60 ஜிக்ஸர் எஸ்எப் பைக்குகளை போலீசாருக்கு பரிசாக வழங்கி இன்ப அதிர்ச்சியளித்த சுசுகி!
சுசூகி நிறுவனம், 60 ஜிக்ஸர் எஸ்எப் பைக்குகளை போலீசாருக்கு பரிசாக வழங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த விரிவான தகவல்களை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.
சுசுகி நிறுவனம், 60 ஜிக்ஸர் எஸ்எப் பைக்குகளை போலீசாருக்கு பரிசாக வழங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த விரிவான தகவல்களை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

ஹரியானா மாநிலம் குர்கான் போலீசாருக்கு, 60 சுசுகி ஜிக்ஸர் எஸ்எப் பைக்குகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த பைக்குகளை ரோந்து பணிக்கு பயன்படுத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். இந்தியாவில் இப்படி ஒரு ஸ்போர்ட்ஸ் பைக்கில் ரோந்து செல்லும் பாக்கியம், குர்கான் போலீசாருக்கு கிடைத்துள்ளது.

போலீசாருக்கு வழங்கப்பட்டுள்ள சுசுகி ஜிக்ஸர் எஸ்எப் பைக்குகளில் சைடு பாக்ஸ்கள் பொருத்தப்பட்டுள்ளன. லவுட் ஸ்பீக்கர்களும் அந்த பைக்கில் இடம் பெற்றுள்ளது. இந்த பைக்குகள் அனைத்தும் வெள்ளை நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளன.

ஜப்பானை சேர்ந்த சுசுகி நிறுவனத்தின் முதன்மையான பைக்குகளில் ஒன்றாக ஜிக்ஸர் எஸ்எப் திகழ்கிறது. இந்த பைக்கில், 155 சிசி, 4 ஸ்ட்ரோக், சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 14.6 பிஎச்பி பவரையும், 14 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

இந்த ஏர் கூல்டு இன்ஜின், கார்புரேட்டட் வெர்ஷன், ப்யூயல் இன்ஜக்டட் வெர்ஷன் என 2 ப்யூயலிங் ஆப்ஷன்களுடனும் கிடைக்கிறது. இந்த பைக்கின் அனைத்து வேரியண்ட்களிலும் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஸ்டாண்டர்டாக பொருத்தப்பட்டுள்ளது.

கார்புரேட்டர்-டிவின் டிஸ்க் பிரேக் உடனான சுசூகி ஜிக்ஸர் எஸ்எப் பைக்கின் பேஸ் வெர்ஷன் தற்போது 99,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே சமயத்தில் ஏபிஎஸ் வெர்ஷன் 1.11 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இவை அனைத்தும் டெல்லி ஆன்ரோடு விலையாகும்.

சுசுகி நிறுவனத்தின் ஜிக்ஸர் மற்றும் ஜிக்ஸர் எஸ்எப் பைக்குகள் இரண்டுமே இந்தியாவில் மிகவும் பிரபலமாக உள்ளன. இந்த 2 பைக்குகளும் உயர்ந்த தரத்துடன், நம்பகத்தன்மை வாய்ந்தவையாகவும் உள்ளன. இதனால் குர்கான் போலீசாருக்கும் இந்த பைக்குகள் சிறந்த சேவையாற்றும் என நம்பலாம்.

ஆனால் இந்த பைக்குகள் அனைத்தும் குர்கான் போலீசாரால் வாங்கப்பட்டவையா? அல்லது சுசுகி நிறுவனத்தால் குர்கான் போலீசாருக்கு பரிசாக வழங்கப்பட்டவையா? என்பது குறித்த உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை.

ஏனெனில் பெரிய பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள், தங்கள் லாபத்தில் இருந்து குறிப்பிட்ட சதவீதத்தை, சமுதாயத்தின் வளர்ச்சிக்கு செலவிட வேண்டும் என்ற விதி உள்ளது. இந்த முயற்சியை கார்ப்பரேட்களின் சமுதாய பொறுப்பு (Corporate Social Responsibility) என அழைக்கின்றனர்.

சுருக்கமாக சிஎஸ்ஆர் எனப்படும் இந்த சட்டத்தின் கீழ்தான், குர்கான் போலீசாருக்கு சுசூகி ஜிக்ஸர் எஸ்எப் பைக்குகள் பரிசாக வழங்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

ஏனெனில் இந்தியாவின் பல்வேறு மாநில போலீசாருக்கு, ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மூலம் தொடர்ச்சியாக வாகனங்கள் பரிசாக கிடைத்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்


Click it and Unblock the Notifications








