''முடுஞ்சு போச்சு கிளம்பு...கிளம்பு...'' ஹோண்டா ஆக்டிவாவுக்கு ஆப்பு வைக்க ஹீரோ ரெடி...!!!

ஹோண்டா நிறுவனத்தின் ஆக்டிவா ஸ்கூட்டர்தான் இந்தியாவில் அதிகம் விற்பனையாகி வருகிறது. அதற்கு போட்டியாக, 2 புதிய ஸ்கூட்டர்களை ஹீரோ நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது.

By Arun

ஹோண்டா நிறுவனத்தின் ஆக்டிவா ஸ்கூட்டர்தான் இந்தியாவில் அதிகம் விற்பனையாகி வருகிறது. அதற்கு போட்டியாக, 2 புதிய ஸ்கூட்டர்களை ஹீரோ நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது. ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரில் இல்லாத பல வசதிகள், ஹீரோ நிறுவனத்தின் 2 புதிய ஸ்கூட்டர்களில் இடம்பெற்றுள்ளன. இதனால் ஹோண்டா நிறுவனம் அச்சமடைந்துள்ளது. அதே நேரத்தில் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதுகுறித்து இனி விரிவாக பார்க்கலாம்.

 ''முடுஞ்சு போச்சு கிளம்பு...கிளம்பு...'' ஹோண்டா ஆக்டிவாவுக்கு ஆப்பு வைக்க ஹீரோ ரெடி...!!!

இந்தியாவின் ஹீரோ நிறுவனம், அதன் ஆட்டோமெட்டிக் ஸ்கூட்டர் லைன் அப்பை, 2 புதிய தயாரிப்புகளுடன் விரைவில் விரிவாக்கம் செய்யவுள்ளது. டூயட் 125, மேஸ்ட்ரோ 125 ஆகியவைதான் 2 புதிய தயாரிப்புகள்.

 ''முடுஞ்சு போச்சு கிளம்பு...கிளம்பு...'' ஹோண்டா ஆக்டிவாவுக்கு ஆப்பு வைக்க ஹீரோ ரெடி...!!!

டூயட், மேஸ்ட்ரோ ஆகிய 2 ஸ்கூட்டர்களிலும், 125 சிசி 4 ஸ்ட்ரோக் இன்ஜின் பொருத்தப்படவுள்ளது. இந்த இன்ஜினை முன்னதாக தனது டேர் 125 ஸ்கூட்டரிலேயே, ஹீரோ நிறுவனம் பயன்படுத்திவிட்டது. இந்த 125 சிசி இன்ஜின் , 6,750 ஆர்பிஎம்மில் அதிகபட்சமாக 8.7 பிஎச்பி பவரையும், 5,000 ஆர்பிஎம்மில் 10.2 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும்.

 ''முடுஞ்சு போச்சு கிளம்பு...கிளம்பு...'' ஹோண்டா ஆக்டிவாவுக்கு ஆப்பு வைக்க ஹீரோ ரெடி...!!!

டேர் 125 ஸ்கூட்டரின் இன்ஜின் 9.4 பிஎச்பி பவரையும், 9.8 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும். அதாவது டேர் 125 ஸ்கூட்டருடன் ஒப்பிடுகையில், டூயட், மேஸ்ட்ரோ 125 சிசி ஸ்கூட்டர்களின் பிஎச்பி பவர் குறைக்கப்படவுள்ளது. அதே நேரத்தில் டார்க் திறன் அதிகரிக்கப்படவுள்ளது.

 ''முடுஞ்சு போச்சு கிளம்பு...கிளம்பு...'' ஹோண்டா ஆக்டிவாவுக்கு ஆப்பு வைக்க ஹீரோ ரெடி...!!!

டூயட் 125, மேஸ்ட்ரோ 125 ஆகிய 2 ஸ்கூட்டர்களிலும், ஹீரோவின் i3S தொழில்நுட்பம் இருக்கும். ஒரு சில வினாடிகளுக்கு மேல், வாகனத்தின் இன்ஜின் தேவையில்லாமல் இயங்கி கொண்டிருந்தால், ஆட்டோமெட்டிக்காக இன்ஜினை ஆப் செய்யும் தொழில்நுட்பம்தான் i3S.

