ஹார்லி டேவிட்சன் பைக்குகளுக்கு ரூ.1.5 லட்சம் வரை தள்ளுபடி! கனவை நிறைவேற்ற இதுவே சரியான நேரம்!
ஹார்லி டேவிட்சன் பைக்குகளுக்கு, ரூ.1.5 லட்சம் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஹார்லி டேவிட்சன் பைக் வாங்க வேண்டும் என்ற கனவை நிறைவேற்ற இதுவே சரியான நேரமாக இருக்கும்.
ஹார்லி டேவிட்சன் பைக்குகளுக்கு, ரூ.1.5 லட்சம் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஹார்லி டேவிட்சன் பைக் வாங்க வேண்டும் என்ற கனவை நிறைவேற்ற இதுவே சரியான நேரமாக இருக்கும். இதுகுறித்த கூடுதல் தகவல்களை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

ஹார்லி டேவிட்சன் பைக்குகளுக்கு என்றே இந்தியாவில் தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. வாழ்நாளில் ஒரு ஹார்லி டேவிட்சன் பைக்கையாவது வாங்கி விட வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருக்கும். ஆனால் ஹார்லி டேவிட்சன் பைக்குகளை வாங்குவது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல.

சாதாரணமாகவே ஹார்லி டேவிட்சன் பைக்குகள் விலை உயர்ந்தவை. இதுதவிர அவை அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதால், தனியாக வரி விதிப்புகளுக்கும் உட்படுத்தப்படுகிறது. எனவே அதன் விலை இன்னும் அதிகரித்து விடுகிறது.

ஆனால் ஹார்லி டேவிட்சன் பைக்குகளை வாங்க தற்போது காலம் கனிந்திருக்கிறது. ஆம், ஹார்லி டேவிட்சன் நிறுவனம் தனது 3 மாடல்களுக்கு, 1.5 லட்ச ரூபாய் வரை தள்ளுபடி அறிவித்திருக்கிறது. இதனால் ஹார்லி டேவிட்சன் பைக் ஆர்வலர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

ஸ்ட்ரீட் 750
இந்தியாவில் விற்பனையாகும் குறைந்த விலை கொண்ட ஹார்லி டேவிட்சன் பைக்குகளில் ஒன்று ஸ்ட்ரீட் 750. ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 பைக், இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகிறது என்பது இதன் மற்றொரு சிறப்பம்சம் ஆகும்.

தற்போது ஸ்ட்ரீட் 750 பைக்கிற்கு ஹார்லி டேவிட்சன் நிறுவனம், ஆண்டுக்கு வெறும் 3.49 சதவீதம் என்ற குறைந்த வட்டி விகிதத்தை வழங்குகிறது. எனவே ஹார்லி டேவிட்சன் மூலமாக பைக்கிற்கு பைனான்ஸ் போடும்போது, நிறைய பணத்தை சேமிக்க முடியும்.

ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 பைக்கில், 749 சிசி, டிவின் சிலிண்டர், லிக்யூட் கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 59 என்எம் டார்க் திறனை உருவாக்கும். இந்த பைக்கின் எக்ஸ் ஷோரூம் விலை 5.25 லட்சம்.

ஸ்ட்ரீட் ராட்
ஸ்ட்ரீட் ராட் பைக்கிற்கு ஹார்லி டேவிட்சன் நிறுவனம் 48,615 ரூபாய் தள்ளுபடி வழங்குகிறது. ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் ராட் பைக்கிலும், 749 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 4,000 ஆர்பிஎம்மில் 62 என்எம் டார்க் திறனை உருவாக்கும்.

ரோட்ஸ்டர்
இருப்பதிலேயே அதிகபட்ச தள்ளுபடியான 1.5 லட்ச ரூபாய் என்பது, ஹார்லி டேவிட்சன் ரோட்ஸ்டர் பைக்கிற்கு பொருந்தும். இந்த பைக் தற்போது 1.5 லட்ச ரூபாய் தள்ளுபடியுடன் கிடைக்கிறது.

ஹார்லி டேவிட்சன் ரோட்ஸ்டர் பைக்கில், 1200 சிசி, வி-டிவின், ஏர் கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 96 என்எம் டார்க் திறனை உருவாக்கும்.

இந்த பைக், நவீன 4 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டரை பெற்றுள்ளது. வேகம், ஆர்பிஎம் உள்ளிட்ட அம்சங்களை இது டிஸ்ப்ளே செய்யும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்


Click it and Unblock the Notifications








