ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 பைக்கிற்கு வட்டியில்லா கடன் வசதி!!
ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 பைக்கிற்கு வட்டியில்லா கடன் வசதி திட்டம் வழங்கப்படுகிறது. ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 பைக்கிற்கான புதிய கடன் திட்டத்தின்படி, 36 மாதத் தவணையில் வட்டியில்லா கடன் வழங்கப்ப
ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 பைக்கிற்கு வட்டியில்லா கடன் வசதி திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த கடன் திட்டம் குறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

ஹார்லி டேவிட்சன் கனவுடன் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு மிக குறைவான விலை ஆப்ஷனா ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 மற்றும் ஸ்ட்ரீட் ராடு ஆகிய இரண்டு மாடல்களும் இருக்கின்றன. இந்த நிலையில், வரி அதிகரிக்கப்பட்டதால், இந்த இரண்டு மாடல்களின் விலையும் அதிகரித்துவிட்டது.

இதனால், இந்த இரண்டு மாடல்களின் விற்பனையும் 40 சதவீதம் அளவுக்கு சரிந்துவிட்டதாக தெரிகிறது. இதையடுத்து, வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில், வட்டியில்லா கடன் வசதியை வழங்க ஹார்லி டேவிட்சன் முடிவு செய்துள்ளது.

ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 பைக்கிற்கான புதிய கடன் திட்டத்தின்படி, 36 மாதத் தவணையில் வட்டியில்லா கடன் வழங்கப்படுகிறது. உதாரணத்திற்கு ரூ.2.03 லட்சம் டவுண் பேமண்ட்டும், 36 மாதங்களுக்கு ரூ.11,000 மாதத் தவணை செலுத்தும் விதத்தில் கடன் திட்டம் வழங்கப்படுகிறது.

ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் ராடு மாடலுக்கு ரூ.3.39 லட்சம் டவுண்ட் பேமண்ட்டும், ரூ.11,000 மாதத் தவணையிலும் வட்டியில்லாமல் கிடைக்கிறது. அடுத்த மாதம் ஹார்லி டேவிட்சன் பைக்குகள் விலை ஏற்றம் செய்யப்பட இருக்கும் நிலையில், அடுத்த மூன்று நாட்களுக்குள் முன்பதிவு செய்வோர் இந்த சிறப்பு கடன் திட்டத்தை தேர்வு செய்து கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது.

பழைய ஹார்லி டேவிட்சன் மோட்டார்சைக்கிளை மாற்றி புதிய ஹார்லி டேவிட்சன் மோட்டார்சைக்கிளை வாங்குவோருக்கும் ஏராளமான இலவசங்களை வழங்குவதாகவும் ஹார்லி டேவிட்சன் தெரிவித்துள்ளது.

ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 மற்றும் ஸ்ட்ரீட் ராடு மோட்டார்சைக்கிள்களுக்கான வட்டியில்லா கடன் திட்டம் மிகவும் சிறப்பான வாய்ப்பாக கூற முடியும். ஸ்ட்ரீட் 750 பைக்கில் கூடுதல் ஆக்சஸெரீகள் சேர்க்கப்பட்ட கஃபே ரேஸர் போன்ற டிசைன் கொண்ட விலை உயர்ந்த மாடலாக ஸ்ட்ரீட் ராடு விற்கப்படுகிறது.

ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 மற்றும் ஸ்ட்ரீட் ராடு ஆகிய மோட்டார்சைக்கிள்களில் 749சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 62 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்த வல்லது.

ஹார்லி டேவிட்சன் அயன் 883 மோட்டார்சைக்கிளை வாங்கும் வாடிக்கையாளர்கள் ஆக்சஸெரீகளுக்கு ரூ.50,000 வரை கடன் பெறும் வாய்ப்பும் டீலர்களில் வழங்கப்படுகிறது. அத்துடன், இலவச இன்ஸ்யூரன்ஸும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.


Click it and Unblock the Notifications