 ''முடுஞ்சு போச்சு கிளம்பு...கிளம்பு...'' ஹோண்டா ஆக்டிவாவுக்கு ஆப்பு வைக்க ஹீரோ ரெடி...!!!

ஹீரோ நிறுவனத்தின் பல பயணிகள் மோட்டார் சைக்கிள்களில் இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் ஸ்கூட்டர் செக்மெண்டில் பயன்படுத்த இருப்பது இதுவே முதல் முறை. இதன்மூலம் எரிபொருள் தேவையில்லாமல் வீணடிக்கப்படுவது தவிர்க்கப்படும். அத்துடன் வாகனத்தின் புகை உமிழ்வு குறைந்து, சுற்றுச்சூழலுக்கும் நன்மை பயக்கும்.

 ''முடுஞ்சு போச்சு கிளம்பு...கிளம்பு...'' ஹோண்டா ஆக்டிவாவுக்கு ஆப்பு வைக்க ஹீரோ ரெடி...!!!

ஹோண்டா நிறுவனத்தின் ஆக்டிவா ஸ்கூட்டர்தான் இந்தியாவில் அதிக அளவில் விற்பனையாகி வருகிறது. இந்த பட்டியலில், ஹீரோ நிறுவனத்தின் ஸ்பிளெண்டர்தான் பல ஆண்டுகளாக முதல் இடத்தில் இருந்து வந்தது. ஆனால் ஸ்பிளெண்டரை பின்னுக்கு தள்ளி, முதலிட அரியணையில் ஏறிய ஹோண்டா ஆக்டிவா, அந்த இடத்தை கெட்டியாக பிடித்து கொண்டது.

 ''முடுஞ்சு போச்சு கிளம்பு...கிளம்பு...'' ஹோண்டா ஆக்டிவாவுக்கு ஆப்பு வைக்க ஹீரோ ரெடி...!!!

அப்படி விற்பனையில் கம்பீர நடை போட்டு வரும் ஹோண்டா ஆக்டிவா 125 சிசி ஸ்கூட்டருக்கு நேரடி போட்டியாக, ஹீரோ நிறுவனத்தின் டூயட் 125, மேஸ்ட்ரோ 125 ஸ்கூட்டர்கள் திகழும். அதனை மனதில் வைத்துதான், இந்த 2 ஸ்கூட்டர்களையும், ஹீரோ நிறுவனம் களத்தில் இறக்கவுள்ளது.

 ''முடுஞ்சு போச்சு கிளம்பு...கிளம்பு...'' ஹோண்டா ஆக்டிவாவுக்கு ஆப்பு வைக்க ஹீரோ ரெடி...!!!

ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டரில், i3S போன்ற தொழில்நுட்பங்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ஹீரோ நிறுவனம் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளது. ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டருக்கு மட்டுமல்லாமல், சுசூகி ஏஸஸ் 125 ஸ்கூட்டருக்கும் கூட, டூயட், மேஸ்ட்ரோ 125 ஸ்கூட்டர்கள் விற்பனையில் கடும் சவால் அளிக்கும்.

 ''முடுஞ்சு போச்சு கிளம்பு...கிளம்பு...'' ஹோண்டா ஆக்டிவாவுக்கு ஆப்பு வைக்க ஹீரோ ரெடி...!!!

டூயட் 125, மேஸ்ட்ரோ 125 ஆகிய 2 ஸ்கூட்டர்களிலும், காம்பி-பிரேக்கிங் சிஸ்டம் நிலையான ஒன்றாக வழங்கப்படும். அதே நேரத்தில், முன்பக்க டிஸ்க் பிரேக் ஆப்ஷனலாக வழங்கப்படும்.

 ''முடுஞ்சு போச்சு கிளம்பு...கிளம்பு...'' ஹோண்டா ஆக்டிவாவுக்கு ஆப்பு வைக்க ஹீரோ ரெடி...!!!

