-Twin concept to be unveiled at EICMA 2018. The British motorcycle company had recently teased the image of the new Bobber-styled concept motorcycle, ahead of its official unveiling at EICMA 2018 and now, they have released another teaser image.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+