TRENDING ON ONEINDIA
-
கூட்டணி உறுதியானதால் குஷி.. அமித்ஷா இன்று மாலை சென்னை வருகை
-
டூவீலர் உற்பத்தியாளர், டீலர், ஆர்டிஓக்கள் இணைந்து 13 ஆண்டுகளாக வாடிக்கையாளர்களிடம் மெகா மோசடி... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...
-
நடிகையாகும் பிரபல ஹீரோவின் மகள்: பொண்ணு ரொம்பத் தெளிவு
-
இந்த ரெண்டு ராசிக்காரங்களுக்கும் கெட்ட நேரம் ஆரம்பிச்சிடுச்சு... கொஞ்சம் கவனமா இருங்க
-
பாகிஸ்தான் இராணுவத்தை தலை பிச்சுக்க விட்ட இந்திய ஹேக்கர்கள்.!
-
தினேஷ் கார்த்திக் எதிர்காலம் முடிஞ்சு போச்சா? ரிஷப் பண்ட்டுக்கு மட்டும் தான் வாய்ப்பா?
-
இந்த ஊர்ல ஒருவரின் சராசரி வருமானமே 3.2 கோடி ரூபாய்.. எந்த ஊர் தெரியுமா..?
-
ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது
ஹீரோ பைக்குகளின் விலை மீண்டும் உயர்வு.. தொடர்ச்சியாக விலை உயர்த்தப்படுவதன் ரகசியம் இதுதான்
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் அனைத்து மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்களின் விலை மீண்டும் உயர்கிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் அனைத்து மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்களின் விலை, 900 ரூபாய் வரை உயர்த்தப்படுகிறது. இந்த விலை உயர்வு, வரும் அக்டோபர் 3 முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விலை உயர்வு குறித்து ஹீரோ மோட்டோகார்ப் நிறுவன வட்டாரங்களில் விசாரித்தபோது, ''உற்பத்தி செலவு அதிகரிப்பு மற்றும் இந்திய ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்களால்தான் அனைத்து மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்களின் விலையை உயர்த்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது'' என்றனர்.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் நடப்பாண்டில், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்களின் விலையை உயர்த்துவது இது முதல் முறை அல்ல. ஏனெனில் கடந்த மாதமும் கூட, ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 500 ரூபாய் வரை விலையை உயர்த்தியிருந்தது.
இதுதவிர புதிதாக லான்ச் செய்யப்பட்ட எக்ஸ்ட்ரீம் 200 ஆர் பைக்கின் விலையை, கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஹீரோ மோட்டோகார்ப் ரூ.1,900 வரை திடீரென உயர்த்தியது. இந்த எக்ஸ்ட்ரீம் 200 ஆர் பைக்கின் மூலம்தான், பிரீமியம் மோட்டார் சைக்கிள் மார்க்கெட்டில், ஹீரோ மீண்டும் நுழைந்தது குறிப்பிடத்தக்கது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் பிராண்ட் அம்பாஸிடராக, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி சமீபத்தில் நியமிக்கப்பட்டார். இந்த நேரத்தில், மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர்களின் விலையை ஹீரோ மோட்டோகார்ப் தொடர்ச்சியாக உயர்த்தி வருகிறது என்பது கவனிக்கத்தக்கது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தற்போது 3 ஆட்டோமெட்டிக் ஸ்கூட்டர்கள் உள்பட மொத்தம் சுமார் 20 டூவீலர் மாடல்களை விற்பனை செய்து வருகிறது. இவை 38 ஆயிரம் ரூபாய் முதல் 1.1 லட்ச ரூபாய் வரையிலான (எக்ஸ்ஷோரூம்) விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.
உலகின் மிகப்பெரிய டூவீலர் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக ஹீரோ மோட்டோகார்ப் திகழ்கிறது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் ஒட்டுமொத்தமாக 6,85,047 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்களை ஹீரோ மோட்டோகார்ப் விற்பனை செய்திருந்தது.
2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 1 சதவீத வளர்ச்சியாகும். ஏனெனில் 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒட்டுமொத்தமாக 6,78,797 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்களை மட்டுமே ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் விற்பனை செய்திருந்தது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் சமீபத்தில் புதிதாக அறிமுகம் செய்த எக்ஸ்ட்ரீம் 200 ஆர் மோட்டார் சைக்கிளின் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் இங்கே காணலாம்.