ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர் பைக்கின் விலை வெளியீடு: குறைவான விலை 200சிசி மாடல்!!

போட்டியாளர்களைவிட மிக குறைவான விலையில் புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர் பைக் விற்பனைக்கு வர இருக்கிறது. ஆம். புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர் பைக் ரூ.88,000 எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

By Saravana Rajan

புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர் பைக்கின் விலை விபரம் வெளியாகி இருக்கிறது. 200சிசி பைக்குகளில் மிக குறைவான விலை மாடலாக வரும் இந்த பைக் குறித்த முழுமையான விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர் பைக்கின் விலை வெளியீடு: குறைவான விலை 200சிசி மாடல்!!

நாட்டின் மிகப்பெரிய பைக் உற்பத்தி நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் விரைவில் எக்ஸ்ட்ரீம் 200ஆர் பைக்கை விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது. இந்த பைக்கின் அறிமுகம் குறித்து ஹீரோ பிரியர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர் பைக்கின் விலை வெளியீடு: குறைவான விலை 200சிசி மாடல்!!

அந்த எதிர்பார்ப்பை பொய்க்காத வகையில், போட்டியாளர்களைவிட மிக குறைவான விலையில் புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர் பைக் விற்பனைக்கு வர இருக்கிறது. ஆம். புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர் பைக் ரூ.88,000 எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இந்த தகவல் ஹீரோ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர் பைக்கின் விலை வெளியீடு: குறைவான விலை 200சிசி மாடல்!!

எனினும், அருணாச்சல பிரதேசம், அஸ்ஸாம், மேகாலயா, மிஸோரம், மணிப்பூர், திரிபுரா, நாகாலாந்து மற்றும் மேற்கு வங்கம் ஆகிய வடகிழக்கு மாநிலங்களுக்கான எக்ஸ்ஷோரூம் விலையாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. நாட்டின் பிற மாநிலங்களிலும் இதே விலைக்கு செல்லுமா அல்லது மாறுதல் இருக்குமா என்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர் பைக்கின் விலை வெளியீடு: குறைவான விலை 200சிசி மாடல்!!

தற்போதைய விலையின் அடிப்படையில் பார்க்கப்போனால், 200சிசி ரகத்தில் மிக குறைவான விலை பைக் மாடலாக புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர் பைக் இருக்கிறது. 200சிசி மார்க்கெட்டில் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக் ரூ.1.03 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும், பஜாஜ் பல்சர் என்எஸ்200 பைக் ரூ.1.04 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர் பைக்கின் விலை வெளியீடு: குறைவான விலை 200சிசி மாடல்!!

மேலும், புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர் பைக்கின் விலை தற்போது மார்க்கெட்டில் உள்ள சில 160சிசி பைக்குகளுக்கும் கடும் போட்டியை கொடுக்கலாம். டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக் ரூ.84,348 எக்ஸ்ஷோரூம் விலையிலிருந்து ரூ.94,348 வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது.

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர் பைக்கின் விலை வெளியீடு: குறைவான விலை 200சிசி மாடல்!!

அதேபோன்று, பஜாஜ் பல்சர் என்எஸ் 160 பைக் ரூ.85,868 எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது. இதனால், 160சிசி மற்றும் 200சிசி என இரண்டு ரக பைக் மாடல்களுக்கும் இந்த புதிய பைக் போட்டியை கொடுக்கும் வாய்ப்பு இருக்கிறது.

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர் பைக்கின் விலை வெளியீடு: குறைவான விலை 200சிசி மாடல்!!

புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர் பைக்கின் டெலிவிரி குறித்த தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. எனவே, விரைவில் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு கொண்டு வருவதற்கு ஹீரோ மோட்டோகார்ப் திட்டமிட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர் பைக்கின் விலை வெளியீடு: குறைவான விலை 200சிசி மாடல்!!

புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர் பைக்கில் 199.6சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 18.1 பிஎச்பி பவரையும், 17.1 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர் பைக்கின் விலை வெளியீடு: குறைவான விலை 200சிசி மாடல்!!

இந்த பைக்கில் எல்இடி ஹெட்லைட் மற்றும் எல்இடி டெயில் லைட்டுகள் பொருத்தப்பட்டுள்ளன. அனலாக் - டிஜிட்டல் திரையுடன் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் இடம்பெற்றுள்ளது.

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர் பைக்கின் விலை வெளியீடு: குறைவான விலை 200சிசி மாடல்!!

இந்த பைக்கில் முன்புறத்தில் 37மிமீ டெலிஸ்கோப்பிக் சஸ்பென்ஷனும், பின்புறத்தில் 7 ஸ்டெப் அட்ஜெஸ்ட் வசதி கொண்ட மோனோ ஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டு இருக்கிறது. முன்சக்கரத்தில் 276மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் 220மிமீ டிஸ்க் பிரேக்கும் இடம்பெற்றிருக்கிறது. சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளது.

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர் பைக்கின் விலை வெளியீடு: குறைவான விலை 200சிசி மாடல்!!

இந்த பைக்கில் 17 அங்குல அலாய் வீல்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. முன்சக்கரத்தில் 100 செக்ஷன் எம்ஆர்எஃப் டயரும், பின்புறத்தில் 130 செக்ஷன் எம்ஆர்எஃப் டயரும் பொருத்தப்பட்டுள்ளன. இந்த பைக்கில் 12.5 லிட்டர் கொள்திறன் கொண்ட பெட்ரோல் டேங்க் உள்ளது. 148 கிலோ எடை கொண்டது.

More from DriveSpark

Article Published On: Friday, July 6, 2018, 10:34 [IST]
English summary
Hero Xtreme 200R priced at INR 88,000 in India
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+