புதிய ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 டி பைக் அறிமுகம்: படங்களுடன் தகவல்கள்!

இத்தாலியின் மிலன் நகரில் நடந்து வரும் சர்வதேச மோட்டார்சைக்கிள் கண்காட்சியில், ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 டி பைக் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட எக்ஸ்பல்ஸ் என்ற சாகச ரக மாட

இத்தாலியின் மிலன் நகரில் நடந்து வரும் சர்வதேச மோட்டார்சைக்கிள் கண்காட்சியில், ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 டி பைக் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கின் படங்கள், சிறப்பம்சங்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 டி பைக் அறிமுகம்: படங்களுடன் தகவல்கள்!

இந்த புதிய மோட்டார்சைக்கிள் டூரர் எனப்படும் நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்ற மாடலாக ஹீரோ மோட்டோகார்ப் தெரிவித்துள்ளது. சவுகரியமான இருக்கை அமைப்பு மற்றும் உடைமைகளை எடுத்துச் செல்வதற்கான வசதிகளை இந்த பைக் பெற்றிருக்கிறது.

புதிய ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 டி பைக் அறிமுகம்: படங்களுடன் தகவல்கள்!

கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட எக்ஸ்பல்ஸ் என்ற சாகச ரக மாடலை தழுவி டூரர் மாடலாக மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது. ஆனால், எக்ஸ்பல்ஸ் மாடலைவிட எக்ஸ்பல்ஸ் 200 டி மாடல் 30 மிமீ குறைவான கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டதாக இருக்கிறது. இந்த பைக்கில் 17 அங்குல சக்கரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

புதிய ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 டி பைக் அறிமுகம்: படங்களுடன் தகவல்கள்!

புதிய ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 டி பைக்கில் எல்இடி விளக்குகள், புளூடூத் இணைப்பு நுட்பம் கொண்ட டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், நேவிகேஷன் வசதி, சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கும். எம்ஆர்எஃப் ரேவ்ஸ் டயர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

புதிய ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 டி பைக் அறிமுகம்: படங்களுடன் தகவல்கள்!

கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட எக்ஸ்பல்ஸ் பைக்கில் இருந்த அதே 198சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின்தான் புதிய எக்ஸ்பல்ஸ் 200 டி மாடலிலும் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 18.1 பிஎச்பி பவரையும், 17.1 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். எனினும், எஞ்சின் ட்யூனிங்கில் மாறுபடும் வாய்ப்புள்ளது.

புதிய ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 டி பைக் அறிமுகம்: படங்களுடன் தகவல்கள்!

புதிய ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 டி மாடலானது கஃபே ரேஸர், டெசர்ட், ஸ்க்ராம்ப்ளர் மற்றும் ஃப்ளாட்- டிராக் ஆகிய வேறு புதிய பரிணாமங்களிலான மாடல்களும் ஐக்மா கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன. எனவே, அடுத்தடுத்து பல புதிய ரக மாடல்களை ஹீரோ நிறுவனத்திடமிருந்து எதிர்பார்க்கலாம்.

புதிய ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 டி பைக் அறிமுகம்: படங்களுடன் தகவல்கள்!

இதனிடையே, கடந்த ஆண்டு ஐக்மா கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்ட ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 சாகச ரக பைக் அடுத்த மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரூ.1.5 லட்சத்தில் எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 டி மாடலானது அடுத்த ஆண்டு பிற்பாதியில் எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, November 7, 2018, 15:57 [IST]
English summary
EICMA 2018: Hero MotoCorp has unveiled the new Xpulse 200 T at EICMA Motorcycle Show in Milan, Italy. The new Hero XPulse 200 T will be launched alongside the standard model in the near future. While the standard model is focussed on off-roading, the Hero XPulse 200 T is more suited for touring.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+