புதிதாக பைக் ஓட்டி பழகுபவர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு! ரூ.1,500க்கு கியர் இன்டிகேட்டர்!

பைக் எந்த கியரில் செல்கிறது என்பதை கணிக்க முடியாமல், பலர் சிரமப்படுகின்றனர். அவர்களுக்கு வசதியாக, எந்த ஒரு பைக்கிலும் பொருத்த கூடிய வகையிலான கியர் இன்டிகேட்டர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

By Arun

கியர் இன்டிகேட்டர் வசதி வழங்கப்படாததால், பைக் எந்த கியரில் செல்கிறது என்பதை கணிக்க முடியாமல், பலர் சிரமப்படுகின்றனர். அவர்களுக்கு வசதியாக, எந்த ஒரு பைக்கிலும் பொருத்த கூடிய வகையிலான கியர் இன்டிகேட்டரை, இளைஞர் ஒருவர் கண்டறிந்துள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

பைக் எந்த கியரில் செல்கிறது என்பதை கணிக்க முடியாமல் சிரமப்படுபவர்களுக்கு வந்தாச்சு தீர்வு!

பைக் எந்த கியரில் சென்று கொண்டிருக்கிறது? என்பதை காட்டுவதுதான் கியர் இன்டிகேட்டர். ஆனால் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பெரும்பாலான பைக்குகளில், கியர் இன்டிகேட்டர் வசதி இருப்பது இல்லை.

பைக் எந்த கியரில் செல்கிறது என்பதை கணிக்க முடியாமல் சிரமப்படுபவர்களுக்கு வந்தாச்சு தீர்வு!

கியர் இன்டிகேட்டர் வசதியை வழங்கினால், பைக்கின் விலையை அதிகரிக்க வேண்டியதிருக்கும். ஆனால் இந்தியா போன்ற நாடுகளில் வசிக்கும் மக்கள், குறைந்த விலை பைக்கைதான் எதிர்பார்ப்பார்கள். எனவே பெரும்பாலான பைக் உற்பத்தி நிறுவனங்கள், கியர் இன்டிகேட்டர் வசதியை வழங்குவது இல்லை.

பைக் எந்த கியரில் செல்கிறது என்பதை கணிக்க முடியாமல் சிரமப்படுபவர்களுக்கு வந்தாச்சு தீர்வு!

கியர் இன்டிகேட்டர் இல்லாமல்தான் பெரும்பாலானோர் பைக்கை ஓட்டி வருகின்றனர். நல்ல அனுபவம் உடையவர்கள், கியர் இன்டிகேட்டர் இல்லாமலேயே பைக்கை எளிதாக ஓட்டிவிடுவார்கள். பைக் எந்த கியரில் சென்று கொண்டிருக்கிறது? என்பதை அவர்களால் எளிதாக கணிக்க முடிவதுதான் இதற்கு காரணம்.

பைக் எந்த கியரில் செல்கிறது என்பதை கணிக்க முடியாமல் சிரமப்படுபவர்களுக்கு வந்தாச்சு தீர்வு!

ஆனால் புதிதாக பைக் ஓட்டி பழகியவர்கள், பழகி கொண்டிருப்பவர்கள் கியர் இன்டிகேட்டர் இல்லாமல் தடுமாறுவார்கள். எந்த கியரில் பைக் பயணிக்கிறது? என்பதை அவர்களால் எளிதாக கணிக்க முடியாது. கடைசியாக எந்த கியரை போட்டோம்? என்பதையும் அவர்கள் அடிக்கடி மறந்து விடுவார்கள்.

பைக் எந்த கியரில் செல்கிறது என்பதை கணிக்க முடியாமல் சிரமப்படுபவர்களுக்கு வந்தாச்சு தீர்வு!

இதனால் அவர்கள் அடிக்கடி கியரை தவறாக போடுவார்கள். சில சமயங்களில் கியரை அதிகரிப்பதும், பின்னர் குறைப்பதும் என மாற்றி மாற்றி போட்டு கியர் பாக்ஸையே வீணடித்து விடுவார்கள். பைக் எந்த கியரில் செல்கிறது? என்பதை கணிக்க முடியாததுதான் இதற்கு காரணம்.

பைக் எந்த கியரில் செல்கிறது என்பதை கணிக்க முடியாமல் சிரமப்படுபவர்களுக்கு வந்தாச்சு தீர்வு!

தவறான கியரை போட்டு, ஆக்ஸலரேட்டரை கொடுத்தால் பைக் உடனடியாக ஆப் ஆகிவிடும். நெரிசல் மிகுந்த சாலைகளில், சிக்னலில் நின்று கொண்டிருக்கும் ஒருவர், சிக்னல் ரிலீஸ் ஆனதும், டாப் கியரில் பைக்கை 'மூவ்' செய்தால் என்ன ஆகும்? என்பதை யோசித்து பாருங்கள்.

பைக் எந்த கியரில் செல்கிறது என்பதை கணிக்க முடியாமல் சிரமப்படுபவர்களுக்கு வந்தாச்சு தீர்வு!

