புதிய எம்ஃப்ளக்ஸ் எலெக்ட்ரிக் பைக்குகளின் டீசர் வெளியீடு!!

பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் எம்ஃப்ளக்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம் தனது இரண்டு புதிய மின்சாரத்தில் இயங்கும் பைக்குகளின் டீசரை வெளியிட்டு இருக்கிறது.

புதிய எம்ஃப்ளக்ஸ் எலெக்ட்ரிக் பைக்குகளின் டீசர் வெளியீடு!!

டெல்லியில் நடைபெற்ற சர்வதேச ஆட்டோ எக்ஸ்ப வில் இந்தியாவின் முதல் சூப்பர் பைக்கை எம்ஃப்ளக்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்தது. இந்த நிலையில், ஸ்ட்ரீட் பைட்டர் (STREET FIGHTER) ரகத்தில் இரண்டு புதிய எலெக்ட்ரிக் பைக்குகளை அந்த நிறுவனம் களமிறக்க இருக்கிறது. இந்த பைக்குகளின் டீசரை தற்போது அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த டீசர் இணையதளத்திலும் சமூக வலைத்தளங்களிலும் சக்கை போடு போட்டு கொண்டிருக்கிறது.

புதிய எம்ஃப்ளக்ஸ் எலெக்ட்ரிக் பைக்குகளின் டீசர் வெளியீடு!!

எனினும், இந்த எம்ப்ளெக்ஸ் எலெக்ட்ரிக் பைக்குகளின் தயாரிப்பானது ஆரம்பகட்டத்தில் தான் உள்ளது என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயம். இது எலக்ட்ரிக் வாகனம் என்பது கூடுதல் கவனம் தேவை என்றும் அதனாலேயே தாமதம் ஏற்படுகிறது என்றும் அந்நிறுவனம் வாடிக்கையாளர் எதிர்பார்ப்பை சற்று பூர்த்திசெய்துள்ளது.

புதிய எம்ஃப்ளக்ஸ் எலெக்ட்ரிக் பைக்குகளின் டீசர் வெளியீடு!!

இந்த எம்ப்ளெக்ஸ் 2 எனப்படும் இருசக்கர வாகனம் தனது விற்பனையை 2019 - ல் தொடங்கும் எனவும் எம்ப்ளெக்ஸ் 1 வாகன விற்பனைக்கு பின்னரே இதன் விற்பனை தேதி அறிவிக்க படும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதிய எம்ஃப்ளக்ஸ் எலெக்ட்ரிக் பைக்குகளின் டீசர் வெளியீடு!!

கூரான முன் விளக்குகள் மற்றும் சற்றே மேல எழுந்துள்ள ஹாண்டில் பார்கள் இந்த எலக்ட்ரிக் வாகனத்திற்கு அழகு சேர்கின்றன. வலைத்தளத்தில் வெளியான இதன் படங்களும் ஆர்ப்பரிக்கும் வகையில் அமைந்துள்ளது கூடுதல் சிறப்பு. முன் பக்கத்திற்கு ஏற்றால் போல் பின் சிகப்பு விளக்குகளும் தற்போதைய இளைஞர்களை கவரும் வகையில் மிகவும் ஸ்டைலாக அமைந்துள்ளது .

புதிய எம்ஃப்ளக்ஸ் எலெக்ட்ரிக் பைக்குகளின் டீசர் வெளியீடு!!

மேற்குறியதை தவிர மற்ற அனைத்தும் எம்ப்ளெக்ஸ் 1 வாகனத்தை ஒத்துதான் இருக்கும் என அந்த நிறுவனம் உறுதிபூண்டுள்ளது. எம்ப்ளெக்ஸ் 2 பைக்கில் இருக்கும் 60KW திறன் கொண் LIQUID COOLED AC இண்டக்க்ஷன் மோட்டார் ஆனது 80BHP செயல்திறனையும், 84Nm டார்க்கையும் வழங்க வல்லது. பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 200KM தூரம் வரை பயணிக்கும். 0- 100KM ஐ வெறும் 3 நொடிகளில் தொடும்.

