புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர் நாடு முழுவதும் விற்பனைக்கு கிடைக்கும்!!
ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர் பைக் தற்போது நாடு முழுவதும் விற்பனைக்கு கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர் பைக்கில் 199.6சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எ
ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர் பைக் தற்போது நாடு முழுவதும் விற்பனைக்கு கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. விலை உள்ளிட்ட முக்கிய விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

கடந்த மாதம் வட கிழக்கு மாநிலங்களில் புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர் பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, தற்போது நாடு முழுவதும் அனைத்துப் பகுதிகளிலும் புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர் பைக் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

வடகிழக்கு பிராந்தியத்தில் ரூ.88,000 எக்ஸ்ஷோரூம் விலையாக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், தற்போது புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர் பைக்கிற்கு ரூ.89,900 டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர் பைக் இளைஞர்களை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த செக்மென்ட்டில் போட்டியாளர்களைவிட குறைவான விலையில் வந்நதிருப்பதும் இந்த பைக்கிற்கு தனி வரவேற்பை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

200சிசி மாடல்களுடன் போட்டி போடுவது மட்டுமில்லாமல், விலை அடிப்படையில் பஜாஜ் பல்சர் என்எஸ் 160 உள்ளிட்ட மாடல்களுடன் விலை அடிப்படையிலும் போட்டி போடுகிறது. எனவே, இரு செக்மென்ட்டையும் மையமாக வைத்து ஹீரோ மோட்டோகார்ப் இந்த பைக்கை களமிறக்கி இருக்கிறது.

புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர் பைக்கில் 199.6சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 18.1 பிஎச்பி பவரையும், 17.1 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர் பைக்கில்ல எல்இடி ஹெட்லைட், எல்இடி டெயில் லைட்டுகள், அனலாக் - டிஜிட்டல் திரையுடன் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் கொடுக்கப்பட்டு இருப்பது வாடிக்கையாளர்களை கவரும் முக்கிய அம்சங்களாக இருக்கும்.

முன்புறத்தில் 37மிமீ டெலிஸ்கோப்பிக் சஸ்பென்ஷனும், பின்புறத்தில் 7 ஸ்டெப் அட்ஜெஸ்ட் வசதி கொண்ட மோனோ ஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டு இருக்கிறது. முன்சக்கரத்தில் 276மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் 220மிமீ டிஸ்க் பிரேக்கும் இடம்பெற்றிருக்கிறது. சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளது.

இந்த பைக்கில் 17 அங்குல அலாய் வீல்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. முன்சக்கரத்தில் 100 செக்ஷன் எம்ஆர்எஃப் டயரும், பின்புறத்தில் 130 செக்ஷன் எம்ஆர்எஃப் டயரும் பொருத்தப்பட்டுள்ளன. 12.5 லிட்டர் கொள்திறன் கொண்ட பெட்ரோல் டேங்க் உள்ளது. 148 கிலோ எடை கொண்டது.

பாந்தர் பிளாக்- கூல் சில்வர், கருப்பு- சிவப்பு, ஸ்போர்ட்ஸ் ரெட், சார்கோல் க்ரே- ஆரஞ்ச் மற்றும் டெக்னோ புளூ ஆகிய வண்ணங்களில் புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர் பைக் கிடைக்கும்.

புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர் பைக் பஜாஜ் பல்சர் 200என்எஸ், கேடிஎம் ட்யூக் 200, டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 2004வி ஆகிய பைக் மாடல்களுடன் போட்டி போடும். வடிவமைப்பு, வசதிகள், தொழில்நுட்பம் என அனைத்திலும் சிறப்பான மாடலாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