பைக் உடனடியாக ஆப் ஆகி அப்படியே நின்று விடும். இதனால் பிரச்னை அவருக்கு மட்டுமல்ல. பின்னால் வந்து கொண்டிருப்பவர்களுக்கும்தான். அவசர அவசரமாக பின்னால் வந்து கொண்டிருப்பவர்களின் ஏச்சு பேச்சிற்கும் சம்பந்தப்பட்ட அந்த நபர் ஆளாக வேண்டியதிருக்கும்.

பைக் எந்த கியரில் செல்கிறது என்பதை கணிக்க முடியாமல் சிரமப்படுபவர்களுக்கு வந்தாச்சு தீர்வு!

குறிப்பாக புதிதாக பைக் ஓட்டி பழகுபவர்களால், வளைவுகளில் பைக்கை அவ்வளவு எளிதில் திருப்பி விட முடியாது. பைக்கை அடிக்கடி ஆப் செய்வார்கள். வளைவில் திரும்புவதற்கு முன்பாக பைக் எந்த கியரில் இருக்கிறது? எத்தனை கியர்களை குறைக்க வேண்டும்? என்பது தெரியாததுதான் இதற்கு காரணம்.

பைக் எந்த கியரில் செல்கிறது என்பதை கணிக்க முடியாமல் சிரமப்படுபவர்களுக்கு வந்தாச்சு தீர்வு!

ஆனால் கியர் இன்டிகேட்டர் இருந்தால், பைக் எந்த கியரில் சென்று கொண்டிருக்கிறது? என்பதை பார்க்க முடியும். ஒரு வளைவில் திரும்ப வேண்டியிருந்தால், கியர் இன்டிகேட்டரை பார்த்து விட்டு, எத்தனை கியர்களை குறைக்க வேண்டும்? என்பதை முடிவு செய்து கொள்ளலாம்.

பைக் எந்த கியரில் செல்கிறது என்பதை கணிக்க முடியாமல் சிரமப்படுபவர்களுக்கு வந்தாச்சு தீர்வு!

வளைவுகளில் மட்டும் அல்ல. எந்த ஒரு இடமாக இருந்தாலும், கியர் இன்டிகேட்டரை ஒரு கணம் பார்த்து விட்டு, அதற்கு ஏற்ப சரியான கியரை போட்டு, பைக்கை செலுத்தலாம். வழக்கமான கணிப்பு முறையை காட்டிலும் இது நிச்சயமாக 'பெட்டர்' ஆகதான் இருக்கும்.

பைக் எந்த கியரில் செல்கிறது என்பதை கணிக்க முடியாமல் சிரமப்படுபவர்களுக்கு வந்தாச்சு தீர்வு!

குறிப்பாக புதிதாக பைக் ஓட்டி பழகியிருக்கும் போதிய அனுபவமற்ற ரைடர்களுக்கு கியர் இன்டிகேட்டர் வசதி நிச்சயமாக நல்ல பலனை தரும். ஆனால் இந்தியாவில் விற்பனையாகும் பெரும்பாலான பைக்குகளில்தான் கியர் இன்டிகேட்டர் வசதியே இல்லையே என கவலை கொள்ள வேண்டாம்.

பைக் எந்த கியரில் செல்கிறது என்பதை கணிக்க முடியாமல் சிரமப்படுபவர்களுக்கு வந்தாச்சு தீர்வு!

இந்தியாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் இந்த பிரச்னைக்கு தீர்வு சொல்லியுள்ளார். எந்த ஒரு பைக்கிலும் பொருத்த கூடிய வகையிலான கியர் இன்டிகேட்டரை அவர் கண்டுபிடித்து, வீடியோவாக வெளியிட்டுள்ளார். பஜாஜ் பல்சர் என்எஸ் 200 பைக்கில் கியர் இன்டிகேட்டர் பொருத்தப்படும் வீடியோவை கீழே காணலாம்.

கியர் இன்டிகேட்டர் கிட்டில் அடங்கியிருக்கும் ஒவ்வொரு முக்கியமான பார்ட்ஸ் குறித்தும் அந்த இளைஞர் வீடியோவில் விவரித்துள்ளார். கியர் இன்டிகேட்டரை எப்படி இன்ஸ்டால் செய்வது? என்பது குறித்த முழுமையான தகவல்களையும் அவர் கூறியுள்ளார்.

பைக் எந்த கியரில் செல்கிறது என்பதை கணிக்க முடியாமல் சிரமப்படுபவர்களுக்கு வந்தாச்சு தீர்வு!

ஆனால் கியர் இன்டிகேட்டரை சுயமாக இன்ஸ்டால் செய்வது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. உங்களுக்கு நன்கு தெரிந்த மெக்கானிக்கிடம் செல்வதுதான் சிறந்தது. அவர்களால் ஒரு சில மணி நேரங்களில் கியர் இன்டிகேட்டரை பொருத்தி விட முடியும்.

பைக் எந்த கியரில் செல்கிறது என்பதை கணிக்க முடியாமல் சிரமப்படுபவர்களுக்கு வந்தாச்சு தீர்வு!

இதற்கு சுமார் 1,500 ரூபாய் வரைதான் செலவாகும். கியர் இன்டிகேட்டர் வசதி எந்தவொரு பைக்கிற்கும் நிச்சயமாக அவசியமான ஒன்றுதான்.

Source: Jhampa66

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Young indian offers a gear Indicator that can be installed on any motorcycle. Read in tamil.
Story first published: Wednesday, June 20, 2018, 13:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X