ஹெல்மெட் தடை உத்தரவை வாபஸ் வாங்கியது பெங்களூர் போலீஸ்!

Written By:
Recommended Video - Watch Now!
Ducati 959 Panigale Crashes Into Buffalo - DriveSpark

போலி ஹெல்மெட்டுகளை ஒழிக்கும் முயற்சியில் பெங்களூர் போக்குவரத்து போலீசார் கடந்த சில வாரங்களாக தீவிரம் காட்டி வந்தனர். ஐஎஸ்ஐ முத்திரை இல்லாத ஹெல்மெட்டுகளை பறிமுதல் செய்ததுடன், வாகன ஓட்டிகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.

ஹெல்மெட் தடை உத்தரவை வாபஸ் வாங்கியது பெங்களூர் போலீஸ்!

இந்த நிலையில், வரும் 1ந் தேதி முதல் ஐஎஸ்ஐ முத்திரை தவிர்த்து பிற அனைத்து ஹெல்மெட்டுகளுக்கும் தடை விதிப்பதாக அறிவித்தது. DOT, ECE மற்றும் SNELL தரச் சான்று பெற்ற உயர்தர ஹெல்மெட்டுகளை பயன்படுத்துவதில் சிக்கல் எழுந்தது. இறக்குமதி செய்யப்பட்ட உயர் வகை ஹெல்மெட்டுகளை வைத்திருந்த வாகன ஓட்டிகளிடையே குழப்பமும், அதிர்ச்சியும் ஏற்பட்டது.

உரிய விளக்கம் அளிக்குமாறு சமூக வலைதளங்களிலும் பெங்களூர் போலீசாருக்கு கோரிக்கைகள் விடுக்கப்பட்டன. இதனால், தடையை அமல்படுத்துவதில் பெங்களூர் போலீசாருக்கே குழப்பம் உண்டானது. இதுதொடர்பாக, போக்குவரத்துத் துறை மற்றும் பிஐஎஸ் அலுவலகத்திடம் விளக்கம் கேட்டிருந்தது. இந்த நிலையில், பிஐஎஸ் நிறுவனம் இதற்கு பதில் அளித்துள்ளது.

ஹெல்மெட் தடை உத்தரவை வாபஸ் வாங்கியது பெங்களூர் போலீஸ்!

அதன்படி, எந்தவொரு ஹெல்மெட்டையும் கண்ணால் பார்த்து தரத்தை உறுதி செய்ய முடியாது என்று பிஐஎஸ் அமைப்பு தெரிவித்தது. மேலும், முறையான பரிசோதனைகள் மூலமாகவே ஹெல்மெட்டுகளின் தரத்தை உறுதி செய்ய முடியும் என்றும் தெரிவித்தது.

இதையடுத்து, வரும் 1ந் தேதி முதல் ஐஎஸ்ஐ அல்லாத பிற அனைத்து ஹெல்மெட்டுகளுக்கும் விதிக்கப்பட்ட தடையை பெங்களூர் போக்குவரத்து போலீசார் வாபஸ் வாங்கி இருக்கின்றனர்.

ஹெல்மெட் தடை உத்தரவை வாபஸ் வாங்கியது பெங்களூர் போலீஸ்!

இதுதொடர்பாக அளித்துள்ள விளக்கத்தில், ஹெல்மெட்டுகளின் தரத்தை களப்பணியில் உள்ள போலீசார் உறுதி செய்வது இயலாத நிலை இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. போலி ஹெல்மெட்டுகள் குறித்து சந்தேகம் எழுந்தால், பிஐஎஸ் நிறுவனத்திற்கு அனுப்பி சோதனை செய்தபிறகே உறுதி செய்து அபராதம் விதிக்க முடியும்.

ஹெல்மெட் தடை உத்தரவை வாபஸ் வாங்கியது பெங்களூர் போலீஸ்!

எனவே, இந்த தடை உத்தரவை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளது. மேலும், தரமான ஹெல்மெட்டுகளை பயன்படுத்துமாறும் வாகன ஓட்டிகளை பெங்களூர் போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

ஹெல்மெட் தடை உத்தரவை வாபஸ் வாங்கியது பெங்களூர் போலீஸ்!

இந்த அறிவிப்பால் ஹெல்மெட்டுகள் பயன்படுத்துவது குறித்து வாகன ஓட்டிகளிடையே இருந்து வந்த குழப்பம் நீங்கி இருக்கிறது.

Source: The Hindu

English summary
Helmet Ban Withdrawn By Bangalore Police

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark