இப்படிப்பட்ட பைக்குகளை எல்லாம் இந்திய ராணுவம் பயன்படுத்தியதா? மறக்கப்பட்ட வரலாறு...!!!

இந்தியாவின் முதல் 5 கியர் பைக்கான CBZ,ராணுவம் கூட பயன்படுத்திய CD 100 உள்ளிட்ட சில பைக்குகளை இன்று நாம் மறந்தே விட்டோம்.

By Arun

இந்தியாவின் முதல் 5 கியர் பைக்கான CBZ,ராணுவம் கூட பயன்படுத்திய CD 100 உள்ளிட்ட சில பைக்குகளை இன்று நாம் மறந்தே விட்டோம். அப்படி ஹீரோ ஹோண்டா கூட்டணியில் வெளிவந்து, நம் மனதில் இருந்து அழிக்கப்பட்ட பைக்குகளின் நினைவுகளை அசைபோடுவது என்பது, மீண்டும் அன்றைய காலகட்டத்திற்கே நம்மை அழைத்து செல்வதாக இருக்கும். பழைய நினைவுகளை அசைபோடுவது அலாதியான இன்பத்தை தரக்கூடியதுதானே...!!!

இப்படிப்பட்ட பைக்குகளை எல்லாம் இந்திய ராணுவம் பயன்படுத்தியதா? மறக்கப்பட்ட வரலாறு...!!!

ஹீரோ ஹோண்டா வெற்றி கூட்டணி

இந்தியாவின் ஹீரோ, ஜப்பானின் ஹோண்டா ஆகிய இரு நிறுவனங்களும் ஒன்றாக இணைந்து பைக்குகளை தயாரித்து, வெற்றிகரமாக விற்பனை செய்து வந்தன. ஆனால் நாளடைவில் ஏற்பட்ட மன கசப்பால் இரு நிறுவனங்களும், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தனித்தனியாக பிரிந்து விட்டன.

இப்படிப்பட்ட பைக்குகளை எல்லாம் இந்திய ராணுவம் பயன்படுத்தியதா? மறக்கப்பட்ட வரலாறு...!!!

இன்று ஹீரோதான், இந்தியாவின் நம்பர்-1 பைக் விற்பனை நிறுவனமாக உள்ளது. அதன் முன்னாள் நண்பனும், இன்னாள் எதிரியுமான ஹோண்டா 2வது இடத்தில் உள்ளது. ஹீரோவை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடிக்க ஹோண்டா தீவிரமாக முயன்று வருகிறது.

இப்படிப்பட்ட பைக்குகளை எல்லாம் இந்திய ராணுவம் பயன்படுத்தியதா? மறக்கப்பட்ட வரலாறு...!!!

ஹீரோ மற்றும் ஹோண்டா நிறுவனங்கள் இன்று மல்லுக்கட்டி கொண்டாலும், சில மறக்க முடியாத பைக்குகளை அவை நமக்கு வழங்கியுள்ளன. ஆனால் அவர்களின் கூட்டணியில் இருந்து வெளிவந்த சில பைக்குகளின் நினைவுகள், நமது மனதில் இருந்து அழிக்கப்பட்டு விட்டன. அப்படி மறக்கப்பட்ட பைக்குகளை மீண்டும் நினைவு கூர்வோம்.

இப்படிப்பட்ட பைக்குகளை எல்லாம் இந்திய ராணுவம் பயன்படுத்தியதா? மறக்கப்பட்ட வரலாறு...!!!

CD 100

ஹீரோ ஹோண்டா நிறுவனத்தின் முதல் வெற்றிகரமான பைக் CD 100. 1985ம் ஆண்டு லான்ச் செய்யப்பட்ட CD 100, மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆனது. CD 100 பைக்கில், 97 சிசி, 4 ஸ்ட்ரோக் இன்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இது 7.5 பிஎச்பி பவரையும், 7.16 என்எம் திறனையும் வெளிப்படுத்தும். இந்த பைக் ஒரு லிட்டருக்கு 80 கிலோ மீட்டர் மைலேஜ் தரக்கூடியது.

இப்படிப்பட்ட பைக்குகளை எல்லாம் இந்திய ராணுவம் பயன்படுத்தியதா? மறக்கப்பட்ட வரலாறு...!!!

மிக கரடு முரடான நிலப்பரப்பையும், உயரமான சிகரங்களையும் உள்ளடக்கிய இமயமலை சாரலில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட இந்திய ராணுவம் கூட CD 100 பைக்கை பயன்படுத்தியது. மிக உயரமான சிகரத்தில் ஏற 350 சிசி புல்லட்தான் வேண்டுமா என்ன? 97 சிசி இன்ஜினை கொண்ட CD 100 பைக்கே அந்த இலக்கை வெற்றிகரமாக அடைந்து விடும்.

இப்படிப்பட்ட பைக்குகளை எல்லாம் இந்திய ராணுவம் பயன்படுத்தியதா? மறக்கப்பட்ட வரலாறு...!!!

ஸ்லீக்

1989ம் ஆண்டில் ஸ்லீக் லான்ச் செய்யப்பட்டது. இளைஞர்களை குறி வைத்து, அன்றைய கால கட்ட ஸ்போர்ட்ஸ் லுக்கில் ஸ்லீக் அறிமுகப்படுத்தப்பட்டது. ஸ்லீக் பைக்கில், 97.2 சிசி, சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். 4 ஸ்பீடு கியர் கொண்ட ஸ்லீக் பைக்கின் இன்ஜின், அதிகபட்சமாக 6.8 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும்.