Most Read Article:ரூ.9.99 லட்சத்தில் புதிய மஹிந்திரா மராஸ்ஸோ கார் விற்பனைக்கு அறிமுகம்! டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காருக்கு கடும் சவால்!

புதிய எம்ஃப்ளக்ஸ் எலெக்ட்ரிக் பைக்குகளின் டீசர் வெளியீடு!!

எம்ப்ளெக்ஸ் 1 வாகனம் எலக்ட்ரிக் வாகனத்திற்கு தேவையான அனைத்து செயல் திறன் மற்றும் கட்டமைப்பினை கொண்டு வெளிவர இருக்கிறது. இருப்பினும் எம்ப்ளெக்ஸ் 2 வாகனமானது கூடுதல் தொழில்நுட்பம், மாற்றியமைக்கப்பட்ட கட்டுமான தரங்கள் போன்றவற்றால் அமைக்கப்பட்டு ஸ்ட்ரீட் பைட்டர் என்ற ரகத்தில் நிலைநாட்டும் வகையில் உள்ளது. அதிக பயண தூரமாக 200km வரையறுத்து கொண்டிருக்கும் இந்த வாகனம் தனது தேவையை சிறப்பாய் அமையப்பெற்ற லித்தியம் அயான் பேட்டரியிடம்(LITHIUM ION BATTERY) பெறுகிறது.

புதிய எம்ஃப்ளக்ஸ் எலெக்ட்ரிக் பைக்குகளின் டீசர் வெளியீடு!!

43MM USD போர்க் தொழில்நுட்பத்தினால் ஆனா முன் பக்க சஸ்பென்ஷனும் , மோனோ ஷாக் சஸ்பென்ஷனால்(MONOSHOCK SUSPENSION) அமையப்பெற்ற பின் பக்க சஸ்பென்ஷனும் உங்கள் பயணத்தை சுகமாக அமைக்கும் என்பதில் ஐயமில்லை. ஓலின்ஸ் நிறுவனத்தின் சஸ்பென்ஷன்(OHLINS)அட்ஜெஸ்ட் வசதியுடன் விருப்பம்போல் மாற்றியமைத்து கொள்ளலாம் என்பது வாடிக்கையாருக்கான சிறப்பு தகவல்.

புதிய எம்ஃப்ளக்ஸ் எலெக்ட்ரிக் பைக்குகளின் டீசர் வெளியீடு!!

பிரேக் தொழில்நுட்பத்தை பொறுத்தவரை கூடுதல் செயல் திறன் அளிக்கும் ABS (ANTI-LOCK BRAKING SYSTEM) திட்டமே பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனுடன் ப்ரெம்போ 300MM இரட்டை டிஸ்க்(BREMBO DUAL DISC) மற்றும் 220MM டிஸ்க் முன்னும் பின்னும் சக்கரத்தில் அமைந்து பிரேக்கின் உணர்வை மேம்படுத்த உள்ளது.

புதிய எம்ஃப்ளக்ஸ் எலெக்ட்ரிக் பைக்குகளின் டீசர் வெளியீடு!!

எம்ப்ளெக்ஸ்1 இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் வாகனம் என்றபோதிலும், அதே நிறுவனம் எம்ப்ளெக்ஸ்2 வாகனத்தை வெளியிட முயற்சிப்பது அந்த குழுவின் உழைப்பையும், திறனையும் வெளிப்படுத்தும் விதமாய் உள்ளது. இந்த முறை அது மேம்படுத்தப்பட்ட நேக்கட் ஸ்ட்ரீட் பைட்டர் (NAKED STREET FIGHTER) என்பதே ஆர்வம். மேற்படி கூறியவாறு இந்த வாகனம் தனது முன்னோடியான எம்ப்ளெக்ஸ் 1 ஐ ஒத்துதான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் விதிவிலக்குகளை மேலே அலசி அறைந்தாயிற்று. 2019 இல் எம்ப்ளெக்ஸ் 2 வாகனத்தை நாம் அனைவரும் காண வல்லோம்.

{document1}

Tamil
English summary
Bangalore-based startup company Emflux Motors revealed India's first electric superbike, the Emflux One at the Auto Expo 2018. Now, the company has teased the Emflux Two naked electric streetfighter with a Futurefighter hashtag on its social media channels.
 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more