அக்.22ல் ரிலீசாகும் புதிய ஹீரோ டெஸ்ட்டினி 125 ஸ்கூட்டர்!

கடந்த பிப்ரவரியில் நடந்த டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் புதிய ஹீரோ டெஸ்ட்டினி 125 ஸ்கூட்டர் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது. இந்த ஸ்கூட்டர் வரும் 22ந் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

நாட்டின் மிகப்பெரிய இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் தனது சந்தையை வலுப்படுத்திக் கொள்ளும் விதமாக பல புதிய மாடல்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், தற்போது 125சிசி மார்க்கெட்டில் டெஸ்ட்டினி 125 என்ற புதிய ஸ்கூட்டர் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது.

அக்.22ல் ரிலீசாகும் புதிய ஹீரோ டெஸ்ட்டினி 125 ஸ்கூட்டர்!

கடந்த பிப்ரவரி மாதம் நடந்த டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த இந்த புதிய ஹீரோ டெஸ்ட்டினி 125 ஸ்கூட்டர் வரும் 22ந் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஹீரோ டூயட் 110 ஸ்கூட்டரின் 125சிசி வெர்ஷனாக இந்த ஸ்கூட்டர் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

அக்.22ல் ரிலீசாகும் புதிய ஹீரோ டெஸ்ட்டினி 125 ஸ்கூட்டர்!

எனினும், டூயட்டிலிருந்து டெஸ்ட்டினியை வேறுபடுத்த விதமாக சிறிய வடிவமைப்பு மாற்றங்களை செய்துள்ளது ஹீரோ நிறுவனம். புதிய முன்புற அப்ரான் பகுதி, க்ரோம் பாகங்கள் மற்றும் பாடி பேனல்கள் கூர்மையான தோற்றத்தை தரும் விதத்தில், வடிவமைப்பு மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன.

அக்.22ல் ரிலீசாகும் புதிய ஹீரோ டெஸ்ட்டினி 125 ஸ்கூட்டர்!

புதிய ஹீரோ டெஸ்ட்டினி 125 ஸ்கூட்டரில் இருக்கும் 125சிசி எஞ்சின் அதிகபட்சமாக 8.7 பிஎச்பி பவரையும், 10.2 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. டூயட் ஸ்கூட்டரில் இருக்கும் அதே 110சிசி எஞ்சின்தான் சிலிண்டர் போர் செய்யப்பட்டு 125சிசி மாடலாக மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டரில் ஐ3எஸ் எனப்படும் ஸ்டார்ட்- ஸ்டாப் சிஸ்டமும் உள்ளது. இது அதிக எரிபொருள் சிக்கனத்தை பெறுவதற்கு உதவும்.

அக்.22ல் ரிலீசாகும் புதிய ஹீரோ டெஸ்ட்டினி 125 ஸ்கூட்டர்!

புதிய ஹீரோ டெஸ்ட்டினி 125 ஸ்கூட்டரில் சைடு ஸ்டான்டு இண்டிகேட்டர், இன்டகிரேட்டட் பிரேக் சிஸ்டம், பாஸ் லைட் சுவிட்ச், வெளிப்புறத்தில் அமைந்த பெட்ரோல் டேங்க் மூடி, சர்வீஸ் ரிமைன்டர் வசதி, முன்சக்கரத்திற்கு டிஸ்க் பிரேக் ஆப்ஷன் ஆகிய அம்சங்களுடன் வருகிறது.

அக்.22ல் ரிலீசாகும் புதிய ஹீரோ டெஸ்ட்டினி 125 ஸ்கூட்டர்!

தற்போது 125சிசி ஸ்கூட்டர் மார்க்கெட்டில் இருக்கும் வர்த்தக வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும் விதத்தில் இந்த புத்தம் புதிய மாடலை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் வாடிக்கையாளர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அக்.22ல் ரிலீசாகும் புதிய ஹீரோ டெஸ்ட்டினி 125 ஸ்கூட்டர்!

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் உள்ள ஹீரோ நிறுவனத்தின் இருசக்கர வாகன வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தில்தான் இந்த புதிய ஹீரோ டெஸ்ட்டினி 125 ஸ்கூட்டர் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

அக்.22ல் ரிலீசாகும் புதிய ஹீரோ டெஸ்ட்டினி 125 ஸ்கூட்டர்!

பண்டிகை காலத்தில் 125சிசி ஸ்கூட்டர் வாங்க திட்டமிட்டிருப்போருக்கு புதிய ஹீரோ டெஸ்ட்டினி 125 ஸ்கூட்டரும் சிறந்த தேர்வுகளில் ஒன்றாக இருக்கும். சுஸுகியின் ஆக்செஸ் 125, பர்க்மேன் ஸ்ட்ரீட் 125, ஹோண்டா ஆக்டிவா 125, டிவிஎஸ் என்டார்க் 125 மற்றும் அப்ரிலியா எஸ்ஆர் 125 மாடல்களுடன் போட்டி போட வருகிறது.

Article Published On: Friday, October 19, 2018, 10:21 [IST]
English summary
Hero MotoCorp is all set to launch their latest 125cc scooter, the Destini 125 in India. The Hero Destini 125 will be launched in the country on the 22nd October 2018. The Destini 125 was first showcased at the 2018 Auto Expo, held earlier this year.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+