புதிய ஹீரோ பேஷன் புரோ மற்றும் எக்ஸ்புரோ பைக்குகள் விற்பனைக்கு அறிமுகம்!

கூடுதல் சிறப்பம்சங்களுடன் புதிய ஹீரோ பேஷன் புரோ மற்றும் எக்ஸ்புரோ பைக் மாடல்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன.

By Saravana Rajan

புதிய ஹீரோ பேஷன் புரோ மற்றும் எக்ஸ்புரோ பைக்குகள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன. விரிவானத் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய ஹீரோ பேஷன் புரோ மற்றும் எக்ஸ்புரோ பைக்குகள் விற்பனைக்கு அறிமுகம்!

நாட்டின் மிகப்பெரிய இருசக்கர வாகன நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்திற்கு போட்டியாளர்களால் கடும் நெருக்கடி இருக்கிறது. இந்த சூழலில், வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில், தனது மோட்டார்சைக்கிள் மாடல்களை அவ்வப்போது மேம்படுத்தி அறிமுகம் செய்து வருகிறது. அந்த வரிசையில், தற்போது பேஷன் புரோ மற்றும் பேஷன் எக்ஸ் புரோ பைக்குகள் கூடுதல் சிறப்பம்சங்களுடன் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருக்கின்றன.

புதிய ஹீரோ பேஷன் புரோ

புதிய ஹீரோ பேஷன் புரோ

ஹீரோ பேஷன் புரோ பைக்கில் 11 லிட்டர் கொள்திறன் கொண்ட பெட்ரோல் டேங்க் மற்றும் எளிதாக திறக்கக்கூடிய ஃப்ளஷ் - டைப் பெட்ரோல் டேங்க் மூடி கொடுக்கப்பட்டு இருக்கிறது. டெயில் லைட் வடிவமைப்பிலும் மாறுதல் செய்யப்பட்டு இருக்கிறது.

புதிய ஹீரோ பேஷன் புரோ மற்றும் எக்ஸ்புரோ பைக்குகள் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய ஹீரோ பேஷன் புரோ பைக்கில் புதிய இன்ஸ்ட்ரமென்ட் க்ளஸ்ட்டர் அமைப்பு இடம்பெற்று இருக்கிறது. எரிபொருள் அளவு, ட்ரிப் மீட்டர் மற்றும் சைடு ஸ்டான்டு இன்டிகேட்டர் வசதிகள் உள்ளன. இந்த பைக் டிஸ்க் பிரேக் மற்றும் டிரம் பிரேக் மாடல்களில் கிடைக்கும்.

புதிய ஹீரோ பேஷன் புரோ மற்றும் எக்ஸ்புரோ பைக்குகள் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய பேஷன் புரோ பைக் ஸ்போர்ட்ஸ் ரெட், பிளாக் மோனோடோன், ஃபோர்ஸ்டு சில்வர், ஹெவி க்ரே மற்றும் ஃப்ராஸ்ட் புளூ ஆகிய 5 வண்ணங்களில் கிடைக்கும்.

 ஹீரோ பேஷன் எக்ஸ் புரோ

ஹீரோ பேஷன் எக்ஸ் புரோ

புதிய பேஷன் எக்ஸ்புரோ பைக் இளைஞர்களை கவரும் வகையில் சில கூடுதல் அம்சங்களை பெற்றிருக்கிறது. இந்த பைக்கில் புதிய எல்இடி டெயில் லைட்டுகளும், ஃபென்டரும் இடம்பெற்று இருக்கிறது. பேஷன் புரோ பைக்கில் இருக்கும் புதிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் அமைப்பு இடம்பெற்றிருக்கிறது. அதேநேரத்தில், பேஷன் புரோ பைக்கைவிட சிறிய பெட்ரோல் டேங்க் உள்ளது. ஆம், இந்த மாடலின் பெட்ரோல் டேங்க் கொள்திறன் 9.2 லிட்டர் மட்டுமே.

புதிய ஹீரோ பேஷன் புரோ மற்றும் எக்ஸ்புரோ பைக்குகள் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய பேஷன் எக்ஸ்புரோ பைக் 5 விதமான இரட்டை வண்ணக் கலவையில் கிடைக்கும். ஸ்போர்ட்ஸ் ரெட் என்ற சிவப்பு மற்றும் கருப்பு, கருப்பு மற்றும் சிவப்பு, கருப்பு மற்றும் நீலம், கருப்பு, சாம்பல் வண்ணம் மற்றும் சில்வர் ஆகிய வண்ணக் கலவைகளில் கிடைக்கும். எக்ஸ்புரோ பைக்கில் ட்யூப்லெஸ் டயர்கள் பொருத்தப்பட்டு இருப்பது கூடுதல் சிறப்பம்சமாக இருக்கிறது.

புதிய ஹீரோ பேஷன் புரோ மற்றும் எக்ஸ்புரோ பைக்குகள் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய ஹீரோ பேஷன் புரோ மற்றும் எக்ஸ்புரோ பைக்குகளில் பாரத் ஸ்டேஜ்-4 மாசு உமிழ்வு தர நிர்ணயம் கொண்ட 110சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக 9.3 பிஎச்பி பவரையும், 9 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் உள்ளது. 0- 60 கிமீ வேகத்தை 7.4 வினாடிகளில் தொட்டுவிடும். ஹீரோ ஐ3எஸ் தொழில்நுட்பம் இருப்பதால், அதிக எரிபொருள் சிக்கனத்தை பெற முடியும்.

புதிய ஹீரோ பேஷன் புரோ மற்றும் எக்ஸ்புரோ பைக்குகள் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய ஹீரோ பேஷன் புரோ பைக் ரூ.53,189 எக்ஸ்ஷோரூம் விலையிலும், எக்ஸ்புரோ பைக் ரூ.54,189 எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனைக்கு கிடைக்கும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, March 14, 2018, 17:32 [IST]
English summary
Hero Passion PRO & XPRO launched in India. The Hero Passion PRO & XPRO prices stand at Rs 53,189 and Rs 54,189 ex-showroom (Delhi), respectively.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+