இப்படிப்பட்ட பைக்குகளை எல்லாம் இந்திய ராணுவம் பயன்படுத்தியதா? மறக்கப்பட்ட வரலாறு...!!!

ஸ்ட்ரீட்

ஹீரோ ஹோண்டா தயாரித்த முதல் யுடிலிட்டி பைக் ஸ்ட்ரீட். இந்த பைக் கிட்டத்தட்ட ஒரு ஸ்கூட்டர் போல் வடிவமைக்கப்பட்டிருக்கும். இதன்மூலம் கொஞ்சம் பொருட்களையும் வைத்து எடுத்து செல்லலாம்.

இப்படிப்பட்ட பைக்குகளை எல்லாம் இந்திய ராணுவம் பயன்படுத்தியதா? மறக்கப்பட்ட வரலாறு...!!!

பஜாஜ் எம்80 பைக் உங்களுக்கு நினைவிருக்கிறதா? அந்த பைக்குடன் போட்டி போடுவதற்காக, கடந்த 1997ம் ஆண்டில் ஸ்ட்ரீட் லான்ச் செய்யப்பட்டது. ஸ்ட்ரீட் பைக்கில், 97.2 சிசி, ஏர் கூல்டு, 4 ஸ்ட்ரோக் இன்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இது அதிகபட்சமாக 6.5 பிஎச்பி பவரை உருவாக்கும்.

இப்படிப்பட்ட பைக்குகளை எல்லாம் இந்திய ராணுவம் பயன்படுத்தியதா? மறக்கப்பட்ட வரலாறு...!!!

CBZ

1999ம் ஆண்டில் CBZ லான்ச் செய்யப்பட்டது. அதாவது பஜாஜ் பல்சர் வருவதற்கு முன்னதாகவே, CBZ விற்பனைக்கு வந்து விட்டது. இன்று வரை விற்பனையில் சக்கை போடு போட்டு கொண்டிருக்கும் பஜாஜ் பல்சர் 2001ம் ஆண்டில்தான் அறிமுகம் செய்யப்பட்டது.

இப்படிப்பட்ட பைக்குகளை எல்லாம் இந்திய ராணுவம் பயன்படுத்தியதா? மறக்கப்பட்ட வரலாறு...!!!

CBZ பைக்கில், 156.8 சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். 5 கியர்களுடன் வந்த இந்தியாவின் முதல் பைக் என்ற பெருமை CBZ பைக்கையே சாரும். பின்னாளில் CBZ பைக்குக்கு பல்வேறு வேரியண்ட்களை ஹீரோ நிறுவனம் லான்ச் செய்தது.

இப்படிப்பட்ட பைக்குகளை எல்லாம் இந்திய ராணுவம் பயன்படுத்தியதா? மறக்கப்பட்ட வரலாறு...!!!

ஜாய்

2001ம் ஆண்டில் ஜாய் லான்ச் செய்யப்பட்டது. பேஸிக் மாடல் பைக்கான ஜாய், ரவுண்டு ஹெட் லேம்ப்புடன் வெளிவந்தது. இதில் பொருத்தப்பட்டிருக்கும் 97.2 சிசி, ஏர் கூல்டு இன்ஜின் அதிகபட்சமாக 7.8 பிஎச்பி பவரையும், 8 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். அன்றைய கால கட்டத்தில் மிகவும் சிக்கனமான பைக்குகளில் ஒன்றாக ஜாய் கருதப்பட்டது.

இப்படிப்பட்ட பைக்குகளை எல்லாம் இந்திய ராணுவம் பயன்படுத்தியதா? மறக்கப்பட்ட வரலாறு...!!!

ஆம்பிஷன் 135

CBZ பைக்கின் வெற்றிக்கு பிறகு, கடந்த 2002ம் ஆண்டில் ஆம்பிஷன் 135 பைக் லான்ச் செய்யப்பட்டது. மிக குறைந்த விலையில், தரமான செயல்திறனை எதிர்பார்த்த கல்லூரி மாணவர்களை குறிவைத்து, ஆம்பிஷன் 135 களமிறக்கப்பட்டது.

இப்படிப்பட்ட பைக்குகளை எல்லாம் இந்திய ராணுவம் பயன்படுத்தியதா? மறக்கப்பட்ட வரலாறு...!!!

ஆம்பிஷன் 135 பைக்கில், 133 சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இது 11 பிஎச்பி பவரையும், 10.5 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும். இந்த பைக்கும் கூட 5 ஸ்பீடு கியருடன்தான் வந்தது.

இப்படிப்பட்ட பைக்குகளை எல்லாம் இந்திய ராணுவம் பயன்படுத்தியதா? மறக்கப்பட்ட வரலாறு...!!!

CD-டான்

ஆரம்ப நிலை வாடிக்கையாளர்களை குறிவைத்து, கடந்த 2003ம் ஆண்டில் CD-டான் அறிமுகம் செய்யப்பட்டது. இது CD 100 எஸ்எஸ் பைக்கை சார்ந்து இருப்பது போல் தெரிந்தாலும், வித்தியாசமான டிசைனில்தான் வடிவமைக்கப்பட்டது. CD-டான் பைக்கில், 97.2 சிசி, ஏர் கூல்டு ஓஹெச்ஸி இன்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இது 7.5 பிஎச்பி பவரையும், 8.04 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
forgotten motorcycles from Hero Honda, now known as Hero MotoCorp. read in tamil.
Story first published: Wednesday, May 23, 2018, 15:57 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X