இதுமட்டுமின்றி, மொபைல் சார்ஜ் செய்து கொள்ளும் வசதி, லக்கேஜ் வைக்கக்கூடிய பெட்டியில் விளக்கு, சைடு ஸ்டேண்ட் எடுக்காவிட்டால் எச்சரிக்கை செய்யும் இன்டிகேட்டர் உள்ளிட்ட வசதிகளும், டூயட் 125, மேஸ்ட்ரோ 125 ஸ்கூட்டர்களில் இடம்பெற்றிருக்கும்.

 ''முடுஞ்சு போச்சு கிளம்பு...கிளம்பு...'' ஹோண்டா ஆக்டிவாவுக்கு ஆப்பு வைக்க ஹீரோ ரெடி...!!!

எப்போது சர்வீஸ் செய்ய வேண்டும் என்பதை நினைவூட்டும் ஆப்ஷனும் இருக்கும். அத்துடன் 2 ஸ்கூட்டர்களிலும், எலக்ட்ரிக் ஸ்டார்ட் வசதி வழங்கப்படும். டூயட் 125, மேஸ்ட்ரோ 125 ஸ்கூட்டர்களில் இடம்பெறவுள்ள வசதிகளில் பெரும்பாலானவை ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டரில் இல்லவே இல்லை.

 ''முடுஞ்சு போச்சு கிளம்பு...கிளம்பு...'' ஹோண்டா ஆக்டிவாவுக்கு ஆப்பு வைக்க ஹீரோ ரெடி...!!!

சஸ்பென்ஷனை எடுத்து கொண்டால், டூயட் 125, மேஸ்ட்ரோ 125 ஆகிய 2 ஸ்கூட்டர்களிலும், டெலிஸ்கோபிக் ப்ரண்ட் ஃபோர்க்ஸ் நிலையானதாக இடம்பெற்றிருக்கும். அதே நேரத்தில் பின்பகுதியில் மோனோஷாக் யூனிட் வழங்கப்படவுள்ளது.

 ''முடுஞ்சு போச்சு கிளம்பு...கிளம்பு...'' ஹோண்டா ஆக்டிவாவுக்கு ஆப்பு வைக்க ஹீரோ ரெடி...!!!

டெலிஸ்கோபிக் ப்ரண்ட் ஃபோர்க்ஸ் இருப்பதால், குண்டும், குழியுமான சாலைகளில் கூட ஹாயாக பயணிக்கலாம். இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பெரும்பாலான ஆட்டோமெட்டிக் ஸ்கூட்டர்களில், இந்த வசதி பொதுவான ஒரு அம்சமாக உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 ''முடுஞ்சு போச்சு கிளம்பு...கிளம்பு...'' ஹோண்டா ஆக்டிவாவுக்கு ஆப்பு வைக்க ஹீரோ ரெடி...!!!

டூயட், மேஸ்ட்ரோ ஆகிய 2 ஸ்கூட்டர்களும் ஏற்கனவே 110 சிசி ஆப்ஷனில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. டூயட் 110 ரூ.47,250 முதல் ரூ.48,900 வரையிலும், மேஸ்ட்ரோ 110 ரூ.49,900 முதல் ரூ.51,300 வரையிலும் விற்பனையாகிறது.

 ''முடுஞ்சு போச்சு கிளம்பு...கிளம்பு...'' ஹோண்டா ஆக்டிவாவுக்கு ஆப்பு வைக்க ஹீரோ ரெடி...!!!

ஆனால் டூயட் 125, மேஸ்ட்ரோ 125 ஆகியவற்றின் விலை, அவற்றின் 110 சிசி விலையில் இருந்து ரூ.2 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது டூயட் 125 ஸ்கூட்டர் ரூ.49 ஆயிரம் முதலும், மேஸ்ட்ரோ 125 ரூ.53 ஆயிரம் முதலும் விற்பனை செய்யப்பட வாய்ப்புகள் உள்ளன (எக்ஸ் ஷோரூம், டெல்லி அடிப்படையில்).

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

Most Read Articles
மேலும்... #ஹீரோ
English summary
Hero Motocorp to launch Duet 125 & Maestro 125 automatic scooters as Honda Activa 125 rivals. read in tamil.
Story first published: Thursday, May 24, 2018, 15:14 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X